kavithai: vettri muththaai vazangidu - kovi.baala.murugu கவிதை: வெற்றி முத்தாய் வழங்கிடு - கோவி.பால.முருகு
kavithai: vettri muththaai vazangidu - kovi.baala.murugu கவிதை: வெற்றி முத்தாய் வழங்கிடு - கோவி.பால.முருகு

கவிதை: வெற்றி முத்தாய் வழங்கிடு – கோவி.பால.முருகு

காடனை மாடனைக் காளியைக் கூளியைக்
கண்டு வணங்கிடுவார்-அறிவு
காணச் சுணங்கிடுவார்!
வீட்டிலும் நாட்டிலும் வேதனை மிக்குற
வீதி அழுதிடுவார்-விதி
தன்னைத் தொழுதிடுவார்!

பட்டியில் தொட்டியில் பாமர ராய்தினம்
பாழும் குழிபடுவார்-கொடுமை
வாழ வழிவிடுவார்!
காட்டிலே மேட்டிலே கடுமை உழைப்பிலே
காலங் கழித்திடுவார்-பசியில்
மேலும் உழைத்திடுவார்!

கெட்டதும் பட்டதும் கிட்டிய விதியென
கேளா திருந்திடுவார்-அச்சக்
கீழ்மை பொருந்திடுவார்!
பட்டையும் கொட்டையும் பாரில் நலம்பெற
பாதம் தடவிடுவார்-தன்
மானம் கெடவிடுவார்!

நாட்டிலும் வீட்டிலும் நன்மைகள் கிட்டிட
நாளும் உழைத்திடுவாய்-அதால்
மேலும் பிழைத்திடுவாய்!
கெட்டவர் கீழுற அட்டைகள் பாழுற
சத்தாய் முழக்கமிடு-வெற்றி
முத்தாய் வழங்கிவிடு!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *