மது பழக்கம் மற்றும் வன்முறை:
கணவன் மனைவியை அடிப்பது கொடுமைப்படுத்துவது கணவனின் இயல்பு… கணவன் மனைவியை அடிப்பது தவறில்லையாம் அடுத்தவன் வந்து அடிக்காமல் பார்த்து கொள்கிறானாம்… மனைவியை அடிப்பது பிறகு வந்த மன்னிப்பு கேட்பதும் இயல்பாகிவிட்டது. இது ஒரு loop மாதிரி தொடர்ந்து நடக்கிறது… மது அருந்திவிட்டும் இதுபோல் சைக்கோ தனமாக அடித்துவிட்டு நான் போதையில் அப்படி நடந்து கொண்டேன் என்றும் குடிக்கவில்லை என்றால் ஏதோ கோபத்தில் நடந்து கொண்டேன் என்றும் சொல்வார்கள்…
இந்த வீடியோவில் இயக்குநர் S U Arun kumar வன்முறையை பற்றியும் அத்திரைப்படத்தில் மன்னிப்பு கேட்பதை பெண்கள் சரி என்று ஏற்றுக் கொள்வதை பற்றிய தவறான புரிதலையும் அவர் அதை பயன்படுத்திய விளைவை பற்றி தெளிவாக கூறியுள்ளார்.
மனைவியை அடித்து துன்புறுத்துவதும் வலுக்கட்டாயப்பபடுத்தி அவர்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதும் கணவனுக்கே உரிய மொழிநடை… அதாவது கணவன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்… கணவன் மனைவியின் private life பத்தி மற்றவர்களிடம் பேசக்கூடாது அது அவர்களின் தனிப்பட்ட personal. இப்படி சொல்லி இவர்கள் படுத்தும் கொடுமையை வெளியே சொல்ல விடாமல் செய்கிறார்கள்…
திருமணம் ஆன பெண்கள் அவர்கள் கணவன் செய்யும் தவறுகளுக்கு அவர்கள் இடத்திலிருந்து கூறும் பதில் அவர் பாசம் இல்லாமல் இல்லை அதை வெளிப்படுத்தும் விதம் தான் தவறு என்கிறார்கள். இந்த அறியாமையை என்ன சொல்வது என்று தெரியவில்லை…
குடிப்பழக்கத்தாலும் வன்முறையாலும் நிறைய பெண்கள் பலியாகிறார்கள். ஒருவனுக்கு நான்கு குழந்தைகள் அவன் மனைவியிடம் நான்கு நாட்கள் ஏதோ சண்டையில் இருந்து இவன் குடித்துவிட்டு ஒரு நாள் வயக்காட்டில் மனைவியை பார்க்க அழைத்தான்… இந்த பெண் மாதவிடாய் காலத்தில் இருந்தும் கணவன் ஆசையாக கூப்பிடுகிறான் என்று அவனை பார்க்க போய்விட்டாள். இவன் அவளை கொடுமை செய்து உடல் முழுவதும் சூட்டுக்கோலால் சூடு போட்டு கொன்று விட்டான்.
இது போல இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. ஒரு பெண் ஒருவரை செய்து அவனின் கொடுமைகளை சகிக்க முடியாமல் இனி சேர்ந்து வாழ முடியாது என பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு மீண்டும் அந்த பெண்ணின் முன்னாள் கணவன் ஏதேதோ பேசி இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி கூட்டி சென்று கடப்பாரையால் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் குத்தி கொன்று விட்டு சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவித்தான்…
பெண்களை பொம்மை போல் வைத்து விளையாட குடி ஒரு மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. ஏற்கனவே சைக்கோ போல் உள்ளவன் மேலும் ஒரு மிருகம் போல் மாற உதவியாக இருக்கிறது. அதனாலே மதுவை தவிர்க்க மாட்டார்கள். அப்படி தவறுகள் நடந்தாலும் குடி போதையில் அப்படி நடந்துக் கொண்டேன் எனக்கு நடந்தது எதுவுமே தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். இது ஒரு புறம் சமூகத்தின் முன் சரியான குடிமகனாகவும் வீட்டிற்குள் சின்ன காரணங்களுக்கெல்லாம் மனைவி மீதும் வீட்டில் உள்ள பெண்கள் மீதும் பழி சுமத்தி அவர்களை அடிப்பது வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது என்று செய்துவிட்டு கட்டுப்படுத்த முடியாத கோபத்தால் அப்படி நடந்து கொண்டேன் என்று ஒவ்வொரு முறையும் அதே காரணத்தை சொல்வது. இல்லையெனில் அவர்கள் மீதுள்ள தவறை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை மீண்டும் பழியை மற்றவர்கள் மீதே திருப்புவது… நீ அப்படி செய்தாய் அதனால் தான் நான் இப்படி நடந்து கொண்டேன் என்று சாதாரணமாக சொல்லிவிடுவது…
அம்மு படத்தில் அவர் அந்த பைல் கிழிந்து போனதால் தான் என்னை அடித்தார் இல்லையெனில் அடித்து இருக்க மாட்டார். என்றும் அவரை நியாயப்படுத்தியும் என் மேல் தப்பே இல்ல இருந்தாலும் நான் என்னை திட்டிட்டே இருக்க… ஏன் இந்த வாழ்க்கை என்றெல்லாம் புலம்புவார்கள். ஆங்கிலத்தில் righteous anger என்ற ஒரு வார்த்தை உள்ளது கோபப் படுவதற்கு ஒரு நியாயம் உண்டு. ஆனா இவர்கள் பன்னுவதற்கு அந்த வார்த்தையை பயன்படுத்தவே முடியாது… Ammu திரைப்படத்தில் வன்முறையாக நடந்து கொள்ளும் கணவன் அவனை விட்டு பிரிந்து வழி தெரியாமல் பயந்து வாழும் மனைவி பிறகு எப்படி அவனுக்கு சரியான தண்டனையை வாங்கி கொடுத்தால் என்பது பற்றி பேசுகிறது…
இந்த வன்முறை ஒரு ஆண் வளர்ந்த பின் நடப்பதில்லை. அவர்கள் குழந்தையிலிருந்தே நடக்கின்றது. ஒரு இந்த உலகிற்கு வந்த அடுத்த நொடியிலிருந்து பாலினப் பாகுபாடுகள் அதை சார்ந்து அவர்களை treat செய்யும் விதம் மாறுபடுகிறது. குழந்தையை கொஞ்சும் விதங்களில் கூட வித்தியாசம் தான் என்பது எவ்வளவு பெரிய வன்மம். எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு பெண்ணின் கணவர் அவர் குழந்தையை கொஞ்சும் விதங்கள் டாய்! டோய்! இங்க பார்றா! ஏய்! அவன் பெயரை கூட கொஞ்சளாக அழைத்தது கிடையாது. முதலில் அந்த பெண் அவருக்கு குழந்தையை கொஞ்ச தெரியவில்லை என்று நினைத்தாராம். ஆனால் அவர் நண்பரின் குழந்தை பெண் குழந்தை வீட்டிற்கு அழைத்து வந்தபோது செல்லக் குட்டி பட்டுக்குட்டி உங்க அப்பா பேரு என்ன? என்று அழகாக அழைத்ததை கண்டேன் என்று கூறுகிறார். ஏன் இந்த வேறுபாடு என்று கேட்டால் அவள் பெண் குழந்தை. பெண் குழந்தையிடம் இப்படி தான் பேச வேண்டும் ஆண் குழந்தையிடம் இப்படி தான் பேச வேண்டும் என்ற வேறுபாட்டு திணிப்பு பச்சிளம் குழந்தையிடம் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. ஒரு ஆண் வன்முறையை கையில் எடுப்பதற்கு இன்னொரு ஆண் சிசுவிலிருந்தே வித்திடுகிறான். எல்லா ஆண்களும் இது போல தான் என்று நான் கூறவில்லை ஒரு சிலரையே கூறுகிறேன். இது ஒரு புறம் என்றால் அந்த குழந்தை வளர வளர வெளி உலகத்தை பார்ப்பதற்கு முன் பெற்றோர்களையே பார்த்து வளர்கிறார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் automatic ஆகவே அவர்கள் மனதில் பதிய ஆரம்பித்து விடுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள். அவனுடைய சிறுவயதில் அப்பா அம்மாவை அடிப்பது உதைப்பது என்று கண்டதை அவன் மனைவியிடம் அதே ஆதிக்கத்தை செலுத்துகிறான். ஆணாதிக்க சமுதாயம் மேலும் மேலும் ஆதிக்கத்தை செலுத்து இங்கு அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு தலைமுறைப் பெண்களையும் கொன்று கொண்டிருக்கிறது…
தொடரும்…
📚 எழுதியவர்:
க. சங்கீதா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

