கடலாடி..கடலாடி..களித்ததுப்போதும்
கடல் அழுக்காகிப்போனது
எஃகு ஆலை சமைப்போம்
கடல் நீரையும் கூவமென முரசுரைப்போம்!

எந்தக் கேள்வியையும்
எந்த எதிர்வினையையும்
எவரும் செய்யக்கூடாது

எல்லாச் சட்டங்களையும்
வைரஸ் வரவை வைத்து
முடித்துக்காட்டுவோம்..

இந்திய நிலங்கள்
இந்தியனுக்கு இல்லை என்பதே
எங்களின் —
குறிக்கோள் அதுவே– எங்கள்

செங்கோல்

அடுத்த தலைமுறைகள்
என்ன செய்வார்கள்
கவலை வேண்டாம்

நான் ஒரு விவசாயி
நான் ஒரு தேனீர் கடைக்காரன்

சாமானியர்களின் சாவை
சரிவிகித்த்தில் பார்த்துக்கொள்கிறோம்

ஆதலால்

வீட்டின் முன் வேல் வைத்து
கந்த சஷ்டி கவசம் பாடுங்கள்

– கவிவாணன்


One thought on “கவிதை: வேளாண்மை மண்டலமாக அறிவிப்போம்! — கவிவாணன்”
  1. Everything is very open and very clear explanation of issues. was truly information. Your website is very useful. Thanks for sharing. Constantia Jaime Novelia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *