கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்சங்கு…திக்ரி…இந்தியா!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு விவசாயியின் தலைப்பாகை
தேசியக் கொடியைப் போலவே புனிதமானது
ஏனெனில் அவனது உடல்
தன்மானக் கம்பம்!
கொடிக்கயிறு…
முறுக்கேறிய நடுமுதுகு நரம்பு!!

கொடித்துணியோ
அவனது உழைப்பைப் போலவே
பட்டொளி வீசிப் பறக்கக் கூடியது.

அவன் கம்பத்தின் கீழ்தான்
அனைவரும் நிற்கின்றோம்.

கண்ணீரும் வியர்வையும்
கலந்திருக்கும் தேசியக் கொடியில்
கொடிகாத்த குமரனின் குருதியும் உறைந்திருக்கிறது

சர்வாதிகாரியின் சங்கீதம்
எவ்வளவு பெரிய மேடையில் நிகழ்த்தப்பட்டாலும்
சத்தியத்தின் மெல்லிசையாக மாறுவதேயில்லை

மகாகவியின் வாக்கு பொய்ப்பதில்லை
மன்னனை வரவேற்கப் பாடியபோதும்
ஜன கண மன
ஜனங்களின் சங்கீதமாக ஜனித்துவிடுகிறது

ஒரு போலி மன்னனுடன் போரிடும்
விடுதலை வீரர்களின் வெற்றி
நிச்சயிக்கப்பட்டதுதான்!
ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!!

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)