கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 11 – நா.வே.அருள்வயல் முகம்
***************

இந்தியாவின்
வரைபடம்
விவசாயி முகம்!

அனைத்துக் கரும்புள்ளி செம்புள்ளிகளும்
காவி நிறமாகக் காட்சியளிக்கின்றன.

அதிகாரத்தின் கண்ணாடியில்
முகம் பார்க்க முடியவில்லை.

நிலம் அவனது மூளை
நிலம் அவனது நிணம்
நிலம் அவனது உயிர்
நிலம் அவனது உடல்
நிலம் அவனுக்குச் சூரிய சந்திரர்
நிலம் அவனுக்கு வானும் மண்ணும்
நிலம் அவனுக்கு பூமியும் புகழும்
நிலம் அவனுக்குக் காலமும் வெளியும்
நிலம் அவனுக்கு மழையும் வெயிலும்
நிலம் அவனுக்கு மலரும் சருகும்
நிலம் அவனுக்கு முகமும் அகமும்
நிலம் அவனுக்கு மந்திரமும் எந்திரமும்
நிலம்தான் அவன்
அவன்தான் நிலம்
எலும்புகளால் ஆன அவனது கல்லறை பூமியிலும்
மரங்கள் பூத்துக் குலுங்கும்
வனங்கள் வாழ்வாய் விளங்கும்.

அணுவைப் போன்றவன் விவசாயி!
பிளந்தால்
பேரழிவு!
சவப்பெட்டியில் அடைத்தாலும்
முளைவிடும்
உழவனின் இதயம்

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)