அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவுத்துறைச் செயலாளராக பணியாற்றிய திரு. கிஸ்ஸிங்கரின் ஆதரவாளர்களும்,விமர்சகர்களும்- ஏன் அவரே தன்னைப் பற்றி- நம்பியதைப் போன்று அவர் மகாத்தான ஆளுமை என கூற முடியாது..

தற்காலத்தில்ஏராளமான நூல்கள் பல அவரது தொலைநோக்குகுறித்த அடிப்படையான கற்பிதங்கள் பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

1952-ல், அவரது 28-ம் வயதில், ஒரு  பட்டதாரி இளைஞராக தனது எதிர்கால கல்வி நிலையினை எவ்வாறு வரையறுத்துக் கொள்ள முயற்சிப்பாரோ அவ்வாறே இவர் ‘கன்ஃபுளுயன்ஸ்’ (confluence) என்ற பெயரில் ஒரு இதழினைத் தொடங்கி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலரை தன் இதழின் பங்களிப்பாளார்களாக இணைத்துக் கொண்டார்.பத்திரிகையின் வெளீயீட்டாளர்‘கன்ஃபுளுயன்ஸ்’ பத்திரிகைக்கு ஆதரவாக இருந்தார. இளைஞர் கிஸ்ஸிஙகரை ஓர் கடமையுணர்வுகொண்ட மனிதராக சித்தரித்தார். இப்பத்திரிகை, வாஷிங்டனில் அரசு கொள்கைகளை உருவாக்குபவர்களுடனும், நாசிகளினால் தூக்கியெறியப்பட்ட வேய்மர் குடியரசு ஆட்சியின் 1930-களின் ஆரம்பகாலகட்டங்களில் அரசியல் அநுபவம் கொண்டிருந்த பழமைவாத யூதஜெர்மானிய அரசியல் சிந்தனையாளர்களுடனும் தொடர்பு கொள்ள வழி வகுத்தது.

கம்யூனிச எதிர்நிலையாளர்களிடமும், வளரும் கூட்டு கலாச்சாரத்திலிடமும் பாசிசவாதத்தின் உணர்ச்சியைத் தூண்டும் கலவைகளைக் கண்ட பனிப்போர் தாராளவாதிகள், வேய்மர் நிகழ்வுகளின் சூட்சுமங்களை அறிந்த அறிவார்ந்த யூத ஜெர்மானிய அரசியல் சிந்தனையாளர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரங்களை அளித்திருந்தனர். கிஸ்ஸிங்கர், வேய்மர் அறிவுஜீவிகளுடான தனது தொடர்பினை பலப்படுத்தினாலும் எதிர்கால வாய்ப்புகளில் இவர்களது செல்வாக்கு இருக்காது என நம்பினார்.பிற்காலத்தில், கிஸ்ஸிங்கர், தனது மரபுகளற்ற அதீத நடவடிகைகளுக்கு பாசிசவாதத்தின் தீமைகளை காரணமாகக்காட்டி சப்பைக்கட்டு கட்டினார். அமெரிக்காவில் தஞ்சமான ஜெர்மானியர்கள் திடுக்கிடக்கூடிய வகையில், வேய்மர் குடியரசு ஆட்சியின் வெளியுறவு அமைச்சரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட அதிதீவிர வலதுசாரியான ‘எர்னஸ்ட்வோன் சாலமன்’ எழுதிய கட்டுரை ஒன்றினை தனது பத்திரிகையில் பிரசுரித்தார். தாராளவாதிகளுக்கு எதிராக தன்னுடன் இணைத்துக்கொண்ட ஒரு நண்பரிடம், “இக்கட்டுரை எனது சர்வாதிகார எண்ணத்தையும், நாசி அனுதாபத்தையும் காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது”, என கேலியாக கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், பின்னர் அமெரிக்க அதிபர் ‘ரிச்சர்ட் நிக்சனின்’ வெளியுறவுச் செயலராக பணியாற்றியபோது, குழப்பம் நிறைந்த உலகின் பல பாகங்களில் அமெரிக்காவின் அதிகாரத்தை நிலைநாட்டும் குறிக்கோளைப்பற்றிய அவரது ஒளிவு மறைவற்றப் பேச்சுக்கள் பாராட்டுக்களையும், கண்டனங்களையும் ஈர்த்தது. வெளியிடப்படாத இரகசிய ஆவணங்கள்(Classified) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உலகெங்கிலும் மேற்க்கொண்ட அடாவடி நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன.அவ்வாதாரங்களின்படி வழக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ‘The Price of Power’ (1983) என்ற நூலில் சேய்மர் ஹெர்ஷ் கிஸ்ஸிங்கரை ௐர் அப்பட்டமான சித்தப்பிரமைவாதியாக (Paranoic)சித்தரிக்கிறார். கிறிஸ்டோபர் கிட்சன்ஸ் தனது ‘The Trial of Kissinger’ (2001) நூலில் எழுதப்பட்டதை குற்றப்பத்திரிகையாக பாவித்து கிஸ்ஸிங்கரை போர் குற்றவாளியாக அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறுகிறார்.

The Trial of Henry Kissinger Henry Kissinger First Edition Signed

ஆனால், 97 வயதினை நெருங்கும் இத்தருணத்தில் அவர் மீதான வெறுப்புணர்ச்சி முன்பு போல .வீரியமாக இல்லை. தற்போது அதிகார மையத்தை நோக்கி முன்னேறி உயர்பதவிகளை வகிக்கும் சமயத்தில் முன்னாள் விமர்சகர்கள் அவர் மீதான தங்களது கருத்துக்களை அவருக்கு ஆதராவாக மாற்றிக்கொண்டனர். அதாவது, ஹிலாரி கிளிண்டன், யேல் பல்கலைகழகத்தில் சட்ட மாணவராக இருந்த போது அமெரிக்காவின் கம்போடியா மீதான குண்டு வீச்சினை கடுமையாக எதிர்த்தார். ஆனால், கிஸ்ஸிங்கரின் ஒரு புத்தக மதிப்புரையின்போது, தான் வெளியுறவுச் செயலராக இருந்தபோது அவர் தம்முடன் பகிர்ந்து கொண்ட தந்திரமான சூழ்ச்சி திறனுள்ள கருத்துக்களை மிக உணர்ச்சிபூர்வமுடன் நினைவு கூர்ந்து “அவர் ஒரு நல்ல நண்பர்” என புகழாரம் சூட்டுகிறார்.2008 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது நடந்த பொதுவிவாதங்களின் ஒன்றில் ஜான் மெக்கன்னேயும், பராக்கா ஒபாமாவும் அரசின் ஈரான் வெளிநாட்டுக் கொள்கைகளின் தங்களது எதிர்ப்பிற்கு கிஸ்ஸிங்கர் ஆதரவு தருவதாக குறிப்பிடுகின்றனர். இனப்படுகொலைகளை தவிற்க தவறியதாகஅமெரிக்க அரசினை கடுமையாக விமர்சித்ததற்காக மிகவும் அதிகமாகக் கொண்டாடப்பட்ட  ஸமந்தா பாவர், ஹென்றி கிஸ்ஸிங்கர் பரிசினை அவரிடமிருந்தே பெற்றார்.

வரலாற்று ஆசிரியர்களுக்கும், புத்தக வெளீயீட்டாளர்களுக்கும் கிஸ்ஸிங்கர் தான் அள்ள, அள்ள குறையாத அட்சய பாத்திரம் என நிரூபிக்கிறார்.எண்ணிக்கையிலடங்கா மனோதத்துவ ஆய்வுகள், முன்னாள் பெண் தோழியர்களின் நினைவுக் குறிப்புகள், அவர் மேற்கொண்ட அரசியல் ஒப்பந்தங்கள் பற்றிய வணிக நூல்கள் இதற்கு சான்றாகும்.அவரைப்பற்றிய சமீபத்திய மதிப்பீடுகளில் மிக முக்கியமான இரண்டு 2015-ல் வெளிவந்தன. நியால் ஃபெர்குசனின் கிஸ்ஸிங்கரது அங்கீகரிக்கப்பட்ட சரிதையின் முதல் தொகுதி அவரை வலது கண்ணோட்டத்துடன் கனிவாக மதிப்பிட்டது. இரண்டாவது, கிரேக் கிராண்டின் “Kissinger’s Shadow” அவரை இடதுசாரி நோக்கில் விமர்சன ரீதியாக அணுகியது. இவ்விருவரும் எதிரெதிர் திசையில் பயணித்தாலும் கிஸ்ஸிங்கரது யதார்த்தவாதத்தின் ஆழத்தை கேள்விக்குள்ளாக்குவதில் ஒன்றிணைந்தனர். பெர்குசனின் பார்வையில், கிஸ்ஸிங்கர் ஒரு இலட்சியவாதியாக நுழைகிறார். அவர், போருக்குப் பிந்தைய ஒவ்வொரு வெளியுறுவு கொள்கைகளின் பாணியையும் கூர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். பல தடைவைகள் தோல்வியுறும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தன்னை இணைத்து கொள்கிறார். இறுதியில, அதிரஷ்டவசமாக நிக்சனுடன் இணைகிறார். ராண்டினின் கிஸ்ஸிங்கர், யதார்த்வாதிகளின் மொழியை பேசினாலும், – “நம்பகத்தன்மை”, “இணைப்பு”, “அதிகார சமநிலை” என நோக்கின் உண்மையில் தீவிரமான சார்பியல்வாதியாகத்தான் (Relativist) தெரிகிறார்.

Pamela Paul on Twitter: "A few things happening at The New York ...

“The Inevitability of Tragedy” புத்தகத்தை எழுதிய பாரி கெவன் கிஸ்ஸிங்கரின் கொள்கைகளை தூற்றுவதும், போற்றுவதும் அல்லாத பள்ளியை சேர்ந்தவராவார்.சர்வதேச விவகாரங்களைப் பற்றி யாருமே ஆழமாக சிந்திக்கவில்லை என அவர் கூறுகிறார். அமெரிக்கர்கள் நம்புவதற்கு அல்லது நம்ப விரும்புவதற்கு எதிராக கிஸ்ஸிங்கரின் எண்ண ஓட்டங்கள் உள்ளது எனக் கூறுகிறார். நியூயார்க் டைம்ஸ் புத்தக மதிப்பாய்வின் ஆசிரியரான கெவன், கிஸ்ஸிங்கரின் பெருஞ்சிறப்பு வாய்ந்த வெளியுறவு கொள்கை முடிவுகள் அவர் வேய்மரில் குழந்தையாக இருந்த போது பெற்ற அனுபவங்களை அடையாளப்படுத்துகிறது என்கிறார். வேய்மர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும்போது (1933) கிஸ்ஸிங்கருக்கு பத்தே வயதாயினும், அப்போதையத் தாக்கம் அவரிடம் தொடர்ந்தது என்பது மிகைப்படுத்தலாக இருப்பினும், அமெரிக்காவில் குடியேறிய ஜெர்மானிய மூத்த குடிமகன்களுடான அவரது தொடர்பு வியப்பூட்டுவதாக உள்ளது என்கிறார். எப்படியெனில், வெய்மர் குடியரசின் தாராளவாத மக்களாட்சி மக்களாட்சி முறையையேக் குலைத்துவிடும் என ஜெர்மானிய மூத்த குடிமகன்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது என்கிறார.

ஐன்ஸ் கிஸ்ஸிங்கர் பவேரியாவில் உள்ள ஃபோர்த் நகரில்1923-ல் பிறந்தார்.அவரது குடும்பம் கிரிஸ்டல்நாச்ட் கலவரத்திற்கு சில நாட்கள் முன்பு நியூயார்க் நகருக்கு தப்பி ஓடியது. அங்கு ஒரு ஜெர்மன் குடியிருப்பு பகுதியில் குடியேறினர். இது சில நேரங்களில் 4-வது ரீக்ச் என அழைக்கப்பட்டது. அவர் கால்பந்து போட்டிகளில் கையாளும் தந்திர உபாயங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தனது நண்பர்களுக்கு காதலில் வெற்றி பெறும் வழிகளை சொல்லிக்கொடுத்தார். பள்ளியில் படிக்கும்போது ஷேவிங்க் ஃப்ரஷ் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்தார். கணக்கராக ஆசைப்பட்டார்.

1942-ல் இராணுவப்பணியில் சேர்ந்தார். தன்னைவிட 15 வயது மூத்த ஃப்ரிட்ஸ் க்ரேமர் அவரது நண்பரானார். அவரது வளரும் பிராயத்தில்  தன்  மீது மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியவராக க்ரேமரை குறிப்பிடுகிறார்.அவர் இராணுவத்தின் பணி புரிந்த காலம் மறக்க முடியாத அனுபவங்களை கொண்டதாகும். அவர் பிறப்பில் ஜெர்மானியராயினும், நான் பார்த்த அமெரிக்கர்களிலேயே மிகச்சிறந்த அமெரிக்கர் என அவரது உற்ற நண்பன் கூறுகிறார். இரண்டாம் உலோகப்போரில் யு.எஸ் ஆக்கிரமிப்பின் போது தனக்கு அதிகாரம் செய்யும் வாய்ப்பு கிளர்ச்சி ஊட்டுவதாக இருந்ததாக  .கூறுகிறார். 1945-ம் ஆண்டில், கிஸ்ஸிங்கர் ஹனோவருக்கு வெளியே உள்ள அஹ்லெம் வதை முகாமின் விடுதலையில் பங்கேற்றார்.கெஸ்டோபா (Gestopa) ஸ்லீப்பர் செல்-ஐ உடைப்பதில் அவரது பங்கிற்கு வெண்கலப்பதக்கம் பெற்றார்.

அரசியல் அறிவியல், ஆங்கில இலக்கியம் கற்கும் விருப்பத்துடன் 1947-இல் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அங்கு தன் வாழ்வின் இரண்டாவது வழிகாட்டியான வில்லியம் யாண்டல் எலியட் என்ற வரலாற்று ஆசிரியரை சந்தித்தார்.வில்லியம், சர்வதேச விவகாரங்களில், பல அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தவராவார்,இளைஞரான கிஸ்ஸிங்கரை நடைமுறை அரசியலை (Realpolitik- sic-)- இது நம்பிக்கைகள், கோட்பாடுகள்,நெறிமுறைகள் அல்லது ஒழுக்கங்களை அடிப்படையாக கொண்டதில்லை மாறாக யதார்த்தமான நடைமுறைக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. 1914-ல் உருவாக்கப்பட்ட சொல். மூலம்- ஜெர்மன் மொழி இதனை விளக்கும் கிளாளஸ்விட்ஸ் (sic-பிரஸ்ஸிய ஜெனரல், இராணுவ கோட்பாட்டாளார்), பிஸ்மார்க்(sic-பழமைவாத ஜெர்மன் அரசியல்வாதி, இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர்),போன்றவர்கள் ஈர்க்கவில்லை. (sic-மனித சுதந்திரத்தை வலியுறுத்தும்) இம்மானுவேல் காண்ட், நாகரிக சிதைவினை அலசி ஆராய்ந்த ஆர்னால்ட் டோயின்பி(sic- ஒரு சமூகத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான யோசனைகள்,விதிமுறைகள் ஒரு சிலரால் மட்டுமே உருவாக்கப்பட்டு பலரால் பின்பற்றப்படும் – என்பது இவரது கோட்பாடு),எழுதிய நூல்-12 தொகுதிகளடங்கிய , A Study of History -1934-61), மற்றும் ஓஸ்வால்ட் ஸ்பெங்லர் (sic-தேசியவாதி, ஜனநாயக விரோதவாதி) கருத்துக்களால் கவரப்பட்டார். [sic-இவர்கள் எல்லோருமே ஜெர்மானிய தத்துவவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது]

