1.
பல இரவுகளை தூக்கியெறிந்து நிற்கிறது என் தூக்கம்
நீயில்லாமல்
நின் நினைவில்லை
சாகாமல்
நிச்சயம் என்னைப்போல்
இருக்கக்கூடாது உனக்கும்
கண் மைக்கும் காதுமடலுக்கும்
வர்ணம் தீட்டியே என்னை
கவிஞன் ஆக்கியவள் நீ
உன் பார்வைக்கு பதிலுரைக்கவும்
புன்னகையில் விழுந்து மடியாமலும்
மீண்டு வந்த ஆட்கள் உண்டா
இப்படியான வேளையில்
கடல் அலை சீற்றத்தை போல்
பேரழிவாய் வந்தது நம் பிரிவு
வருடங்கள் மாறினாலும்
வயதுகள் கூடினாலும்
நரைவிழாமலே இருக்கிறது
நம் காதல்
ஆண்டுதோறும் வந்து நிற்கிறேன்
உன் பாதங்கள் பிரிந்து சென்ற
பாதை நோக்கி
இன்னொரு ஆழிப்பேரலை
வந்துவிடாதா நம்
பிரிவினை சேர்த்துவைக்க
2.
தலைப்புச்செய்திகள் ஆகலாம்
தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிக்கலாம்
கட்சிகளின் வெற்று அறிக்கையும் கண்டன உரையும்
காது துளைக்கலாம்
நடவடிக்கை எடுப்பதாக நாளை கழிக்கலாம்
நாட்டையே பரபரப்பாக்கலாம்
எல்லாம்
அடுத்த செய்தி வரும் வரைதான்
எதுவும் மாறவில்லை இங்கு
நினைவில் கொள்ளுங்கள்
அந்த அடுத்த செய்தி
நீங்காளாகலாம்
அப்பொழுது புரியும்
எங்கள் துயரும்
துடிக்கும் வலியும்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Super nice 🎊🎊🎊💐💐🌷🌷