கவிவாணன் கவிதைநான் செய்த தவறை
பிறரும் செய்வதாயின்
நான் செய்த தவறென்று
ஏதும் இல்லை.

பிறரின் தவறுகளை
நானும் செய்திடின்
பிறர் செய்த தவறுகள்
என்னுடையவையாகும்

நழுவிப் போய் விழும்
சொற்களில் இருந்து
அவர் அவர்களுக்கான
பிழைப்பின் சொற்களை
சேமித்துக் கொள்கிறார்கள்

சொற்களை சுமப்பதிலிருந்தே..
சொற்களை பகைமுரணாக ஆக்குவதிலிருந்தே..
சொற்களை பேருண்மையை மீட்சி யாக்குவதிலிருந்தே..
சொற்களை பேரன்பின் நீட்சி யாக்குவதிலிருந்தே..

சொற்களின் தேவையும்
சொற்களின் உணர்வின் மொழிகளும்

பல்லிடுக்கில் வைத்துக் கொள்ளும் சொற்களும்
மனப் பெருவெளி எங்கும்
விரவிச் செழித்துக் கிடக்கும் சொற்களும்.

ஏதோ ஒரு வினையைப் பூரணமாகப் பரிசளிக்கின்றன
அந்த வினையை நோக்கியே
பதிந்து கிடக்கிறது மனித சுவடுகள்

கவிவாணன்