Senators don't want veto power over the president's national ...
Richard Nixon, Henry Kissinger, and the Congress: Ending US

இச்சிந்தனையாளர்களின் கருத்துக்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒட்டு போட்டு வரலாறு எவ்வாறு இயங்குகிறது என்று அவரது கோணத்தில் நோக்கினார், வரலாறு, தாராளமய முன்னேற்றம் அல்லது வர்க்க உணர்வு அல்லது பிறப்பு, முதிர்ச்சி, மற்றும் வீழ்ச்சியின் கால வட்டத்தின் கதை அன்று. மாறாக, வரலாறு “அர்த்தமற்ற சம்பவங்களின் தொடர்”. மனிதவிருப்பங்களை அவசரகதியில் செயல்படுத்தி உருவாக்கப்பட்ட வடிவமாகும்.தோல்வியுற்றோர் தங்களது இன்னல்களுக்கான வரலாற்றுக் காரணங்களைத் தேடிக்கொண்டிருக்க வெற்றியாளர்களோ தாங்கள் பெற்றது மாபெரும் வெற்றி என பகட்டு சொற்களால் பறைசாற்றும் பொருட்டு வரலாற்றினை உண்மைக்கு புறம்பாக திரித்து கூறுவர் என்பதை  இளம் போர்வீர்ரான கிஸ்ஸிங்கர் அறிந்து கொண்டார்.

அவர் இளங்கலை பட்டதாரியாக சமர்ப்பித்த  சரித்திரத்தின் பொருள்(The Meaning of History) என தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரையில் குறிப்பாக ஒரு வாக்கியத்தை ஃபெர்குசனும், கிராண்டினும் சுட்டி காட்டுகின்றனர்.“The realm of freedom and necessity cannot be reconciled except by an inward experience.”சுதந்திரத்தின் எல்லையையும், இன்றியமையாமையின் எல்லையையும் ஒருமைப்படுத்துவதென்பது உள்ளுணர்விலாயே சாத்தியமாகும்”.இப்படிப்பட்ட அகநிலை உலகப்பார்வை கிஸ்ஸிங்கருக்கு இருப்பது வியப்பளிக்கலாம். ஃப்ரெஞ் நாட்டு ஜீன் பால் சாத்ரேயின் இருத்தலியல் வாதம்(Existentialism) அப்போது ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பிரபலமானது. கிஸ்ஸிங்கர், தனது ஆய்வு கட்டுரையில் ஜீன் பால் சாத்ரேயை மேற்கோள் காட்டுகிறார்.

1951-ல் பட்டதாரியாக படித்துக் கொண்டிருக்கும்போது இராணுவ செயல்பாட்டு ஆராய்ச்சி அலுவலகத்தில் பகுதிநேர ஆலோசகராக பணி புரிந்தார். அப்போது, இராணுவத்துறையினருக்கு உளவியல் யுத்தகலையின் மீதான அதிவிருப்பத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார்.ஹார்வர்டில் கிஸ்ஸிங்கரது சகாக்கள், யு.எஸ் பாதுகாப்பு நிலைமைக்கு ஏற்றவாறு அவர்களது தன்குறிப்பை (resume) எழுதும்போது முனைவர் பட்டத்துக்காக கிஸ்ஸிங்கர் எழுதிய வியன்னா காங்கிரஸ் மற்றும் அதன் விளைவுகள் ஆய்வுக் கட்டுரை விசித்திரபாணியில் பழமையாக இருப்பதாக கண்டனர். ஆனால், அவரது விளக்கவுரையின் முதல் வாக்கியத்திலேயே தெர்மோநியூக்ளியர் ஆயுதங்களை முன்னிலைப்படுத்தி வாஷிங்டன் வாசகர்களுக்கு தெளிவான, ஐயமற்ற  வரலாற்று ஒப்புவுமையை தெரிவிக்கிறார். நெப்போலியனின் ஃப்ரான்சை கட்டுப்படுத்த பிரிட்டிஷ், ஆஸ்ட்ரிய பேரரசு மேற்கொண்ட முயற்சிகள் தற்போதைய சோவியத் யூனியனை கையாள்வதில் தெளிவான படிப்பினைகளை தெரிவிக்கின்றன என அறுதியிட்டு கூறுகிறார்.

கிஸ்ஸிங்கர் சில நேரங்களில் அமெரிக்காவின் மெட்டர்னிச் என அழைக்கப்படுகிறார். அவர் நெப்போலியனுக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பக்கண்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு அமைதி நிலவ காரணமாக இருந்தவர்.

ஆனால், பல துறைகளில் சிறப்பாக பங்களித்தவர்களைப் பற்றி கிஸ்ஸிங்கர் எழுதும்போது மெட்டர்னிச் மாடலிலும் கூட குறைபாடுகள் உள்ளதாக வலியுறுத்தி கூறுகிறார்.

President Gerald Ford summons Secretary of State Henry Kissinger …

மெட்டரனிச்சின் குறைபாடுகளே, வரலாற்றின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் ஒரு பாடமாக அமைந்து,அறிவிற்கு எட்டமுடியாத இக்கட்டான நிலைமைகளில் கூட முட்டுக்கட்டுகளை உடைத்தெறியும் மாபெரும் சக்தியை அளிக்கிறது; முடிவே காணமுடியாத நிலைமைகளில் வெற்றி அல்லது தோல்வியினை கருத்தில் கொள்ளாமல் சவாலாக ஏற்றுக்கொண்டு ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலை அளிக்கிறது; மனிதர்கள் சகாப்தமாவது, அவர்கள் எதை அறிந்திருக்கிறாரகள் என்பதை பொறுத்ததல்ல,அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பது கூட பொருட்டாகாது ஆனால் அவர்கள் அடையவேண்டிய குறிக்கோள்களை நிர்ணயிப்பதை பொறுத்ததாகும்.

பனிப்போரின் பயங்கர விளைவுகளை முடிவுக்கு கொண்டு வரலாம் எனக் அப்பாவித்தனமாக கூறும் சமூக விஞ்ஞானிகளை புறம் தள்ளுகிறார். வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் அணு ஆயுதங்கள் குறித்த ஆய்வுக் குழுவை நிர்வகிக்கத் தொடங்கினார்

1954 ஆம் ஆண்டு ஹார்வர்டு பலகலைக் கழகம் அவர் மிகவும் எதிர்பார்த்த உதவிப் பேராசிரியர் பணியை அவருக்கு அளிக்கவில்லை. ஆனால் பல்கலைக் கழகத் தலைவராக (Dean) இருந்த மெக்ஜார்ஜ் பண்டி அவரை வெளியுறவுக் கவுன்சிலுக்கு பரிந்துரைத்ததன் அடிப்படையில் அங்கு பணியாற்ற ஆரம்பித்தார். அங்கு அணு ஆயுதங்கள் குறித்த ஒரு ஆய்வுக் குழுவைத் தொடங்கி அதனை நிர்வகித்து வந்தார். அன்றைய ஐசனோவர் அதிபராக இருந்த வாஷிங்டன் வட்டாரத்தில் ஒருவர் அணுஆயுதங்கள் குறித்து ஆதரித்து எழுதினால் கவனிக்கப்படுவார் எனும் நிலை இருந்தது. அவர் எழுதிய“Nuclear Weapons and Foreign Policy.”நூலில், அதிகரிக்கும் சோவியத் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த ஐசனோவர் அரசு, போர்த்திறன் மிகுந்த அணு ஆயுதங்களை மரபுவழி போரில் உபயோகிக்க வேண்டும்; அன்ணு ஆயுதங்களை இறுதிகட்ட மரணநாள் நிகழ்வுக்கு வைத்திருப்பது சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கவிடாது தடுக்கின்றது என கூறியதன் மூலம் பிரபலமானார். ஐசனோவரின் ஆலோசகர்கள் இதனைத்தான் அவரிடம் வெகுகாலமாகச் சொல்லி வருகின்றனர் என்பதை கிஸ்ஸிங்கர் அறிந்திருக்கவில்லை.

இந்நூல் புலமையற்றது என சக பேராசிரியர்களது எதிர்ப்புக்கிடையில் பண்டி உதவியுடன் ஹார்வர்ட் பல்கலையில் கிஸ்ஸிங்கர் பேராசிரியராக பணியில் சேரந்தார். அதிபர் ஜான் ஃஎப் கென்னடியின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அப்போதிருந்த பன்டி கிஸ்ஸிங்கரை கன்சல்டன்ட் ஆக ஒப்பந்தம் செய்து கொண்டார். பன்டி கிஸ்ஸிங்கர் படித்த ஹார்வர்ட் பல்கலையின் முன்னாள் டீன் ஆவார்.

ஜார்ஜ் கென்னன், நிக்கோலஸ் ஸபைக்மேன் போன்ற முன்னிலை பாதுகாப்பு அறிஞர்கள் மத்தியில் கிஸ்ஸிங்கர் ஓர் இரண்டாம் தர அறிஞரே ஆவார்.

காலனி ஆதிக்கத்திற்குபிந்தைய காலத்தில் பல நாடுகள் அமெரிக்க அரசியலமைப்பு முறையை பின்பற்றாமல் பொருளாதார விடுதலையை வலியுறுத்தும் கம்யூனிச கொள்கைகளை ஆதரிப்பதாக ‘ஆரென்ட்’ தனது ‘ஆன் ரீவால்யூஷன்’(on Revolution) நூலில் கூறிய குற்றச்சாட்டை ஆதரித்து கிஸ்ஸிங்கர் மும்முரமாக பிரசங்கம் செய்தார்.

Kissinger and China | ChinaFile

முதலாளித்துவ சமுதாயம் என்பதை விட தற்போதைய கட்டுப்பாடு வரம்புகளற்ற சமுதாயம், 19 –ம் நூற்றாண்டு பொதுவுடமை சமூதாயத்தைவிட புரட்சிகரமானது என்கிறார்.நாம் ஆன்மீகத் தாக்குதலைத் தொடங்க வேண்டும் என கூறுகிறார். உலகை அமெரிக்க மயமாக்கும் முயற்சியை கேள்வி கேட்காதது நடுநிலை மதிப்பீட்டு ஆற்றலுடைய அறிஞரின்(Critical Intellectual) குணாதிசயமாகாது.

நவீன வெளியுறவுக் கொள்கை யதார்த்தவாதத்தின் தந்தை ஹான்ஸ் மோர்கெந்தாவ் புலம் பெயர்ந்தவர்களில் கிஸ்ஸிங்கரது முக்கிய நண்பர், அவர் எழுதிய “Politics Among Nations” (1948) பிரபலமானது. கிஸ்ஸிங்கரை போலல்லாது அரசியல் லாபத்துக்காக தனது கருத்தை விட்டுக் கொடுக்காமல் அரசின் வியட்நாம் கொள்கையை எதிர்த்ததால் கன்சல்ட்டன்ட் வாய்ப்பை ஜான்சன் ஆட்சியில் இழந்தார்.

மோர்கெந்தாவ் மற்றும் கிஸ்ஸிங்கர் இருவரும் அரசியல் நடைமுறையை (Realpolitik) கடைப்பிடிப்பதாக கூறுவதை மறுத்தனர்.வளர்ந்து வரும் நடுத்தர சமுதாய வர்க்கத்தில் இராஜதந்திரம் இனி அரச சபையின் விருப்பு, போட்டிகளை கணக்கில் கொள்ளாது.. விவேகமான வெளியுறவு கொள்கை, பொதுமக்கள் ஆதரவு,  வணிகம், சட்டம் ஆகியவற்றை அரசு ஒருங்கிணைத்து எதிரிகளுக்கு தெரியும்படியாக தங்களது பலத்தைக் காட்டவேண்டும்

கிஸ்ஸிங்கர், வெளியுறவு விவகாரங்களை திறனுடன்  மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தார். மோர்கெந்தாவ் அரசு பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக  இருந்தாலும் அதனை துஷ்பிரயோகம் செய்வதை எதிர்த்தார். விதயட்நாமில் யு,எஸ் சமநிலையினிலிருந்து பிறழ்ந்ததை சாதகமாக பயன்படுத்தி தங்களது தேசிய நலன் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் வேறு நாடுகளும் அதையே செய்தன என்கிறார். மனித குலத்திற்கான முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக கூறும் கருத்தியல் வாதத்தை அவர் ஏற்கவில்லை, சர்வதேச விவகாரங்களில் போர் தவிர்க்க முடியும், ஆனால் போர் ஆயத்தங்களை தவிர்க்க முடியாது என மோர்கெந்தாவ் . நம்புவதாக கெவன் கூறுகிறார்,  யதார்த்தவாதிகளைவிட கருத்தியல்வாதிகள் உலக அமைதிக்காக தொடுக்கும் இராணுவ தாக்குதல் அதிக அழிவினை ஏற்படுத்தும் என்கிறார்.

யு.எஸ் வெல்லமுடியாது என தனிப்பட்ட முறையில் தன்னிடம் கூறினாலும் வியட்நாம் போரை பகிங்கரமாக ஆதரித்தது மோர்கெந்தாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.கிஸ்ஸிங்ரது சமகாலத்தவரான அரசியல் நிபுணரான ஷெல்டன் வோலின்,கிஸ்ஸிங்ர் அரசியல்துறையில் தனது முன்னேற்றத்துக்காக மேற்கொண்ட சந்தர்ப்பவாத செயல்களை அலசி ஆராய்கிறார்,   மேலோட்டமாக நோக்கின் உன்னத குடியினரை விரும்பாத நிக்சனுக்கு கிஸ்ஸிங்கர் இசைவில்லாதவராக காணப்பட்டாலும் பொருத்தமான ஜோடிதான் என்கிறார். உலக வரலாற்று அரங்கில் ஒரு உன்னதமான இடத்தை அடைய கிஸ்ஸிங்கர் உதவுவார் என நிக்சன் நம்பினார். நிக்சனுடன் பணி செய்யவேண்டியுள்ளதே என தனது நண்பரிடம் குறைபட்டுள்ளார்.நிக்சனுக்கு எதிராக போட்டியிட்ட ஹுப்பர்ட் ஹம்ப்ரே வெற்றி பெற்றிருந்தாலும் தனக்கு இதே பதவி கிடைத்திருக்கும் என கூறியுள்ளார்,

1968-ல், வியட்நாம் போரின்போது, ஜான்சனின் அமைதி முயற்சி வெற்றி அடைந்தால் 1969 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமாக இருக்குமென நிக்சனும், கிஸ்ஸிங்கரும் கூட்டு சதி செய்து அந்தரங்கப் பேச்சுவார்த்த மூலம் தெற்கு வியட்நாமை அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவிடாமல் தடுத்தனர்.

The Impeachment Inquiry Must Be Broad, and the Reason Why Is Henry …

அமெரிக்காவின் கெளரவுத்துக்கு களங்கம் ஏற்படாதவாறு வியட்நாம் போரினை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியுடன்  நிக்சன் ஆட்சிக்கு வந்தார். அதற்கு மாறாக, வடக்கு வியட்நாமிடமிருந்து அதிக சலுகைகளைப் பெற யு.எஸ் தாக்குதலை தொடர்ந்தது. வட வியட்நாமுக்கு போர்த்தளமாக கம்போடியா இயங்குவதாகக் காரணம் காட்டி, மிகப் பெருமளவில் அதன் மீது குண்டு வீசியதில் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மாண்டனர். இது, கம்போடியாவில் கம்யூனிஸ்ட் ‘போல் பாட்’ உயர்வை விரைவு படுத்தியது கிஸ்ஸிங்கர் தாமே தனிப்பட்ட முறையில் அவரது இஷ்டத்திற்கு போர் தாக்குதலை கையாண்டதின் உள்நோக்கம் என்னவென்று பல வரலாற்று ஆசிர்யரகளும் வியப்படைகிறார்கள்.

உலக அமைதியை பேணும் பொருட்டு சின்னஞ்சிறு நாடுகளுடன் போரிட்டு ஆயிரக்கணக்கில் தனது போர் வீர்ர்களை பலியிடும் கிஸ்ஸிங்கரின் அவலமான தப்புக்கணக்கு எவ்வாறு யு.எஸ்-ன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிலைநாட்டும் என்பது கேள்விக்குறியதாகும்.

இதைப்போன்ற தொடர்ச்சியான   முயற்சிகள் அமெரிக்காவின் மீதான நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்குப் பதிலாக சிதைத்தது. வடக்கு வியட்நாமின் மீதான மிகப்பெரிய குண்டு வீச்சு கூட அதனை பணியவைக்க முடியவில்லை.

உலகின் ஏதோவொரு பகுதியில் நடக்கும் அரசியல் நிகழ்வுக்கு இன்னோரு பகுதியில் பதில் நிகழ்வினை ஏற்படத் தூண்டும் எள்ற கிஸ்ஸிங்கரது கருத்தை கெவன் ஆதரிக்கிறார். 1971-ல் வங்காளதேசத்தில் ஜெனரல் யாஹ்யாகான் நடத்திய இனப்படுகொலையை நிக்சனும், கிஸ்ஸிங்கரும் இரஷ்யாவிற்கு எதிராக ஆதரித்தனர். இந்தோனேஷிய அதிபர் கிழக்கு திமோரில் கம்யூனிஸ்டுகளை கொன்று குவிப்பதற்கு கிஸ்ஸிங்கர் ஆதரவு அளித்தார்.

கிஸ்ஸிங்கர் ஒரு யதார்த்தவாதி என வலியுறுத்தும் கெவன், அவரது அரசியல் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை விரிவாக பேசாதிருப்பது முரணபாடாக உள்ளது.அதாவது. சோவியத் யூனியுனுடன் இணைந்து பதற்றத்தை தவிப்பதற்கான முயற்சி, சைனாவுடனான நல்லுறவு, 1973-ல், அரேபிய-இஸ்ரேல் போரினை கட்டப்படுத்திது ஆகியவற்றை கூறலாம். கிஸ்ஸிங்கரை எங்கு ஆதரிப்பது கடிதோ அங்கெல்லாம் கெவன் மிகுந்த முனைப்பு காட்டுகிறார்.

 சிலியில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அலென்டேயை கொன்று ஜெனரல் அகஸ்டோ பினோச்செட் பதவி ஏற்க அமெரிக்கா உதவியது. மக்களின் பொறுப்பற்ற தன்மையால் சிலி கம்யூனிச நாடாக மாறுவதை நின்று வேடிக்கை பார்க்க முடியாது என கிஸ்ஸிங்கர் கூறியது ஜனநாயகத்திற்கும் அதிகாரத்திற்கும்  உண்டான அவரது தர்ம சங்கடமான உறவினை குறிக்கிறது.பாட்டாளி மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஊதிய உயர்வு அளித்தது, சோசலிச மனிதாபிமானத்தின் உயர்வினை இளைஞர்களுக்கு போதித்தது என அலென்டேயின் பாவங்களையும், பண்பு குறைபாடுகளையும் கெவன் பட்டியலிடுகிறார். ஆனால், சதி செய்து ஆட்சியில் அமர்ந்த சர்வாதிகாரி  பற்றி மதிப்பீடு செய்வதிலிருந்து கெவன் பின் வாங்குகிறார்

Follow Live: Henry Kissinger speaks at LBJ Library's Vietnam War ...
Nixon, Kissinger, and the Madman Strategy during Vietnam War: Using Nuclear Threats to Intimidate Hanoi and Moscow

இதேபோல், அலென்டேயின் ஆட்சி, சோவியத்தின் மேலாதிக்கத்திற்கு வழி வகுக்கும் என நிக்சனும், கிஸ்ஸிங்கரும் கலக்கமடைந்ததை ஒதுக்கித்தள்ள முடியாது என்று கெவன் வலியறுத்துவது கேள்விக்குறியதாகும். ஏனெனில், சீன எதிர்ப்பால் அடைந்த நஷ்டங்கள், லத்தீன் அமெரிக்காவில் தன்னை பிரதித்துவப் படுத்துவதில் அடைந்த தோல்வி, சிலிக்கு அளித்து வந்த நிதியுதவியை பெருமளவில் குறைத்துக் கொண்டது ஆகிய பல காரணங்கள் வளரும் நாடுகளில் அமெரிக்காவை எதிர்த்து போட்டியிடுவதை இரஷ்யா பெருமளவில் குறைத்து விட்டதை சுட்டிக்காட்டுகிறது.

சிலியில் அரங்கேற்றிய சோக நாடகம், கிஸ்ஸிங்கர் எரிச்சலைடையும்படி, யாரும் நினைத்து பார்க்காத உலக மனித உரிமை இயக்கம் உதித்தெழக் காரணமாக இருந்தது.

