Kelvi Inge Pathil Shortstory By Sudha கேள்வி இங்கே..! பதில்..? சிறுகதை - சுதா

கேள்வி இங்கே..! பதில்..? சிறுகதை – சுதா

மணி 5 இருக்கும். நேரமாச்சு சீக்கிரம் வேலையை முடி என குமார் கத்திக்கொண்டே இருந்தான். சுமதி அதையெல்லாம் பொருட்படுத்தி அவளாக தெரியவில்லை.சுமதி அவளுக்கே உரிய பொறுமையோடு தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு ட்ரெயின் விட்டா அவ்வளவுதான் துணிமணிகளை பையில் வச்சுக்கிட்டு ராத்திரி சாப்பாட்டை பார்க்கணுமே.பொம்பளைகளுக்கு எத்தனை கை இருந்தாலும் பத்தாது போல.

குமாரும் சுமதியும் இப்பதான் கல்யாணம் ஆச்சு என்று சொல்ல முடியாவிட்டாலும் இன்னும் குழந்தை இல்ல பாக்க ரெண்டுபேரும் இளமையா இருக்கிறதால புதிய தம்பதிகள் மாதிரி தெரியும்.

சரியா ஆறரைக்கு கிளம்பி மதுரை சந்திப்புக்கு வந்தாச்சு. பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதனோட வேகத்தைக் காட்ட ரெடியா பிளாட்பாரத்தில் நினைச்சு. சுமதியும் குமாரும் தன்னோட கம்பார்ட்மென்ட் பார்த்து சீட்டு தேடி உட்காரகுள்ள ரெண்டு பேருக்கும் ரெண்டு தடவை சண்டை வந்துருச்சு என்ன செய்ய வாழ்க்கை அப்படித்தான் இருக்கு.

ரயிலும் புறப்பட ஆரம்பிச்சிருச்சு திருச்சியில் ரயில் நிலையம் வர்றதுக்குள்ள ரெண்டு பேரும் பேசிக்கல. விறுவிறுன்னு சாப்பிட்டு தன்னோட பெர்த்தில் ஏறி படுத்த குமார சுமதி மறந்தும் போயிட்டா. மறந்ததற்கு காரணமும் இருக்கு. திருச்சியில் சுமதியோட இருக்கைக்கு எதிரே கைக்கு ஒரு கண்ணு தெரியாத தம்பதி ஏறினாங்க. சுமதி அவங்களையே பார்த்துகிட்டு இருந்தா என ரெண்டு பேரும் கண்பார்வை இல்லாதவங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா செய்யலாம் அப்படின்னு அவளும் அவங்கள பார்த்துகிட்டே இருந்தா. ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் ரொம்ப கூட்டம் இல்ல ரிசர்வேஷன் பண்ணவங்க மட்டும்தான் அங்க எங்க இருந்தாங்க.

சுமதி கவனம் சிதறாமல் எதிர்பார்த்த இருந்தா உங்கள பாத்துகிட்டே இருந்தா அப்படி என்ன அவங்க கிட்ட பிடிச்சு போச்சுன்னு தெரியல. கண் குறைபாடு உள்ளதாக அவங்கதான் இணைய தொடுத்துள்ளதான் பாத்துக்கிறாங்க. ரெண்டு பேரும் கைகளைக் கோர்த்துகொண்டேதான் இருந்தாங்க. திருச்சிக்கு அடுத்து வந்த நிறுத்ததில் அடி வாங்கின அடி வாங்கும் போது 20 ரூபாய் நோட்டை விரல்களால் அளந்து பார்த்து தனக்கு வந்த மிச்ச பணம் சரி தானா என்று உறுதி பண்ணிட்டாங்க. கண் பார்வை இல்லாதவர்களுக்கு கண்களில் பார்வை இல்லைனா என்ன விரல்களில் பார்வை காதுகளில் பார்வை என நிறைய கண்கள் இருக்கு போல.

அப்பப்போ அந்த தம்பதிகளுக்கு உள்ள ஏதோ பேசி உடனே அந்த பொண்ணு தன் மாராப்பை சரி செய்தாள் கொஞ்சம் சிரிப்பும் சமூகத்தின் மீதான பயத்தையும் ஒருசேர உணர்ந்தாள் சுமதி. மணி ஒன்பதைத்  தாண்டியதும் எல்லோரும் ரெஸ்ட் ரூம் போயிட்டு தன் பெர்த்தில் ஐக்கியமாகி கொண்டிருந்தனர். சுமதியும் தன் பெர்த்தில் படுத்துக்கொண்டாள் ஆனால் எதிர் புறத்தில் உள்ள தம்பதிகள் மட்டும் அசையவே இல்லை என இவர்கள் தூங்கலையா என்று நினைத்துக் கொண்டவளாய் கண்களை மூடவும் திறக்கவும் இருந்தாள். இப்படியே அவர்களையே அவள் பார்த்துக் கொண்டிருந்த போதும் கூட ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அந்தப் பெட்டி முழுவதும் அமைதியான பின் விளக்குகளும் உறங்கத் தொடங்கியது. அந்த தம்பதிகள் ரெஸ்ட் ரூமுக்கு செல்ல எழவும் சுமதியும் சட்டென எழுந்து விளக்குகளை விழிக்க வைத்தாள். ஆனால் அவர்களுக்கு இரவும் பகலும் வெளிச்சமும் இரண்டும் ஒன்றுதானே என்பதை அவள் பின்புதான் உணர்ந்தாள்.

அப்போதும் அவர்கள் ஒருவரையொருவர் விலகாமல் நடந்து சென்றார்கள். பத்தாததற்க்கு சுமதியும் தன் தலையை வாசல் பக்கத்தில் வைத்து அவர்கள் நடந்து செல்வதையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரெஸ்ட் ரூம் கதவைத் திறந்து அவர்கள் இரண்டு பேருமே உள்ளே நுழைந்தார்கள் சுமதிக்கு இருப்பு கொள்ளாமல் எழுந்து சென்றாள் அந்த தம்பதி நான்கு பக்கத்தையும் அளந்து கொண்டிருந்தார்கள். உள்ளே வேறு யாரும் இருக்கிறார்களா என ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பின்பு அவர்களின் கடன்களை முடித்துவிட்டு இருக்கையை ஒவ்வொன்றாய் எண்ணிக்கொண்டே வந்து தன் இருக்கையில் அமர்ந்தார்கள் இவர்கள் வருவதற்கு முன்பு எழுதித் தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

சரி இப்போதாவது அவர்கள் படுக்கைக்குச் செல்வார்கள் என நினைத்தாள் ஆனால் அப்போதும் இருவரும் பிரிவதில்லை இரவு முழுவதும் அந்த இருக்கையை விட்டு நகரவே இல்லை. இடையிடையே கண்விழித்து பார்த்தபோது அவர்கள் உறங்கவும் இல்லை.

சுமதி தன்னை அறியாது கண்ணசந்தால் செங்கல்பட்டு நிறுத்தத்தில் வண்டி நின்றதும் சுமதி கண் விழித்து மீண்டும் உறங்கிப் போனாள் குமார் மட்டும் தன் பெர்த்தில் இருந்து இறங்கி போர்வையை மடித்து விட்டு சுமதி சுமதி என்று எழுப்பும் போதுதான் சுமதிக்கு தன் கணவன் நினைவே வந்தது. விழித்தவுடன் எதிரிலிருந்த தம்பதிகளைதான் தேடினால் ஆனால் அவர்கள் இறங்கிவிட்டார்கள். எப்போது இறங்கினார்கள் என்று குமாரிடம் கேட்டு தெரிந்து கொண்டால் செங்கல்பட்டில் இருப்பார்கள் சீக்கிரம் எடுத்து வை சுமதி தாம்பரம் வரப்போகுது இல்லை என்ற குமாரின் சத்தத்தில் சுமதியின் கைகள் மட்டுமே வேலை செய்தது அவள் நினைவோ அந்தத் தம்பதியை சுற்றியே இருந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும் பிளாட்பாரத்தில் ட்ராலியை தள்ளிக் கொண்டே நடந்தனர் சுமதி என் மனதில் கேள்விகள் விரிந்தது.

அந்தப் பெண் எப்படி உணர்வால் அன்பின் வெளிப்பாடாகவும் பாதுகாப்பாக அல்லது சுதந்திரமற்ற உணர்வா எப்படி உணர்வால் என்ற சிந்தனையில் டிராலி உருளும் சத்தத்தோடு அவள் நினைவுகளும் உருண்டன.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *