1) படித்துறையில் சந்தித்த
இரண்டு பறவைகள்
மாறி சென்ற பாதையில்
விட்டு வந்த நினைவுகளை
அசை போடுகின்றன.
2) பல வண்ண மலர்களில்
அலங்கரிக்கபட்டு
செல்கிறது “ஒரே சாதி”
தலைவரின் இறுதி ஊர்வலம்.
3) அடர்ந்த இருளில்
பயணிக்கின்றன
வழித்தடம் மறக்காத
காட்டு யானைகள்.
4) உப்பிய தொப்பையை
ஒற்றை விரலில்
உடைத்து பார்த்தேன்.
கன்னக்குழியாய் சிரித்தது பூரி.
5) தள்ளுவண்டியில் அமைந்த
கோபுரத்தில் இருந்து
அழைக்கிறது என்னை
சூடான “வேர்க்கடலை”