தவறாக சென்ற பல வழிகள் தான் சரியான பாதையை காட்டும்.
தோல்வியை கண்டு அச்சப்பட தேவையில்லை,
உன் வெற்றியை நீ அடைய வழி காட்டுவதே அந்த தோல்விகள் தான்.
உயிரற்ற மீனோ நீரின் பாதையில் செல்லும் ,
உயிருள்ள மீன் தனக்கான தனி பாதையை உருவாக்கும்.
உயிரற்ற மீனாய் வாழ்க்கையின் போக்கில் செல்வதை விட
உனக்கான வாழ்வை நீயே உருவாக்கு.,
மீனாய் அல்ல திமிங்கலமாய் திமிறி எழு.
உன் ஒற்றை சத்தத்தில் உலகம் உன்னை திரும்பி பார்க்கட்டும்.
பிடரியை உதறும் சிங்கமாக,
தும்பிக்கையை உயர்த்தும் யானையாக,
உன் நம்பிக்கையை உயர்திவா,
நாளை உனக்காக விடியும்.
– ம.வி

