நம் இந்தியாவில் உள்ள மாநிலமான உத்திபிரதேசக் கிராமங்களிலில் பேசப்படும் மொழியே மைதிலி.
இக்கதைகள் சில மௌரியர் காலத்தவை, சில பிரிட்டிஷ் காலத்தவை. காலம் காலமாக மைதிலி மொழியிலும் சிற் சில மாறுபாடுகளோடு போஜ்புரி, மகாஹி, அங்கிகா, வஜ்ஜிகா என்ற பீஹாரின் ஐந்து முக்கிய மொழிகள் அனைத்திலும் கூறப்பட்டு வருபவை. சிறார்கள் இந்திய பண்பாட்டை அறிய இந்த கதைகள் பேருதவி புரியும்.
மூலக் கதையை அழகாக தொகுத்து தமிழில் வழங்கியிருப்பவர் ச.சுப்பாராவ்.
இத்தொகுப்பில் மொத்தம் பதினாறு கதைகள் உள்ளன.
முதல் கதை கிராமக்காக்காயும் நகரக்காக்காயும் எந்த இடத்திற்கு நாம் இடம் பெயர்ந்தாலும் அங்கு வாழ அந்த சூழ்நிலைக்கு ஏற்ப நாம் தகவமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடையது.
இரண்டாம் கதை விடாமுயற்சி தனது விடாமுயற்சி மூலம் சிறிய குருவி எப்படி அரிசி மணியை பெற்றது என்ற கதை.
வேடனிடம் மாட்டிய தனது பேரக்கிளியை தாத்தா கிளி தனது சாமர்த்தியத்தால் தப்ப வத்த மூன்றாம் கதை கிளியும் அதன் தாத்தாவும்.
கூடா நட்பு கேடில் முடியும் என்ற உண்மையை கூறிய கதை ஒட்டகமும் குள்ள நரியும்.
ஐந்து மற்றும் ஆறாம் கதைகளாள முட்டாள் சிறுவன், மால்புவா சிரிக்க வைத்து சிந்தனையைத் தூண்டுவது.
இது போன்று யானைப்பாகனும் நாய்களும், காக்கையும் குருவியும், நரி கற்ற பாடம், கழுதையும் நாயும், குள்ளநரியின் தந்திரம், டிப்டிப்வா, இரு நண்பர்கள், ராஜ குருவின் தாடி, இவையும் மண் கட்டியும், வம்பு பேசலாமா ஆகிய கதைகள் உள்ளன.
குறிப்பாக குழந்தைகளை கவரும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களாக விலங்குகளை வைத்து அதிக கதைகள் இருப்பது சிறப்பு.
-நன்றி
நூலின் தகவல்கள்:
புத்தகம் – கிளியும் அதன் தாத்தாவும்
ஆசிரியர் – ச. சுப்பாராவ்
பதிப்பகம் – புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் – 64
விலை – ₹.60.00
நூலறிமுகம் எழுதியவர்:
மும்தாஜ் பேகம் ரஹ்மான்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.