விதை செடியாக தயங்கவில்லை!
செடி மரமாக
தயங்கவில்லை!
மொட்டு மலராக தயங்கவில்லை!
காய் கனியாகி தயங்கவில்லை!
மேகம் மழையாக தயங்கவில்லை!
காற்று தென்றலாக
தயங்கவில்லை!
அமாவாசை பவுர்ணமியாக
தயங்கவில்லை!
இரவு பகலாக
தயங்கவில்லை!
கற்கள் சிற்பங்களாக தயங்கவில்லை!
கரு உருவாக
தயங்கவில்லை!
இறைவியே நீ மட்டும் ஏன் எல்லாவற்றிற்கும்
த……ய….ங்…கு…. கி… றா…ய்!
தயக்கம் தவிர்!
துணிந்து நில்!
முயற்சி செய்!
முடியாதது எதுவும் இல்லை!
இத்தரணி காத்திருக்கிறது !
நீ வெற்றி வாகை சூட!
வையகம் வாழ்த்தும் நீனது வெற்றியை!