கேள்வி கேட்டுபழகு – நூல் அறிமுகம்
குழந்தைகளிடம் மூடநம்பிக்கை பற்றிய உரையாடலை தொடங்கி வாசிப்பின் வழியே மட்டுமே மூடநம்பிக்கைக்கான எல்லா தடைகளையும் உடைக்க முடியும் என்பதை ‘கேள்வி கேட்டுப் பழகு’ என்கின்ற நூல் ஓர் ஆழமான உரையாடலை நம்முன் வழிமொழிகிறது.
ஏன்? எதற்கு?எப்படி? என்று கேள்வி கேட்க பழகு என்று சொல்லித் தரும் பாட புத்தகங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறமோ நாம் வாழும் சமூகத்தில் கேள்வி கேட்டாலே,என்னையே எதிர்த்து பேசுறியா?அதுவும் சாமி விஷயத்தில் கேள்வி கேட்கவே கூடாது. அதுவும் மீறினால் சாமி கண்ணை குத்தி விடும்,தண்டனைகள் தரும், குடும்பத்தில் கஷ்டங்கள் தொடரும் என்று நம்மை பயமுறுத்தியே எதிர் கேள்வி கேட்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றன நமக்கே தெரியாமல் நம்மை அமைப்பாய் திரட்டி இருக்கிறது நம் சமூக அமைப்பு.
மூடநம்பிக்கை வியாதியை குணப்படுத்த அறிவியல் தான் சிறந்த மருந்து என்று ஆடம்ஸ் ஸ்மித் மேற்கோளுடன் தொடங்கும் சிறு புத்தகம் பல அடிப்படையான கேள்விகளை நமக்குள்ளும், புத்தகத்துக்குள்ளும் கேட்டு படிக்கின்ற வாசகனை அடுத்த அடுத்த கேள்விகளுக்கும் விடைகளுக்கும் மிக எளிமையாக அறிவியல் ரீதியில் எளிமையான விளக்கங்கள் கொண்டு வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது ‘கேள்வி கேட்டுப் பழகு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குழந்தைகளை கேள்வி கேட்க தூண்டும் சிறுநூல்’ என்ற புத்தகம்.
அதில் வரும் சில கேள்விகளை வாசித்துப் பார்ப்போம் வாருங்கள்.
எப்படி யானை தலையை மனுஷனுக்கு வைக்க முடியும்?
ஏன் பொண்ணுங்க மட்டும் பேயா வராங்க? ஆம்பள பேயே இல்லையா? படத்துலயும் பொண்ணு தான் பேயாவே வருது.
அறிவியல் உண்மைகள் யார் செய்தாலும் ஒரே முடிவை தரும்போது, சோதிடம் ஏன் அப்படி தருவதில்லை?
இப்படி நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டு, அதற்கான விடைகளையும் புத்தகத்தில் எழுதி உள்ளனர்.
மேலும் நம்பிக்கையின், அடிப்படையில் எவ்வித ஆதாரமும் அறிவியல் சோதனைகளும் இல்லாத தகவல்களே போலி அறிவியல் என்றும், பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை’என்ற புத்தகத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய குழந்தைகளுக்கு அதிகமாக பேய்,பிசாசு படங்களை திரையில் காண்பிக்கும் அதே வேளையில் இது போன்ற புத்தகங்கள் குழந்தைகள் வாசிக்கையில் மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை பெறவும் இந்த சமூகத்தில் ஒரு உரையாடலை கேள்விகள் மூலம் கேட்கவும் இச்சிறு புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.
இறுதியில் மூடநம்பிக்கை எதிரான சட்டத்தை உருவாக்கியவர் நரேந்திர தபோல்கர் என்றும், ஒரு மாநிலத்தையே அறிவில் பூர்வமாக அணுக பழக்கப்படுத்திய தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என்றும், மூடநம்பிக்கைக்களுக்கு எதிராக போராடி தன்னுயிரையே நீத்தவர் கல்புர்கி என்றும் பதிவு செய்திருப்பது மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி எனலாம்.
எனவே வாசிப்பை விரும்பும் பெரியவர்களே, மாணவர்களே,குழந்தைகளே நீங்கள் அவசியம் ஒரு முறையேனும் ‘கேள்வி கேட்டுப் பழகு’என்ற புத்தகத்தை வாசித்து விடுங்கள்.
இச்சமூகத்தில் பதிந்திருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நம் கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டே நாம் கைகோர்த்து பயணிப்போம்.
நூலின் தகவல்கள் :
புத்தகத்தின் பெயர் : கேள்வி கேட்டுபழகு
(மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குழந்தைகளுக்கு கேள்வி கேட்கத் தூண்டும் சிறுநூல்)
எழுதியவர்கள் : சக.முத்துக்கண்ணன், ச. முத்துக்குமாரி
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
விலை ரூபாய். 50
நூல் அறிமுகம் எழுதியவர் :
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

