Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: கலீல் ஜிப்ரான்: வாழ்க்கை வரலாறு – சு.பொ.அகத்தியலிங்கம்

 

 

 

“ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை ஒரு கவிதை நூலை வாசிப்பதுபோல் அத்தனை சுவையோடும் தாளலயத்தோடும் வாசிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.”

இதயத்தின் ஆழங்களை நோக்கி கடந்து வா!!

”மனிதனை இருட்டில் பிறப்பித்து அவனுடைய வேர்களை மண்ணில் ஊன்றி நிறுத்த வேண்டும் .வாழ்வதற்கான மோகத்தை அவனுக்குத் தர வேண்டும்…. அவனுடைய கற்பனையை மலைகளின் பருந்துகள் போல் ஆக்க வேண்டும் .அவனுடைய சிந்தனைகளைக் கடலின் புயலாக மாற்ற வேண்டும்.” எனக் கனவு கண்டவர் கலீல் ஜிப்ரான்.

ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை ஒரு கவிதை நூலை வாசிப்பதுபோல் அத்தனை சுவையோடும் தாளலயத்தோடும் வாசிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

மிகையில் நைமி தன் உயிர் நண்பன் கலீல் ஜிப்ரானோடு இரண்டறக் கலந்தவர். ஆகவே ஓவியனும் கலைஞனும் எழுத்தாளனுமான கலீல் ஜிப்ரானை வரலாற்றை வெறும் வாழ்க்கைக் கதையாக எழுதாமல் உள்ளுணர்வுகளை ஒன்றுகூட்டி உயிர் சித்திரமாகவே தீட்டி இருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவிதையும் தத்துவமும் கொஞ்சுகின்றன. பக்கங்களைப் புரட்ட புரட்ட அவை நம் இதயத்தோடு பேசுகின்றன.

லெபனான் நாட்டில் 1883 ல் பிஷாரா எனும் இடத்தில் ஓர் ஏழைக் கிறுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர் ஜிப்ரான். வறுமை அவர் குடும்பத்தினர் [தந்தையைத் தவிர] எல்லோரையும் விரட்ட பிழைக்க வழிதேடி அமெரிக்க போஸ்டனுக்கு பயணப்பட்டனர். அங்கும் வாழ்க்கை சுமையாகவே அழுத்தியது.

கலீல் 20 வயதை எட்டும் முன் அம்மா, அண்ணன், தங்கை என மூவரை நோய்க்கு பலி கொடுத்தார். ஒரே சகோதரி மரியான தன் சகோதரன் ஜிப்ரானுக்காக வாழ்நாள் முழுவதும் தையல் இயந்திரத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்.

ஜிப்ரான் வாழ்விலும் சில பெண்கள் குறுக்கிட்டார்கள். அதில் மூவர் அவரது நினைவில் முக்கியமானவர்கள். மேரி ஹாஸ்கில், மிஷ்லின், கடைசியில் வந்த மாபெரும் ரசிகையான இளம் பெண். ஜிப்ரான் வாழ்வில் மிகையீல் நைமி அறிமுகமானதும் வாழ்வில் கடைசி துளி வரை அவர்களில் நட்பு ஆழமாய் வேர்விட்டு வளர்ந்ததும் அவரே அவர் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியதும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க செய்தி.

1931 ஏப்ரல் 10 ஜிப்ரான் மரணமடைந்தார். அவர் மறைந்ததும் இறுதி பிரார்த்தனை செய்ய தேவாலயம் மறுத்துவிட்டது. அது குறித்து நைமி எழுதுகிறார்;

“மருத்துவமனையில் இருந்தபோது தன்னைப் பார்க்க வந்த கன்னிகாஸ்திரியிடம் ‘நான் கத்தோலிக்கன் அல்ல’ என ஜிப்ரான் கோபமாகச் சொன்னதும் கன்னிகாஸ்திரி கோவித்துக் கொண்டு போனதும் திருத்தந்தை அறிந்திருந்தார். இதனால்தான் இசைவு பத்திரம் நல்கப்படவில்லை. திருத்தந்தையை மனமாற்றம் செய்யும் வல்லமையுள்ள ஒருவரிடம் சொல்லி எப்படியெல்லாமோ பத்திரத்தை சரியாக்கினோம். இது போன்ற காரியங்களில் இசைந்துபோக விரும்பாத ஜிப்ரானுக்காக இதைச் செய்யவில்லை. மாறாக அவர் சகோதரி மரியானா சங்கடப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.”

அவர் உடல் நியூயார்க்கிலிருந்து போஸ்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு தற்காலிகமாக அங்கு அடக்கம் செய்யப்பட்டது. பின் ஆகஸ்ட் 21 லெபனானுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் கடைசியில் வாழ ஆசைப்பட்ட மார்சார்கீஸில் அடக்கம் செய்யப்பட்டார்.

அரபியிலும் ஆங்கிலத்திலும் ஜிப்ரான் வெளியிட்ட நூல்களின் பட்டியலாக அல்ல நூல்கள் உருவான சூழல் குறித்தும் அதன் உள்ளடக்கம் பற்றியும் சுவைபட இந்நூல் பதிவு செய்துள்ளது ஜிப்ரான் வாழ்க்கைக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

ஓவியராக பயணம் தொடங்கிய ஜிப்ரான் கடைசி வரை ஓவியம் வரைந்து செய்த பங்களிப்பு கலைநயம் மிளிர இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. “இயற்கையை அறிதலும் பிறருக்கு அதை பகிர்தலுமே உண்மையான கலை.” என சொன்னவர்; அவ்வழி ஓவியங்களை வரைந்தவர் ஜிப்ரான்.

அவன் காதலி, நண்பி, மனைவியாக்க ஆசைப்பட்டு முடியாமல் போனவர் மேரி சொன்னார்,” கலீல் நீ ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. அரபியில் நீ புகழ் பெற்றவன் நீ என்று சொல்கிறார்கள். இன்னும் மிகவும் இளம் வயது உனக்கு. அரபியில் மூன்று புத்தகங்கள் [அல் மியூசிக்கி, அராஇசூல் முரூஜ், அல் அர்வாஹல் முதமிரிதா] ஏற்கெனவே வெளியிட்டு விட்டாய். ஆனால் உன் பொருளாதார நிலை உயரவில்லை. இப்போதும் நீ செலவுதான் செய்துகொண்டிருக்கிறாய்“

மேரிதான் பண உதவி செய்து ஜிப்ரானை மேலே படிக்க வைத்தாள். ஆங்கிலத்தில் எழுத வைத்தாள், அவரின் ஆங்கிலத்தை திருத்தி செப்பம் செய்தவளும் அவளே. நைமி படித்து கருத்து சொல்வார்.

The Prophet தேவதூதர், Jesus Son of Man மனித குமாரன் இயேசு ஆகிய புத்தகங்களின் வருகையால் ஜிப்ரானின் ஆராதகர்கள் எண்ணிக்கை பெருகியது.

நைமியிடம் பேசும் போது சொன்னார், “தேவதூதருக்கும் அதற்கு பின்னும் வருகின்ற படைப்புக்கும் இடையில் என் வாழ்க்கை இடை வெளியை நிரப்பவே இந்த புத்தகம் …. இது ஒரு முன்னுரை மட்டுமே. மனிதர் ஒருவருகொருவர் கொள்ளும் உறவைக் குறித்தே அதில் எழுதி இருக்கிறேன். இன்று என் மனதில் ஓர் புத்தகம் இருக்கிறது . மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவுதான் அதன் பொருண்மை. அதற்கு Garden Of Prophet தேவதூதரின் தோட்டம் என அதற்கு பெயர் வைப்பேன். [இந்நூல் அவர் மரணத்துக்கு பிறகே வெளியானது] மனிதனுக்கும் தெய்வத்துக்கும் உள்ள உறவு குறித்து மூன்றாவதாக ஓர் புத்தகம் எழுதுவேன். Death of the Prophet தேவதூதரின் இறப்பு என்பதாக அதன் பெயர் இருக்கும். [நூல் எழுதப்படவே இல்லை]”

கண்ணீரும் புன்னகையும், முறிந்த சிறகுகள், கடவுளின் பூமி, முழக்க ஊர்வலம், மணலும் மெத்தையும், தி மேடம் என அரபியிலும் ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதிக் குவித்தவர். அரபியில் உரைநடைக் கவிதை எனும் புதிய மரபைத் தொடங்கி வைத்தவர். இன்று உலகெங்கும் அந்த கவிதை மரபு அனைத்து மொழிகளையும் ஆட்கொண்டுவிட்டது.

நைமி 1912 ல் தான் ஜிப்ரானுக்கு அறிமுகமாகிறார். விரைவில் இருவரும் உயிர் நண்பராகி விடுகின்றனர். அரபி இலக்கியத்தில் திசை திருப்பத்தை ஏற்படுத்திய அல் ராபத்வ அல்கலமிய்ய The Pen Movement எழுதுகோல் இயக்கம் 1920 ல் இவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தலைவர் ஜிப்ரான். செயலாளர் மிகையீல் நைமி, பொருளாளராக வில்லியம் காத்பலீஸ். இன்றும் அரபு இலக்கியத்தை பேசப்புகின் எழுதுகோல் இயக்கத்தை பேசாமல் கடக்க முடியாது.

ஜிப்ரான் நோயோடு போராடிய காலத்தில் உயிர் நண்பன் நைமி சொல்லிய சொற்கள் தமிழ்க் கலைஞர்களுக்கும் பொருந்தும், “ஜிப்ரான் நீ உன் உடலுக்கு செய்த துரோகத்தின் பலன் இது. அதனிடம் நீ நீதி காட்டி இருந்தால் அது உன்னிடம் நீதி காட்டியிருக்கும்… அளவுக்கு மீறிய மதுபானமும், புகைபிடிப்பும், காபியும் உன் இரத்தத்தையும் சதையையும் இல்லாமல் செய்துவிட்டன…”

இந்நூல் நெடுக உள்ள கவிதை வரிகளை நீங்கள் வாசித்து அனுபவிப்பீர்! இறுதியாக ஒரு சொல் ஜிப்ரான் வார்த்தைகளில்.

“வா … என்னிடம் வா … உன் அனைத்து நன்மைகளும் சாபங்களும் கொண்டு எனக்குள் நுழைவாயாக. பூமி வெறும் தரிசாக இருந்த போது பூமிக்கு இறைவனின் ஆன்மாவைக் கொண்டு வந்த மாருதத்தின் பிரியமக[ன்]ள் நீ… ஆதிகாலம் முதல் இருந்து வரும் ஆகாயம் பூமிகளுடைய மூச்சுகளை ஏற்றிக்கொண்டு நீ இப்போது வருகிறாய்…”

“வா … என் இதயத்தின் ஆழங்களை நோக்கி கடந்து வா. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்துப் பொருட்களின் நண்பனாக்கி நீ என்னைச் செயல்பட வைப்பாயாக…”

2019 அக்டோபரில் வெளிவந்த இந்த நூல், சில தினங்கள் முன் என் சம்பந்தி பொள்ளாச்சியிலிருந்து எனக்காகச் சுமந்து வந்த புத்தகக் கட்டில் இருந்தது. அவருக்கு என் இதய நன்றி ! உடனே படித்தேன். இன்று பகிர்ந்துவிட்டேன்.

கலீல் ஜிப்ரான்: வாழ்க்கை வரலாறு,
ஆசிரியர்: ’மிர்தாத்’ ஆசிரியர் மிகையீல் நைமி,
மலையாளம்: எம் .ஏ. அஸ்கா, தமிழில்: சிற்பி,
வெளியீடு: அருட்செல்வர் நா. மகாலிங்கம்
மொழிபெயர்ப்பு மையம், தொடர்புக்கு : 9976144451,
email: [email protected]
பக்கங்கள்: 160,
விலை: ரூ.150/

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான்...

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற அழகு! எந்த ஒரு மனிதனும் இவ்வுலகத்தை அழகாக்கியதில்லை; மாறாக.... அசிங்கப்படுத்தியே வந்தான், வருகிறான்; வருவான்? அந்த அசிங்கப் படுத்தல் வேறொன்றும் இல்லை; சாதி செய்து.... சமயம் செய்து.... சாக்கடையாய் ஓட விட்டதுதான்! ******** ... கவிஞர் பாங்கைத் தமிழன்...  

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here