தோழர் ஆயிஷா இரா. நடராசன் அவர்கள் சிறார் இலக்கியத்தில் ஆகச்சிறந்த படைப்புகளை வழங்கியவர். அவரின் இந்தக் ‘கழுதை(கதை) வண்டி’ அடுத்த மைல்கல். கதைகள் தான் என்றாலும் நிறைய வரலாற்றுத் தரவுகளுடன் கதை வண்டி பயணிப்பது மிகச்சிறப்பு. இந்நூலில் 12 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் நம் வாழ்வோடு பயணித்த, பயணித்துக் கொண்டிருக்கும் வாழ்வியலை மிக அழகாக சொல்லிச் செல்லும்.
குழந்தைகளின் கதை சொல்லும் ஆற்றலை நாம் வளர்த்தெடுக்க வேண்டியது மிக அவசியம் என்பதை கதைகளும், அணிந்துரை வழங்கிய பெருமக்களும் குறிப்பாக ஆளுமை பாவண்ணன் அவர்களின் அணிந்துரையும் குழந்தைகளுடன் நாம் பயணிக்க வேண்டும் என்பதையே மிக அழகாக உணர்த்தும்.
எழுத்து நடையும், கதை ஓட்டமும், ஓவியங்களும் விரைவில் நம்மை கதையினுள் இழுத்துச் செல்லும்.
‘பூக்களில் சிறந்த பூ?;
ஒளியில் சிறந்தது?;
நீரில் சிறந்தது?;
தூக்கத்தில் இனிமையானது எது?’
இவற்றிற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமா;
கழுதையும், வண்டியும், வண்டியை ஓட்டும் மனிதனும் நிறைய கதைகளுடன் உலா வருவதை அறிய வேண்டுமா; கழுதை வண்டி கதை வண்டி ஆன கதையை அறிய ஆவலா; பயணம் முடிவுற்றதா அல்லது தொடர்கிறதா என்பதை அறிய ஆவலா
வாருங்கள் குழந்தைகளே நம்மை 12 கதைகளுடன் இழுத்துச் செல்லும் கதைச் சொல்லி வண்டியை வாசிக்க இழுத்துச் செல்வோம்.
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் குழந்தைகளுக்காக அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டும்.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
நூலின் தகவல்கள்
நூல் : கழுதை வண்டி
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 44 2433 2924 https://thamizhbooks.com/product/kazuthai-vandi/
ஆண்டு : டிசம்பர் 2023
விலை : ரூ. 100
எழுதியவர்
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.