Kazhuthaikku kavithai கழுதைக்கு கவிதை

கழுதைக்குக் கவிதை – மு.தனஞ்செழியன்



அன்பே கழுதையே,
நாளை உனக்கும் எனக்கும் திருமணம்
மடையர்களால்
மழை வர வேண்டுமென்று.
உன்னையும் என்னையும் சேர்த்து வைக்கும் ஊர்
காதலர்களை மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை ஏனோ
எல்லாம் ஆணவக்கொலை தானோ..
திருமணத்திற்கு பிறகு
நாம் வேலைக்கு செல்லலாம்
ஊரடங்கு வந்தால்
நடந்தே ஊர் வந்து சேரலாம்.
குடியுரிமையும் பறிபோனது
குடியிருந்தால் குத்தம் என்றானது
அகதிகள் ஆக வாழ சொன்னது.
வேளாண் சட்டத்திற்கு
விதியென வாழலாம்
நாளை பசி வந்தால்
எல்லோரும் சாகலாம்.
கல்விக்கொள்கையில்
குருகுலம் ஒளிந்திருக்க
கண்களை மூடிக்கொண்டால்
குலத்தொழில் தான் உனக்கு இருக்கு..
சுற்றுச்சூழல் இங்கிருக்க
சுத்தமாய் எங்க இருக்க
கருப்பாய் நிறைந்திருக்க
அதில் கொஞ்சம் காத்தும் மறைந்து இருக்க..
சட்டம் போட்டார்களே
எதிர்கட்சிகள் கேட்கவில்லையா என்று கேட்டோம்..
வெளிநடப்பு செய்து விட்டோம்
என்று வீரமாய்ச் சொன்னார்கள்.
வான்புகழ் தந்தவன் மீதிலும்
வண்ணங்கள் பூசினார்கள்
அவரைச் சமணர் இல்லை சாமியார் எனப் புனைந்தார்கள்.
கட்டியிருந்த கோயிலை இடித்தார்கள்
ஏன்? என்று கேட்டோம்
புதிதாய் கோவில் கட்டுவதற்கு
அஸ்திவாரம் என்றார்கள்..
ஊரடங்கில் இங்கே
ஒருவருக்கும் பிழைப்பு இல்லை
ஒருவர் மட்டும் உலக பட்டியலில் முன்னிலை
வருஷமெல்லாம் ஒரு தாத்தா
ரசிகர்களை ஏமாற்றி பார்த்தார்
ரசிகன் ஒருவன் கேட்டான்.
போடாங்கு……
ஊரே திட்டினால் ஐகோர்ட்டில் முறையிடலாம்.
ஐகோர்ட்டையே திட்டினால்,
அட்மின் மீது பழி போடலாம்..
ஜார்ஜ் கழுத்தில் கால் வைக்க,
அவர் மூச்சு முழுசா நீக்க,
இதுக்கு எதிரா ஊரே திரண்டு இருக்க
மனிதம் மட்டும் எங்கும் நிறைந்து இருக்க..
ஊர் வம்பு எல்லாம் நமக்கு எதுக்கு
மனசுல பட்டத எல்லாம் இந்த
காகிதத்தில் எழுதி கழுதைக்கு தந்தேன்..
அது தின்றுவிட்டு….
இன்னொரு கவிதை கேட்டது…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 2 Comments

2 Comments

  1. க வீரமணி

    அருமை
    வார்த்தைகள் அல்ல.
    நெருப்பின் திவாலைகள்…
    எரியட்டும் தீயன அனைத்தும்
    இத்தீயில்…

  2. கவிதா பிருத்வி

    சாட்டையடி சொல் பிரவாகம்..

    தொடரட்டும் உங்கள் நெத்தியடி

    எழுத்துகள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *