Subscribe

Thamizhbooks ad

கேரளா: கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கூட்டுறவு (தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி)



கேரளா புதிய பண்ணை சட்டங்களால் வேறு சில மாநிலங்களைப் போல பாதிக்கப்படாமல் போகலாம், ஆனால் அந்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் அது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே மாற்று முயற்சிகளின் பரவலாக்கப்பட்ட மாதிரியை அரசு வகுத்துள்ளது. 

திருவனந்தபுரத்திலிருந்து ஆர். கிருஷ்ணகுமார்

கடந்த ஐந்து தசாப்தங்களாக கேரளாவில் விவசாயத் துறையில் ஒரு முக்கியமான மாற்றம், அதாவது, உணவுப் பயிர்களை சாகுபடி செய்வதிலிருந்து உணவுப் பயிர் அல்லாதவற்றுக்கு மாற்றுவது மற்றும் விவசாய நிலங்களை விவசாயமற்ற பயன்பாட்டிற்காக மாற்றுவது என்பது, விரைவாக நடந்து வருகிறது. உணவுப் பயிர்களான அரிசி, மரவள்ளிக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகள் மொத்த பயிர் பரப்பளவில் சுமார் 10 சதவீத அளவில் மட்டுமே பயிரிடப்படும் போது,  முந்திரி, ரப்பர், மிளகு, ஏலக்காய், தேங்காய், தேநீர் மற்றும் காபி போன்ற பணப்பயிர்கள் கிட்டத்தட்ட 62 சதவீத அளவில் பயிரிடப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிரான அரிசி, பயிரிடப்படும் பரப்பளவில் 7.7 சதவீதத்தில் மட்டுமே பயிரிடப்படுகிறது. 

கேரளா ஒரு உணவுப் பற்றாக்குறை, நுகர்வோர் மாநிலம், அது தனக்குத் தேவைப்படும் உணவு மற்றும் பிற பொருட்களில் பெரும்பகுதியை  இறக்குமதி செய்கிறது. இது உணவு பாதுகாப்பிற்கு, ரேஷன் கடைகள் மூலம் நடக்கும் பயனுள்ள பொது விநியோக முறைமையையும்,  சந்தை தலையீட்டின் மூலம் 13 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்காக மற்ற மாநிலங்களிலிருந்து அவற்றை வாங்கி அதன் இரண்டாவது வரிசை பொது விநியோக முறையான, மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனின் (சப்ளைக்கோ) விற்பனை நிலையங்கள் மூலம் மானிய விலையில் விநியோகிப்பதையும் சார்ந்துள்ளது.



ஆகவே, இந்த மாநிலத்திற்கு முக்கிய உணவு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் நிறுவப்பட்ட வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC) மண்டிஸ் (சந்தைகள்) ஒருபோதும் தேவைப்படவேயில்லை, ஏனெனில் கேரளாவில் உபரி உற்பத்தி செய்யப்படும் பணப்பயிர்களுக்கு தேயிலை வாரியம், ரப்பர் வாரியம் மற்றும் மசாலா வாரியம் போன்ற அரசாங்கத்தால் முறைப்படுத்தப்பட்ட பொருட்கள் சந்தைப்படுத்தல் முறைகள் ஏற்கனவே தனித்தனியாக இருந்தன.

மாநில திட்டமிடல் வாரிய உறுப்பினரும் மும்பையின் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸின் பொருளாதார வல்லுனருமான ஆர். ராமகுமார் கூறினார்: “1960 களில், பிற மாநிலங்கள் ஏபிஎம்சி சட்டங்களை (APMC Acts) நிறைவேற்றியபோது, ​​கேரளா அவ்வாறு செய்யவில்லை, ஏனென்றால் அது உபரி உற்பத்தி செய்த பயிர்களுக்குத் தேவையான சந்தைகள் ஏற்கனவே அதற்கு இருந்தன. நெல் மற்றும் காய்கறிகள் மட்டுமே எல்லைக்கு வெளியே இருந்தன, இவற்றை எப்படியும் மாநிலமானது மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆகவே, கேரளா ஒருபோதும் பெரிய மாண்டிகள் மற்றும் சந்தைப்படுத்தல் அமைப்புகளின் தேவையை ஒருபோதும் உணரவில்லை, அதனால்தான் அரசு ஒருபோதும் ஒரு APMC சட்டத்தை நிறைவேற்றவில்லை.

”ஆனால், இப்போது வரை, கேரளாவில் கார்ப்பரேட்டுகளின் நுழைவுக்கு எதிராக எந்தவொரு கட்டுப்பாடோ அல்லது சட்டமோ இல்லை, அல்லது, சொல்லப்போனால், ஒப்பந்த விவசாயம் கூட, இல்லை. “உண்மையில், இந்த புதிய சட்டங்கள் மூலம் மத்திய அரசு இப்போது எதிர்பார்க்கும் நிலைமை கடந்த 50 ஆண்டுகளாக கேரளாவில் ஏற்கனவே இருந்து வந்தது. கேரளாவில் பண்ணைத் துறையில் முதலீடு செய்ய விரும்பும் எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கோ அல்லது நபருக்கோ இன்று வரை எந்த தடையும் இல்லை. இது மாநிலத்தில் முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை என்பது வேறு விஷயம். காய்கறிகளில் நாங்கள் உபரி அடைந்தால் அவை வரக்கூடும். ஆனால் எந்த தடையும் இல்லை, இன்னும், யாரும் மாநிலத்தில் முதலீடு செய்ய வரவில்லை, ”என்றார் ராமகுமார்.



“பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களைப் போல” மூன்று புதிய பண்ணை சட்டங்களால் கேரளா பாதிக்கப்படப்போவதில்லை என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர், ஆனால் அந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் அது இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கே.என். ஹரிலால், இவரும் திட்டக்குழு உறுப்பினர் தான், விவசாயிகளுக்கு நெல்லுக்கு நல்ல விலையைக் கண்டறிய உதவும் ஒரு சிறந்த தலையீடாக, மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் (எம்.எஸ்.பி) மேல் கூடுதலாக மானியம் வழங்குவதன் மூலம் சப்ளைக்கோ (Supplyco) அதை வாங்குகிறது. முன்னதாக அரசு திறம்பட கொள்முதல் செய்யாதது தனியார் வர்த்தகர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் நெல் விவசாயிகளைச் சுரண்டுவதற்கு வழிவகுத்தது. சப்ளைக்கோ முக்கிய அரிசி உற்பத்தி செய்யும் மாவட்டங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யத் தொடங்கிய பின்னரும், கொள்முதல் செயல்முறையிலிருந்து வர்த்தகர்கள் கூட்டாக விலகி, விலை வீழ்ச்சியை கட்டாயப்படுத்த முயன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது புதிய சட்டங்களின் விளைவாக MSP என்ற கருத்து வாடி மறைந்து விட்டால் என்ன தவறு ஏற்படக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.

கந்து வட்டிக் கும்பல்களிடம் விவசாயிகள் சிக்கும் அபாயம்..!! நகைக் கடன் வழங்குவதை உறுதி செய்ய கோரிக்கை..!! | Farmers at risk of falling into the hands of vested interest ...

இணை நடவடிக்கைகளுக்கு வசதி செய்து கொடுப்பது (Facilitating parallel operations)

“உணவு, விவசாயிகள் மற்றும் சுதந்திரம்” காரணத்திற்காக உறுதியளித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வலைப்பின்னலான நிலையான மற்றும் முழுமையான விவசாயத்திற்கான கூட்டணி (ஆஷா) வழிகாட்டும் குழு உறுப்பினர் ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் கருத்துப்படி, கேரளாவில் பணப்பயிர்களுக்கான ஒழுங்குமுறைச் சந்தைகள் ஒரு வகையில் ஏபிஎம்சி மார்க்கெட்டிங் அமைப்புக்கு சமமானவை (அவை ஒரே மாதிரியாக அல்ல என்றாலும்), அவை புதிய சட்டங்களால் நீண்ட காலத்திற்கு பாதிக்கப்படலாம், அதன் தன்மையை இப்போது கணிக்க முடியாது. “வேறொரு நாட்டிலிருந்து ஒரு பெரிய நிறுவனம் மசாலாப் பொருள்களை வாங்க இங்கு வந்து, இடுக்கியில் மசாலா வாரிய ஏல மையத்திற்கு அருகிலுள்ள கடை அமைக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதற்கு யாரும் சவால்விட முடியாது. இணை நடவடிக்கைகளை மத்திய அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. அது எப்போது நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது, ”என்றார்.

மத்திய அரசு இதுபோன்ற சட்டங்கள் உடனடியாக அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த பல அறிகுறிகளைக் கொடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக திட்டமிட்டிருந்தாலும், அவற்றின் விளைவுகளைச் சமாளிப்பதற்கான உத்திகளை கேரளா வடிவமைத்து வருவதாக விவசாய அமைச்சர் சுனில் குமார் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தார். “உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களின் வலுவான வலைப்பின்னல்கள் மற்றும் குடும்பஸ்ரீயின் கீழ் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்கள் [சுய உதவிக்குழுக்கள்] போன்றவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி, நெல் மற்றும் காய்கறி சாகுபடியில் சிறப்பு கவனம் செலுத்தி, உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவது மற்றும் பண்ணை விளைபொருட்களின் சந்தைப்படுத்தல், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவது என்பதற்கான மாற்று முயற்சிகளின் பரவலாக்கப்பட்ட மாதிரியை நாங்கள் வகுத்துள்ளோம்.  எங்களுடைய அணிதிரட்டும் முழக்கம் “கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான கூட்டுறவு” அதன் அடிப்படையில் எங்களுடைய விவசாயிகளைப் பாதுகாப்பதற்கான எதிர்வினையை நாங்கள் வடிவமைத்து வருகிறோம், ”என்று அவர் கூறினார்.

The robbery attempt at the Primary Agricultural Cooperative Credit Association || ராசிபுரம் அருகே காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

வேளாண் கூட்டுறவுகள் 

சுனில் குமார் மேலும் கூறியதாவது: “கேரளாவில் 1,600 க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன, இதன் முக்கிய ஆணை (mandate) விவசாயத் துறையின் நலன். இருப்பினும், கேரளாவில், இந்த கூட்டுறவு நிறுவனங்கள் இதுவரை வங்கி வசதிகள், தங்கக் கடன்கள் போன்றவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தி வந்தன, மேலும் விவசாய உற்பத்தி, மதிப்பு கூட்டல் அல்லது சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் தம்மை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. நாங்கள் இப்போது திட்டமிட்டுள்ளது என்னவென்றால், இதுபோன்ற அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு நிறுவனங்களை ஈடுபடுத்துவதே. விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதற்கும், அவர்களின் பயிர்களுக்கு ஒரு அடிப்படை விலை மற்றும் சந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஈடுபடும். ”உதாரணமாக, சுபிக்ஷா கேரளம், மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கிட்டத்தட்ட 25,000 ஹெக்டேர் தரிசு நிலங்களில் பயிர்களை பயிரிடுவதை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்கள், விவசாய கூட்டுறவு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டுப்பணிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரவலாக்கப்பட்ட முயற்சியாகும்.” கேரளாவில் அழிந்துபோகக்கூடிய 16 பயிர்களுக்கு “அடிப்படை விலையை” நிர்ணயிப்பதாக அரசு அறிவித்துள்ளது, இது உற்பத்தி செலவை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும், மேலும், அதன் அடிப்படையில் நவம்பர் 1 முதல், ஹார்டிகார்ப் (Horticorp) காய்கறி மற்றும் பழ ஊக்குவிப்பு கவுன்சில் (VFPCK) மற்றும் வேளாண்மை மற்றும் ஒத்துழைப்பு துறைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிலையங்கள் ஆகியவை நடத்தும் விற்பனை நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது, அவை இப்போது “கொள்முதல் மையங்களாக” அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பரவலாக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக, குழு பண்ணைகள், கரிம (organic) காய்கறி தோட்டங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டலுக்கான உழவர் நிறுவனங்கள், வேளாண் பூங்காக்கள் போன்ற பொதுவான வசதி மையங்கள், கிராம சந்தைகள் (ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒன்று), தயாரிப்பு சார்ந்த நிறுவனங்கள் கூட்டுறவு நிறுவனங்கள், விவசாய அறிவு மையங்கள், வேளாண் சேவை மையங்கள், தன்னார்வ ‘கர்ஷக கர்மா சேனாக்கள்’, கொள்முதல் மையங்கள், அரிசி ஆலைகள், மதிப்பு கூட்டல் மையங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும், கேரளாவிற்கு அதன் பெரும்பான்மையான அரிசி மாநிலத்திற்கு வெளியில் இருந்து தொடர்ந்து வாங்க வேண்டியிருக்கும் என்று ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். “ஆனால் மத்திய அரசு கொள்முதல் செய்வதிலிருந்து வெளியேற விரும்புவதாகத் தெரிகிறது, ஒருவேளை கட்டம் கட்டமாக. இப்போது அது மாநிலங்கள் அரிசி மற்றும் கோதுமையை பரவலாக்கப்பட்ட கொள்முதல் செய்ய அனுமதித்துள்ளது என்பது அதன் அறிகுறியாகும். படிப்படியாக, கேரளா அதன் தேவைகளுக்கு திறந்த சந்தையை மேலும் மேலும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடும், மேலும் இது அதன் பொது விநியோக முறை மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். போட்டிச் சந்தையில் நுழைந்து அதன் தேவைகளுக்கு அரிசி வாங்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டால், அது இயல்பாகவே குறைந்த விலையில் அரிசி வாங்க முயற்சிக்கும். பின்னர் கேரளாவின் விவசாயிகள் இழப்பைச் சந்திப்பார்கள், ஏனெனில் சாகுபடி செலவு அதிகமாக இருப்பதால், அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு விவசாயி வழங்குவதை விட அதிக விலைக்கு மட்டுமே அவர்கள் அரிசியை விற்க முடியும். எனவே இந்த புதிய சட்டங்கள் வேளாண் சந்தைப்படுத்தல் துறைக்கு பெரிய அளவில் சவால் விடும், இதன் முடிவுகள் நாள் முடிவில் நல்லதாக இருக்காது, ”என்றார். 



2007 ஆம் ஆண்டு முதல், ரிலையன்ஸ் போன்ற பல சில்லறை விற்பனைச் சங்கிலிகள் கேரள சந்தையில் நுழைந்து விவசாயிகளுடன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில் பண்ணை பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. சில்லறை நிறுவனங்கள் பல பகுதிகளில் சேகரிப்பு மையங்களைத் தொடங்கின. ராமகுமாரின் கூற்றுப்படி, வெண்ணிலா, சஃபேத் முஸ்லி (ஒரு மருத்துவ பயிர்), ஆர்கானிக் இஞ்சி, ஆர்கானிக் மிளகு, ஆர்கானிக் மஞ்சள் மற்றும் ஒலியோரெசின் போன்ற பயிர்களை வளர்ப்பதற்காக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள நிறுவனங்கள் உள்ளூர் விவசாயிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட சம்பவங்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒப்பந்தங்களை மீறுவது அல்லது ஒப்புக் கொள்ளப்பட்ட விலைகளை செலுத்த மறுப்பது போன்ற பல சர்ச்சைகள் மற்றும் சண்டைகள் நடக்கின்றன.

 கேரளாவில் ஒரு பெண் விவசாயியுடன் (M / s நந்தன் பயோமெட்ரிக்ஸ் லிமிடெட் Vs அம்பிகா தேவி) உடன்படிக்கை செய்து கொண்ட  ஒரு நிறுவனம் உச்சநீதிமன்றம் வரை சென்ற குறிப்பிடத்தக்க வழக்கை அவர் சுட்டிக்காட்டினார். 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோழிக்கோட்டைச் சேர்ந்த அம்பிகா தேவி என்ற சிறு விவசாயி, நந்தன் பயோமெட்ரிக்ஸுக்கு ஒரு கிலோ ரூ .1,000 க்கு சஃபேத் முஸ்லியை பயிரிட்டு வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால் நிறுவனம் டெலிவரி செய்யும் போது ஒப்புக்கொண்ட விலையை செலுத்த மறுத்துவிட்டது. அம்பிகா தேவி 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கேரள மாநில நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தை அணுகினார், அது அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இது ஒரு வணிக ஒப்பந்தம் என்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது என்றும் நிறுவனம் வாதிட்டது, அதனுடன் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

ராமகுமார் கூறினார்: “இந்த வழக்கின் தீர்ப்பு 2020 மார்ச் மாதத்தில் தான் வழங்கப்பட்டது. உழவர் வாதத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்து, ஒப்பந்த விவசாய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஒரு விவசாயியை ஒப்பந்த விவசாயியாக கருத வேண்டும் என்று அறிவித்தது. இது இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு விவசாயியை ‘நுகர்வோர்’ என்று ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பாகும், ஆனால் புதிய மத்திய சட்டம் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ”

ஆனால் புதிய சூழலில் கவலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு கேரளாவில் இவ்வளவு பெரிய அளவில் ஒப்பந்த வேளாண்மை நடைபெறுகிறதா? “பதிவு செய்வதற்கான முறை இல்லாததால் எங்களுக்கு அதை அறிய வழி இல்லை. இந்தியாவில் ஒப்பந்த வேளாண்மை பகுதியில் முறைப்படியான எந்த ஏற்பாடும் ஒழுங்குமுறையும் இல்லை. இந்த பகுதியில் விதிமுறைகள் இல்லாததால் ஏராளமான விவசாயிகள் சுரண்டப்படுகிறார்கள், அத்தகைய ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இறுதியில் அவர்கள் பெறும் எந்த விலையையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ”என்றார் ராமகுமார்.

Modi govt's Zero Budget Natural Farming still in trial mode, scientists say not viable

வர்த்தகச் சந்தைகள்

கேரளாவில் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பொருட்கள் சந்தைகளைக் கொண்ட புதிய சட்டங்கள் பணப் பயிர்களின் வர்த்தகத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றன? ராமகுமார் கூறினார்: “கேரளா அங்கு ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள வாய்ப்பில்லை, ஏனென்றால் உரிமம் பெறுவதன் மூலம் மசாலா வாரியம் என்று சொல்லப்படும் ஏல மையங்களில் யார் வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம். கோட்பாட்டு ரீதியாக ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு இணையான ஏல மையத்தைத் தொடங்குவது சாத்தியம், ஆனால் ஒரு தனி ஸ்தாபனத்தைத் தொடங்குவதற்கான பொருளாதாரம் அந்த வகையான புதிய முறையை அனுமதிக்கிறது என்று நான் நினைக்கவில்லை. ஒரு இணையான ஸ்தாபனத்தை அமைப்பதற்கான பரிவர்த்தனை மற்றும் நிர்வாக செலவுகள் மிக அதிகமாக இருக்கும். அதனால்தான், மகாராஷ்டிரா போன்ற ஏபிஎம்சிக்கு பிந்தைய சீர்திருத்த மாநிலங்களில் கூட, எந்தவொரு தனியார் சந்தையையும் நாங்கள் காணவில்லை. காரணம், பரிவர்த்தனை மற்றும் நிர்வாக செலவுகள்  உள்ளே நுழைவதற்கு பெரும் தடையாகும். தற்போது வரை பொருட்கள் வாரியங்களால் நடத்தப்படும் ஏல மையங்கள் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.” நடவடிக்கைகள் மற்றும் விளம்பர பிரச்சாரங்களின் சீற்றம் இருந்தபோதிலும், மத்திய அரசின் கொள்கைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு கேரளாவில் விவசாயத் துறையில் புதிய பரவலாக்கப்பட்ட முயற்சிகள் நன்கு நிறுவப்பட்டவை மற்றும் திறன் கொண்டவை என்பதில் சந்தேகம் உள்ளது. 



நல்ல சந்தைப்படுத்தும் முறையின் போதாமை

ராமகுமாரின் கூற்றுப்படி, கேரளாவில் இன்னும் பெரிய குறைபாடு என்னவென்றால், ஒரு நல்ல சந்தைப்படுத்தல் முறை இல்லாததுதான். “இப்போது நம்மிடம் உள்ள அமைப்பு மிகவும் துண்டு துண்டாக உள்ளது. மாநிலத்திற்கு இன்னும் ஒரு தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த (a strategic marketing plan) சந்தைப்படுத்தல் திட்டம் இல்லை. தரிசு நிலத்தின் பெரிய பகுதிகள் பல்வேறு குழுக்களால் சாகுபடிக்கு திறக்கப்படுகின்றன, மேலும் சுபிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியாக காய்கறி சாகுபடியை இரட்டிப்பாக்க கேரளா இலக்கு வைத்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். ஆனால் அது ஒட்டுமொத்த விநியோக சங்கிலி திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அனைத்து அறுவடைகளும் சந்தையை அடையும் போது என்ன நடக்கும் என்று அரசு இன்னும் சிந்திக்கவில்லை. அனைத்தும் உள்ளூர் மட்டத்திலேயே விற்கக்கூடியவை என்றும், எல்லா இடங்களிலும் கொஞ்சம் உபரி இருக்கும் என்றும் யாரும் நம்ப முடியாது,” என்றார்.

இப்போது மத்திய அரசால் முன்மொழியப்பட்டு வரும் ஏற்பாட்டிற்கு ஒரு நல்ல மாற்றாக கேரளா ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது என்று ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் கருதுகிறார். “இந்த மாதிரியானது ஒரு நல்ல மாற்று வழிமுறை என்று நான் உறுதியாக உணர்கிறேன். கேரளா பின்பற்ற வேண்டிய ஒரு சிறந்த அணுகுமுறை இது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒருங்கிணைப்பை எட்டியுள்ளது என்று நான் கூறுவேன். உதாரணமாக, காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கிய சில கிராமங்கள் கொத்துகளாக ஒன்றிணைக்கப்படுகின்றன. ஆனால் அவை அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனென்றால் இதற்கு நல்ல குளிர் சேமிப்பு வசதி மற்றும் கூடுதல் சந்தைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து போன்ற பல தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. அவை இப்போது விடப்பட்டிருப்பதைப் போல தளர்வாக இருப்பது போதுமானதல்ல. இப்போதுள்ள நிலையில், ஆதரவு வழிமுறைகள் திரும்பப் பெறப்படும்போது, ​​அந்த முயற்சிகளில் பல சரிந்துவிடும். எந்தெந்த பகுதிகள் எழுந்து போதுமான அளவு உற்பத்தி செய்யத் தொடங்கினவோ, அவற்றில் முதலீடு செய்வது பயனுள்ள கொள்கைத் தலையீடாக இருக்கும். கேரளா பின்பற்ற வேண்டிய பண்ணை உத்தி அதுதான். அத்தகைய கவனம் செலுத்துவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

கேரளாவின் வேளாண் துறையின் தீவிர பார்வையாளரான ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மத்திய கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக நாட்டிற்கு எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், விவசாயத் துறையில் புதிய பெரிய பங்காளிகள் சேர்க்கப்படும்போது, ​​“கேரளா அது இப்போது முதலீடு செய்திருப்பது ஒரு பிரச்சாரம் மட்டுமே, ஆரம்ப உற்சாகம் மட்டும் போதாது, அதன் திட்டங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் ஒரு நிலையான அம்சம், தொடர்ச்சியான அம்சம் மற்றும் ஒரு தணிக்கை அம்சம் ஆகியவை அவைகளுக்குள் கட்டியமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பார்க்கும் பார்வை இருக்க வேண்டும். அவர்களுக்கு.” “இதுபோன்ற விஷயங்களில் எங்கள் முதுகில் பாராட்டாக தட்டிக் கொடுப்பதால் நாங்கள் திசைதிருப்பப்படுகிறோம் என்ற உணர்வு எனக்கு உள்ளது. விநியோகச் சங்கிலியைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு மாநிலத்தின் வெற்றி இருக்கும். நாம் எங்கே தோல்வியடைகிறோம்? தயாரிப்பு தரம், கண்காணிப்பு, தரப்படுத்தல் ஆகியவற்றில் நாங்கள் தோல்வியடைகிறோம்; நாங்கள் பேக்கேஜிங்கில் தோல்வியடைகிறோம், இந்த புதிய காலத்தின் செயல்முறைகளில் நாங்கள் தோல்வியடைகிறோம். இவற்றன் மீதெல்லாம் எங்களுக்கு இன்னும் ஒரு அக்கறையின்மை இருக்கிறது. அது கார்ப்பரேட்டுகளை மகிழ்விக்கும். ஏனென்றால் அவர்கள் இப்போது எங்களுக்காக முழு காரியத்தையும் செய்யப் போகிறார்கள். இது விவசாயிகளின் தோல்வி அல்ல, அதிகாரத்துவம் மற்றும் அரசாங்கத்தின் தோல்வி. இதனால்தான், இந்தியா முழுவதும், கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு ஒரு கட்டற்ற சுதந்திரமான களத்தைக் காண்கின்றன, ”என்று அவர் கூறினார்.



https://frontline.thehindu.com/cover-story/cooperatives-against-corporates/article32757669.ece

தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி
நன்றி: ஃப்ரண்ட்லைன்

Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here