பாலியல் சுரண்டல் (அல்லது) பாலியல் வன்கொடுமை
‘No means no’ இந்த வார்த்தைக்கு இன்றும் அர்த்தம் புரியாத பித்துக்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
செய்தித்தாளிலும் திரையிலும் வரப்படாத எத்தனையோ பாலியல் வன்கொடுமைகள் கிராமத்தில் இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பெண் பிறப்பு முதல் இறப்பு வரை பாலியல் சுரண்டல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருமணம் என்றாலே இங்கு வாழும் ஆணைப் பொறுத்தவரை தனது காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்கும் பெண்ணை அவன் விருப்பத்திற்கேற்ப ஆள்வதும்தான்… இது தான் திருமண பந்தத்திற்கு அர்த்தம்… அவன் விருப்பத்திற்கு பணியவில்லை என்றால் நான் வேறு பெண்ணிடம் சென்றுவிடுவேன் என்று மிரட்டுவது. இந்த மிரட்டலுக்கு பயந்து அந்த பெண்ணும் வேறு வழியின்றி அவன் விருப்பத்திற்கு பணிகிறாள்…
ஒரு குடும்பத்தில் பெண் ஒருவர் விதவையானாள் அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் கணவனின் குடும்பத்தாரில் உள்ளவரே பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள்… இதற்கு அர்த்தம் அந்த பெண் வெளியே சென்று தவறிழைக்காமல் இருக்க வைக்க இவர்கள் பத்திரப்படுத்துகிறார்களாம். பெண் எங்கேனும் போய்விடுவாள் அவளுக்கு இந்த விருப்பம் நிச்சயம் தேவையானதாக இருக்கும் என்று அவர்களே முடிவு செய்து விடுகிறார்கள்… எந்த ஒரு பெண்ணும் விதவையானாளோ அல்லது கணவனால் கைவிடப்பட்டாளோ அந்த பெண்ணை இவர்கள் ஆசைக்கு பலியாக்கிவிட்டு அந்த பெண்ணையே குற்றம்சாட்டி ‘இதுவரை அவள் ஒழுங்காகவா இருந்திருப்பாள்’ என்று சொல்லிவிடுகிறார்கள்… பழியும் பாவமும் பெண் மீதே சுமத்தப்படுகிறது…
பெண்ணை உடலளவில் மட்டும் பார்த்து ஒரு போதைப் பொருளாக, தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு ஆளாக நேரிட்டு மன நோயாளி ஆகிவிடுகிறார்கள்…
ஒருபுறம் பாலியல் சுரண்டல் என்றால் மறுபுறம் பெண்ணை திருமணம் செய்து கொள்வது குழந்தையை பெற்றுத்தரும் ஒரு கருவியாக மட்டுமே பாவிப்பது… அதுவும் குழந்தை பெறமுடியாவிட்டால் மறுமணம் செய்வதுதான் நியாயமாம். குழந்தை பெற்றுத்தந்தால் அவள் உடலளவிலும் மனதளவிலும் மீண்டு வருவதற்குகூட கால அவகாசம் கொடுக்காமல் ஆறு மாதத்தில் இன்னொரு குழந்தை என்று அவளை ஒரு கருவியாக மட்டுமே வைத்திருப்பது… இதற்கு இன்னொரு காரணமும் உண்டு அவள் தன்னிச்சையாக வாழ்ந்து விடக்கூடாது வேலையோ படிப்போ என எதுவும் தனியாக அவள் வாழ்க்கையை வாழும் அளவிற்கு வரக்கூடாது என அடிமைப்படுத்தும் செயலே ஆகும்…
பெண்ணை திருமணம் செய்து அவன் வீட்டிற்கு அழைத்து வந்ததோடு அந்த பெண்ணின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. அவனுக்காக வாழ்க்கை வாழ்வதே அவள் வாழ்க்கை என்று ஆகிவிடுகிறது. இது அவன் வாழ்க்கை மட்டுமல்ல அவள் வாழ்க்கையும் கூட என்பதை மறந்து விடுகிறார்கள். ஆண் படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி எத்தனை வயதானாலும் சரி அவன் ஆண் தான் என்றும் பெண் படித்தாலும் சிறிய வயது பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் ஆகிவிட்டாலும் குழந்தை பிறந்துவிட்டாலும் அவள் கட்டம் முடிந்துவிட்டது என்று அவர்களே முடிவு செய்து விடுகிறார்கள்…
ஒரு ஆண் திருமணம் ஆனாலும் ஆகிவிட்டாலும் உடலளவில் பெரிய மாற்றம் நிகழப்போவதில்லை…
ஆனால் பெண் வளரிளம் பருவ மாற்றங்களை அனுபவிக்கிறாள். திருமணத்திற்கு பின் குழந்தை பிறந்த பின் உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை அனுபவிக்கிறாள்… அதிலிருந்து மீண்டு வர ஐந்து வருட காலம் ஆகும்… இதை அந்த கணவன் புரிந்து கொள்கிறான் என்றால் கேள்விக்குறி தான்… அவளை மீண்டு வரும் அளவிற்கு கூட அவகாசம் தராமல் வீட்டு வேலை கணவருக்கு பணிவிடை செய்வது எல்லாம் செய்ய வைப்பார்கள்… அவளை புரிந்து கொள்ளாமல் பாலியல் ரீதியாகவும் வர்ப்புருத்துகிறார்கள்… இல்லையெனில் வேறு பெண்ணின் தொடர்பில் இருப்பேன் என்றும் கணவனின் அத்தனை தவறான செயலுக்கும் மனைவி மீதே குற்றம் சுமத்துவதும் சகஜம்…
ஆண் செய்யும் தவறுக்கு பெண்ணே காரண கர்த்தாவாக முன் நிறுத்துகிறார்கள்… மனைவியை அடித்து துன்புறுத்துவதும் வலுக்கட்டாயப்பபடுத்தி அவர்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதும் கணவனுக்கே உரிய மொழிநடை… அதாவது கணவன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்…
பெண்ணை போதைப் பொருளாகவும் வெறும் கருவியாக மட்டும் பார்க்கும் இவர்களிடமிருந்து எப்போது மீண்டு வரப்போகிறார்கள் என்று அறியா வட்டத்தில் அடிமையாக காலம் தள்ளுகின்ற நிலை எப்போது மாறப் போகிறது… திருமணம் என்ற பெயரில் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைப்பவர்க்கு இந்த வரிகள் பொருந்தும்
“விரும்பிய நேரமெல்லாம் பலாத்காரம் செய்ய வீட்டில் ஒரு பெண்
அவள் பெயர் மனைவி…”
ஒரு பெண்ணுக்கு பெண் தான் பார்த்து கொள்ள வேண்டும்… ஒரு ஆணையும் பெண் தான் பார்த்து கொள்ள வேண்டும்… ஒரு ஆண் பெண்ணை பார்த்து கொள்ள வேண்டும் என்பது அவசியமற்றது… பெண்ணை பூர்த்தி செய்வதே எங்கள் கடமை என்று மிருகத்தனமான ஆண்களின் கருத்துக்களும் அவ்வப்போது காதில் விழுந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்ணை பலவீனப்படுத்தி, அடிமையாக்கி, ஆண்டு, தான் ஒரு ஆண் என நிரூபித்துக் காட்டி சமூகத்தின் முன் வெட்கமின்றி நிற்க்கிறார்கள்…
தொடரும்…
📚 எழுதியவர்:
க. சங்கீதா
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
