க.சங்கீதா எழுதிய "கிராமங்களும் பாவைகளும்" கட்டுரை தொடர் | Kiramangalaum Pavaikalum - K.Sangeetha | www.bookday.in

கிராமங்களும் பாவைகளும் – க.சங்கீதா 

*கிராமங்களும் பாவைகளும்*

கிராமத்தின் செழுமையும் அழகையும் போற்ற வார்த்தைகளே இல்லை… அதேபோல் கிராமத்தில் சிக்கிக்கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சொல்ல அளவே இல்லை…

எல்லா இடங்களிலும் சாதாரணமாக பெண்களுக்கு நடக்கப்படும் அநியாயங்கள் இன்றளவும் கிராமங்களில் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டுதான் வருகிறது… கிராமங்களில் மட்டுமே அனைத்து விதமான அநியாயங்களும் சகஜமாக பார்க்கப்படுகிறது…

இவை அனைத்தும் ஆண்களின் தலைக்கு கீழ் குற்றம் செய்யாது குற்றவாளியாக தண்டனை அனுபவிக்கிறார்கள்… பரம்பரை பரம்பரையாக அவர்கள் நடத்தும் ஆணாதிக்கமும் சாதித்திணிப்பும் மாறாத ஒன்றாக வளம் வருகிறது… குடும்ப பொறுப்பு, வாரிசு பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, ஆண்களை திருத்தும் பொறுப்பு என எல்லாவற்றையும் பெண்களின் மீது திணித்துவிட்டு எந்த ஒரு தலைமை பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல் குடும்பத் தலைவன் என வளம் வருகிறார்கள்…

பெண்களை உடலளவிலும் மனதளவிலும் சேதப்படுத்தி அவர்களின் விருப்பத்தை கேட்காமல் ஆண்களுக்கு ஏற்றவாறு விருப்பத்தை திணித்து ஆட்டி வைக்கிறார்கள்…

வீட்டு வேலை, வயல்வேலை, கால்நடை பராமரிப்பு, குடும்பத்தினரை கவனித்தல், குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல் என எல்லாவற்றையும் மாடு போல் வேலை செய்யும் பெண்கள் தான் பலவீனமானவள் ஆண் தான் பலமானவன் என்று கற்பனையாக நம்பிக் கொண்டு அவன் ஆணையிடுபவனாகவும் இவள் படியாள் போலவும் பல பெண்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்…

மனதளவில் வலிமையாக இருக்கும் பெண்ணை பலவீனமாக்கி வார்த்தைகளால் கொன்று முட்டாளாக்கி மூலையில் அமர்த்தி விடுகிறார்கள்…
பெண்கள் எங்கு சிந்தித்தால் நம்மை அடிமைப்படுத்தி விடுவார்களோ என்ற பயத்தினால் படிப்பினை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள்….

தன் மகள் தன்னைப்போல் கஷ்டப்படக்கூடாது என்று ஒரு பெண்தான் யோசித்து போராடி படிக்க வைக்கிறார்கள்… படித்து பட்டதாரி ஆகி வந்தாலும் கிராமத்தில் சிக்கிக்கொண்டால் அந்த பெண்ணை ஆட்டி வைத்து விடுகிறார்கள்…

பெண்கள் படித்தாலும் வேலைக்குச் செல்வது அவசியமற்றது என்று நினைப்பவர்கள். பெண்கள் படித்தால் நல்லது கெட்டது தெரிந்து கொள்வார்கள் அடிமைத்தனம் இல்லாமல் போய்விடும்… அவர்களின் புத்தி மட்டுப்பட்டு இருக்கும் வரை தான் ஆண்களுக்கு நன்மை… அவர்கள் சொல்வதுதான் சரி அவர்கள் செய்வதுதான் சரி… பகுத்தறிவாக யோசிப்பதும் தர்க்க சிந்தனையும் அறவே கிடையாது…

ஆண் என்றால் மது அருந்துவான், நியாயத்திற்காக குரல் கொடுத்து சண்டை போடுவானாம் அதில் நியாயமே இருக்காது ஆனால் அப்படி சொல்வார்கள்… வீண் பெருமை பேசலாம். சாதி பெருமை பேசலாம்… தன் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் பேசலாம்… அதே வீட்டிற்கு வாழ வந்த பெண்ணையும் அவர்கள் குடும்பத்தையும் எப்படி வேண்டுமானாலும் ஏளனப்படுத்தி பேசலாம்…

நிற வேறுபாடும் நடந்து கொண்டு தான் இருக்கிறது… நிறத்தினால் உயர்வு தாழ்வும் அலட்சியமும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது…

மறுக்கப்பட்ட கல்வியும் முற்றுப்போன மனமும் கொண்ட பெண்களின் துயரங்கள் ஏராளம் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தொடரும்…

📚 எழுதியவர்:

க. சங்கீதா

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *