கவிதை -Poem | கேட்டு விட்டு விட்டேன்- I asked and left

எப்போதும்
தடுமாறி வீழ்கிறேன் ….

குறுக்கே யாரோ வந்து
நான் என்கிறார்கள்.

எனக்கும் புரிவதில்லை
அவருக்கும் புரிவதில்லை,

ஏன் இப்படி என
அவனிடமும் கேட்டு விட்டு விட்டேன்
அவனும் வாய் திறக்கவில்லை.

எப்படி நடக்கிறது எதனால் நடக்கிறது
யார் நடத்துகிறார்கள் என எவருக்கும்
தெரிவதில்லை….

அதில் நான் மட்டும் இயற்கை என கடந்துப் போகிறேன்.

காலையில் கூட…

‘ என் மகன் ‘

உங்களைப் போல ஒருத்தன்
என் நண்பன்…

எல்லா வற்றிற்கும் இயற்கை என்பான் என்றான்.

உன் வகுப்பில் ஒருத்தன் மட்டுந்தானா?

என சிரித்து கடந்துப் போனேன்.

 

எழுதியவர் 

இராஜேஷ் சங்கரப்பிள்ளை

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *