என் வார்த்தைகள் நிலத்தில் சிந்தினால்
வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்
அந்திமயங்கும் வேளை அது
தனியொரு கூடு தேடாது
வெண்முருங்கைப்பூக்கள் மீது அமர்ந்தால்
உதிரா ஓவியமாகிவிடும்
ரோஜாவின் அழகை நாடாது
காற்று வெள்ளத்தில் நீந்தி திளைத்து
காலநதிமீது பூவாய் மிதக்கும்
செம்பருத்தி கிளைகளில் அமர்ந்து பின் பறக்கும்
சற்றைக்கெல்லாம் வண்ணத்துப்பூச்சியின் சாயலில்
அங்கே பூக்கள் பூத்து குலுங்கிக்கொண்டிருக்கும்
மிக்க நன்றி தோழர்