அன்பே உந்தன் கண்களால் என்னை ஆரத்தழுவிடு
ஆசையாய் அணைப்பேன் நீ அம்மா என்று அழைத்திடு
இனிமையாய் இசைப்பேன் நீ இரவில் உரங்கிடு
ஈர மனதோடு உதவிட யார்க்கும் நீ இரங்கிடு
உன்னைக் காத்திடவே உலகினில் என் வேட்கை
ஊற்றுபோல் தோன்றினாய் நீதானே என் வாழ்க்கை
என்றும் பிரியாது உன்னோடு வீழாமல் வாழ்ந்திடவே
ஏழு ஜென்மம் போதாது என் தவப் புதல்வியே
ஐந்தெழுத்து அரசனையும் நீ ஆட்சி செய்வாய்
ஒவ்வொரு நொடியும் உனக்காக இனி உன்னோடும்
ஓயாமல் உழைப்பேனே உனக்காக அன்றாடம்
ஒளடதமாம் உன் அமுத முத்தம் அளப்பரியது
அஃ து ஒன்றே இப்பூவுலகில் இனி எனக்குரியது

