ஊருக்கு ஊர் நுழைகிறான்
உடையெல்லாம் தந்திரம் தைத்த
உள்ளூர் மந்திரவாதி
ஊருக்குள் கூடாரமடித்து
முட்டைக்குள் குட்டிச்சாத்தானை
மோதி மோதி அழைக்கிறான்.
பாய்ந்து எடுப்பது போல்
பாவனைகள் செய்து செய்து
பாசாங்காகத் திரும்பியதும்
அவன்
மொழியின் திருகலில்
கூடாரத்து மூலையிலிருக்கும்
முட்டை
குதித்துக் குதித்து ஆடும்.
இத்தனை காலமும்
பாம்பு பிடிக்காத கீரியை
இன்றைக்கும்
ரத்த வாந்தி பயத்துடன்
ரசிக்கிற கூட்டம்போல்…
வேடிக்கை பார்க்கவென்றே
வெறும் கூட்டம் காத்திருக்கும்
அதற்கு
விடுதலை காலம் கூட
ஒரு வேடிக்கைதான்.
மை வைச்ச முட்டைக்குள்ள
குட்டிச்சாத்தான் வருமென்று
கூட்டம் காத்திருக்கும்!
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.