கவிதைகள் என்பார்கள்

அறுபட்ட கழுத்துடன்
இருக்கும்
ஒரு பட்டாம்பூச்சிக்கு
நத்தையின் ஓடு
முளைக்கிறது
அது
நகர்ந்து கொண்டாவது
வாழும் என.

**********
சொர்க்கத்தைப்
பற்றி
கவலையில்லை இனி
நரகத்தை
பற்றியும் தான்.
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அதற்கு மேல் என்ன.

********
ஒரு பறவைக்குப் பசி
அதன் சிறகுகள் உடைந்திருக்கின்றன
நீங்கள் எறியும்
நெல்மணி
அதன் பசிக்கு
தூரமாய் உள்ளது.

*******
தீ நிறத்தில்
ஒரு பழம்.
ஒரு பறவைஅதைக் கொத்திவிட
அதன் அலகு
தீப் பற்றியது.

********
சுடுகாட்டில்
ஒரு வீணை.
யாரோ இசைக்கிறார்கள்.
எல்லாத் திசைப் பக்கமும்
தேடிப் பார்த்தேன்
பூக்கள் உதிர்ந்திருந்த
கல்லறையின்
கீழிருந்து
அதிர்ந்துக்கொண்டிருந்தது.
தோண்டிப் பார்த்தேன்
நரம்புகள்
அறுந்து போன
ஒரு வீணை
புதைந்து
கிடந்தது.

*********
பறவை ஆவதெல்லாம்
அவ்வளவு சுலபமில்லை
அதற்கு,
ஒரு வானமும்,
ஒரு வேடனும் வேண்டும்.

– மு தனஞ்செழியன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



5 thoughts on “மு. தனஞ்செழியனின் கவிதைகள்”
  1. ஒவ்வொரு வரிகளும் அத்தனை அழகாக…வாழ்த்துகள் தோழர்👌💐💐💐

  2. கவிநயமிக்க கவிதைகள் சிறப்பு தோழர்.💐🎉

    1. அருமை தோழர்,
      ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது,
      வாழ்த்துகள் தோழர்

  3. அருமை தோழரே! மேலும் சிறந்த படைப்புக்களை தந்திட வாழ்த்துக்கள். 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *