கவிதை : வீரவணக்கம் செலுத்துவோம் - கு.தென்னவன் kavithai : veeravanakkam seluthuvom - ku.thennavan

கவிதை : வீரவணக்கம் செலுத்துவோம் – கு.தென்னவன்

வெண்மணியில்
எரிந்த உயிர்த் தீ
குமுறுகிறது
எரிமலையாய்
கண் மணிக்குள் இன்று

சாதியத்தின்
நீர் ஊற்றில்
தீண்டாமைக் குளியல்
நீந்தி மகிழ்ந்தது
மனிதத்தை தின்று

சாத்திரத்தின்
மூத்திரத்தை
ஆத்திகத்தின்
வாத்தியத்தை
அறுத்திடுவோம் கொன்று

காட்டுத்தீ
அணைத்திடலாம்
அடிமைப்
பூட்டு விலங்கை
உடைத்திடலாம் சாதி
தீட்டு எனும் கருத்து
கருகும் நாள் என்று

மூட்டு நெருப்பு
போட்டுக் கொளுத்து
கூட்டுப் புழுவாய்
பாசிசம் அழித்து
பேசட்டும் சமத்துவம்
நாட்டில் வென்று

வீட்டிற்கொரு
விளக்கேற்றி
வீரவணக்கம்
செலுத்துவோம் அன்று

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *