kavithaigal by na ka thuraivan கவிதைகள் : ந க துறைவன் கவிதைகள்-ந க துறைவன்
kavithaigal by na ka thuraivan கவிதைகள் : ந க துறைவன் கவிதைகள்-ந க துறைவன்

கவிதைகள்-ந க துறைவன்

 

என்னோடு வாழ்கிறாள்
என்றென்றும் உதிரமாய்
உயிராய் அம்மா.

*******

மரணப் பூராகக்
காட்சியளிக்கிறது
மணிப்பூர்.

*******
திக்கு முக்காடும் மனசு
ஆசையாய் வாங்கிய பொருட்கள்
சின்ன பையில் அடக்கம்.

*******
அவமானப் படுத்துவோர்
வேறு யாரிடமேனும்
அவமானப் படுவார் ஒருநாள்.

*******
மாநகராட்சி குப்பை மேட்டில்
காகிதம் பொறுக்கும் பெண்
குரைத்து வருகிறது நாய் 🐕

*******
அழகு காதல் வசம்
பிரேமை மனம் வசம்
உணர்வு சிருங்கார பரவசம்.

*******
தெருக்கள் சுற்றி வரும் பகலில்
வெப்பம்  தாங்காமல்
மரத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மாடு.

*******
பெய்தது ஆலங்கட்டி மழை
பொறுக்கி எடுக்க முயன்றான்
கைவிட்டு நழுவும் ஐஸ் கட்டிகள்.

*******
மலைப் பாதை இருமருங்கும்
மூலிகை செடிகள் வாசம்
மெதுவாக இயங்கியது என் சுவாசம்.

*******

வயலை விற்று
வீடு வாங்கியதால் வருகிறது
வாடகை வருமானம்.

*******

ந க துறைவன் வேலூர்
செல் எண்: 9442234822.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *