கவிதை: தொப்புள் சொந்தம் – Dr ஜலீலா முஸம்மில்

கவிதை: தொப்புள் சொந்தம் – Dr ஜலீலா முஸம்மில்

❤️❤️❤️
உயிர்க்
கொடியில்
நல்ல மரங்களை
உருவாக்குபவள்
தாய்தான்
❤️❤️❤️
தொப்புள் சொந்தம்
சுடுகாடு தாண்டி
சொர்க்கம் வரைக்கும்
❤️❤️❤️
தொப்புள் கொடியறுத்து
கருவறை கழன்ற
உன் வலியை
உணர்ந்தேன்
நான்
தாயான பொழுதில்
❤️❤️❤️
புனிதம் என்ற சொல்லுக்குப்
பூர்வீக சொந்தக்காரி
நீதான்
❤️❤️❤️
பிறவியெடுத்தலின்
முதன்மை
மேன்மை
உன்னால் தான்
❤️❤️❤️
என் முதல் மொழி நீதான்
மொழிக்கு முதலான ஆசான்
நீதான்
❤️❤️❤️
இரத்தத்தினால்
இதயத்தில்
அன்பெழுதுவாள்
❤️❤️❤️
இரு கண்களில்
கருணையின் கடலைக்
காட்சிப்படுத்துபவள்
❤️❤️❤️
எல்லையற்ற
தன்னலமற்ற
தார்மீக
நேசத்தின் சொந்தம்
தொப்புள் சொந்தம்
❤️❤️❤️

 

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *