கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam) திரைப்பட விமர்சனம்
சில படங்களை எத்தனை தடவை வேணும்ன்னாலும் பாப்போம். அது காமெடி, டிராமா, ஆக்ஷன் படங்களுக்கு ஓகே. ஆனா, ஒரு படத்தோட சஸ்பென்ஸ் தெரிஞ்சப்பறமும் அந்தப் படத்த திருப்பித் திருப்பிப் பாக்கத் தோணாது. ஆனா, அப்படி பாக்கறவங்கள்ல நானும் ஒருத்தன். அது சஸ்பென்ஸ்க்காக இல்ல, கதைய இன்னமும் உள்வாங்கிக்க, கூடுதலா ரசிக்க.
மணிச்சித்திரத்தாழ் 200 தடவைகள் பாத்திருப்பேன், ஒவ்வொரு தடவையும் படத்துல ஏதோ ஒன்னு புதுசா இருக்கும். திருஷ்யமும் அப்படித்தான், அதோட ஒரிஜினல் ஜப்பானிஸ் Suspect X நாவலும் அப்படித்தான்.
The Sixth Sense, முழுசா பாத்து க்ளைமேக்ஸ்ல ஷாக் ஆகி, உடனே திருப்பியும் பாத்தேன். அந்த க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் வச்சு மீதி படம் ஃபுல்லா எப்படி நம்மளை
ஏமாத்தி இருப்பாங்கன்னு செமயா ரசிச்சேன்.
அப்படி தான் எனக்கு இப்ப கிஷ்கிந்தா காண்டமும்.
கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam) படத்துல அங்கங்க ஒரு சஸ்பென்ஸ் இருந்தாலும், அது புரியாததால கொஞ்சம் போரடிக்கற மாதிரி, ஸ்லோவா போற மாதிரி இருந்தாலும், கடைசி அரை மணிக்கூர்ல அந்த சஸ்பென்ஸ் உடைக்கும் போது ஃபர்ஸ்ட் டைம் தியேட்டர்ல பாக்கும் போது செமயா இருந்துச்சு. அப்பவே எழுதியும் இருக்கேன்.
இன்னிக்கு சஸ்பென்ஸ் தெரிஞ்சப்பறம் இன்னொரு தடவை திருப்பி பாக்கும் போது, மொத ஒன்னரை மணிக்கூர்ல நமக்கு எவ்ளோ விஷயங்கள் சொல்றாங்கன்னு இன்னும் அழகா ரசிச்சேன். அது அந்த மூணு கேரக்டர்ஸை இன்னமும் அழகா புரிய வைக்குது.
அதுலயும் அந்த கடைசி பத்து நிமிஷம், திருப்பித்திருப்பி ஒரு பத்து தடவை பாத்துட்டு இருந்தேன். சில தடவை ஆஸிஃப் அலியாகவும், சில சமயம் விஜயராகவனாகவும் இருந்து, அவங்களோட எடத்துல இருந்து அந்த பத்து நிமிஷங்களைப் பாக்கும் போது இந்தக் கதையோட ஆழத்த ரொம்ப ரசிக்கவும் முடியுது. ஒவ்வொரு தடவையும், எப்படிடா இப்படி எழுதித் தொலச்சேன்னு சொல்ல வைக்குது.
விஜயராகவனோட கேரக்டரோட complexity ரொம்ப கொழப்பமானது. அப்படியான ஒரு வாழ்க்கைய நெனச்சு கூடப் பாக்க முடியாதது. அதுக்கு ஆப்போசிட்ல ஆஸிஃப் அலியோட வாழ்க்கை, இன்னொரு complexity. இவங்க ரெண்டு பேருமாச்சும் அப்பா பையன், ஆனா நடுவுல வர்ற அபர்ணாவும் இவங்களோட உலகத்துக்குள்ள இன்னொரு complex கேரக்டரா இருக்கப் போறா. கண்ணைக் கட்டி காட்டுல விடற மாதிரி ஒரு உலகம் இவங்களோடது.
இவங்களுக்கு இதுல இருந்து தப்பிக்கவே முடியாது. மரணம் தான் ஒரே வழி. ச்சே. ஒரு ரைட்டர் ஜெயிக்கறது இங்க தான்.
கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam) க்ரைம் திரில்லர் மாதிரியே போனாலும், எனக்கு இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர். இன்னும் பாப்பேன், அந்த லாஸ்ட் அரை மணிக்கூரை மட்டும்.