கவிதை : உள்ளங்கை ரேகையாய் - ஜலீலா முஸம்மில் kavithai ; ullangai regayai - jaleela musammil
கவிதை : உள்ளங்கை ரேகையாய் - ஜலீலா முஸம்மில் kavithai ; ullangai regayai - jaleela musammil
உள்ளங்கை ரேகையாய்…
உள்ளார்ந்த மௌனத்தில்
உதிரிப் பூக்களாகும்
உன் நினைவுகள்
மெல்லிய நேசவாசம் கொண்டு
மேனி தழுவிப் பின்
மேகந்தாண்டிப் பரவும்
நிலவை வசீகரம் செய்து
நெஞ்சம் நெகிழ்த்தும்
விண்மீன்களில் கவிதை நெய்து
பிரபஞ்சம் போர்த்தும்

உள்ளார்ந்த மௌனத்தில்
உன் ஸ்நேகம்
அத்துணை அடர்ந்தது
அதீதத்தில் அன்பு வளர்ப்பது
ஆயினும்
உள்ளங்கைக்குள்
ரேகையாய் ஒளிந்தும்
கொள்வது!

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *