பிறை முகத்துச் சொற்கள்
—————————– ————–
பெருங்கடலின் நடுவே
வெகு நாட்களாய் நீ–
உச்சரிக்காப் படாத சொற்கள்
ஈரக்காற்றோடும்
சிதறும் நீரிலும் கலந்து ஒலிக்கின்றன.
அதிலும்–
கடல் பறவை ஒன்று
உதிர்க்கிறது உன் சொற்களை…
ஆயினும்
ஒற்றைச் சொல் மட்டும்
அழியாது நிற்கிறது என்றும்
—————————–
பெருங்கடலின் நடுவே
வெகு நாட்களாய் நீ–
உச்சரிக்காப் படாத சொற்கள்
ஈரக்காற்றோடும்
சிதறும் நீரிலும் கலந்து ஒலிக்கின்றன.
அதிலும்–
கடல் பறவை ஒன்று
உதிர்க்கிறது உன் சொற்களை…
சொற்களால் கட்டப்பட்ட வாழ்விலும்
வாழ்க்கை முழுவதும் நிறைக்கும் சொற்களும்
உனக்கானதும் எனக்கானதும்
நமக்கானதும் என
ஆயினும்
ஒற்றைச் சொல் மட்டும்
உனக்கானதாய்…
பிறையை ரசித்துக் கொண்டே
கடக்கிறேன் கடலை..
பிறைகளை கொண்ட இரவுகள்
உன் சொற்களை சுமந்தே வருகின்றன
சுமக்க முடியாத சொற்களால்
சிலசமயம் பிறைகள் கரைகின்றன
கடலாடிக் கிடக்கின்றன நம் சொற்கள்
—–கவிவாணன்