“எனது பிரபலத்திற்கு காரணம் நான் தன்னந்தனியாகவே செயல்பட்டதுதான்”, என்று அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் விமர்சகர்களும், ஆதரவாளர்களும் அவரது சாதனைகளை கணக்கில் கொண்டால் நடப்பிலிருக்கும் வெளியுறவு கொள்கைகளின் முன்னோட்டங்களை உள்வாங்கி ஊகத்திலேயே செயல்பட்ட ஒரு சாதாரண மனிதன்தான் என்கின்றனர்.கிழக்கு திமோர், கம்போடியா, பல இலத்தீன் நாடுகளின் தலையீடுகளில் முறையே சுகர்டோ, ஜான்சன், அலென்டேஆகியோரின் தடங்களைக் காணலாம்.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு கிளின்டனின் NATO விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாரஜ் கென்னன், அதிகார சமநிலை கோட்பாடினை ஆதரித்து ஒன்றிணைந்த ஜெர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அணு ஆய்த பரவலுக்கு குரல் கொடுத்த மியர்ஷெய்மர் போன்று அல்லாது கிஸ்ஸிங்கர், பதவி விலகியபின், அரசின் ஒருமித்த கொள்கைகளை எப்போதுமே எதிர்த்து சவால் விட்டது கிடையாது. பனிப்போர் காலத்துக்குப்பின், அமெரிக்காஉலகின் முதன்மை சக்தியாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறுசெயல் நோக்கம் எதையுமே கிஸ்ஸிங்கரால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

அவர் பழமைவாதிகளின் குறுக்கீடுகளை விமர்சித்தாலும் பணாமாவிலிருந்து இராக் வரையிலான யு.எஸ் இராணுவ சாகசங்கள் இவரது ஒப்புதல் இல்லாமல் அரிதாகவே அரங்கேறியுள்ளன. உலகை ஒழுங்குமுறைப்படுத்தும் அவரது தீர்க்காலோசனைகளிலெல்லாம் உலகின் மகாசக்தியாக எதிர்பாராதவிதமாக உயர்ந்த அமெரிக்காவின் பலத்தை சரிவர உபயோகிக்கத் தெரியவில்லை. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய குடியரசுக்கட்சியின் பாராம்பரியத்தில் இத்தகைய நிலைமையை கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.

Dick Cheney Recovering After Getting a New Heart – The New York Times

யு.எஸ் உதவி ஜனாதிபதி டிக் செனாய்யின் ‘one-percent-doctrine’,கார்ல் ரோவின் “we create our own reality”மேற்கோள், ஆப்கானிஸ்தானத்தின் போர்களத்திற்கு அப்பால் உள்ள சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளின் மீது தொடுக்கும் ட்ரோன் தாக்குதல் ஒரு சட்டபூர்வ நடவடிக்கை என  ஒபாமா அரசின் தரப்பு வழக்கறிஞர் கம்போடியாவின் தாக்குதலை முன்மாதிரியாக காட்டுவது, யேமனில் இராணுவ நடவடிக்கை, இரானில் காசிம் சுலைமானை கொல்வது என்பவையெல்லாம் கிஸ்ஸிங்கரது ‘நம்பகத்தன்மை’யை (‘Credibility’) குறிப்பிடுவதாகும். இவ்வாறு, கிஸ்ஸிங்கரது ‘விதிகள்’தோற்றுவாய் அவரிடமிருந்து இல்லையென்றாலும், கலந்துரையாடல்களில் அவரது அரசியல் வாழ்க்கையினை மேற்கோள் காட்டாமல் இருப்பது மிக அரிதாகும்.

“இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய நிகழ்வுகளைப்பற்றி கற்று கொள்ள,  வரலாற்று ஆசிரியர்கள், கிஸ்ஸிங்கர் என்ற பிரபலத்தின் வஞ்சக செயல்கனை தெரிந்து கொண்டாலே போதும்” என கெவன் துணிந்து கூறுகிறார். கிஸ்ஸிங்கரது “யதார்த்தவாதம்”, தன் புகழை மேம்படுத்திக் கொள்வதிலும், வழக்கமான செயலை நுணக்கம் நிறைந்த இராஜதந்திர அடையாளமாக உருமாற்றம் செய்வதில் காட்சி படுத்தப்படுகிறது. யு.எஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாவ மூட்டைகளையெல்லாம் ஒருவர் மீது சுமத்தலாமெனில் எல்லா தரப்பினருக்கும் தான் விரும்பியது கிடைத்துவிடும். கிஸ்ஸிங்கர் உலக சரித்திரத்திலேயே ஓர் மாபெரும் மனிதர் என்ற சிறப்பு உறுதிபடுத்தப்பட்டு விடும். அவரது ஆதரவாளர்கள் மகிழலாம். அவரது விமர்சகர்கள் அவரது வெளியுறவு கொள்கைகளை விதி விலக்கானது எனறு சொல்லி அமெரிக்க நிவாகத்தை தப்புவிக்கலாம், என கருதுகிறார்கள். அரசியல் தனி ஒரு மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்ற உண்மை நிரந்தரமானது என அமெரிக்க தாராளவாதிகள் பொய்யான சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். இருந்தாலும், இன்றும் தொடரும் கிஸ்ஸிங்கரது மரபு விரும்பத்தகாத சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது. நாம் எல்லோருமே கிஸ்ஸிங்கர்தான்!

அமெரிக்காவின் நியூயார்க்கர் இதழில் மே 18, 2020 இதழில் பதிப்பிக்கப்பட்ட தாமஸ் மெய்னி (Thomas Meaney) கட்டுரையைத் தழுவியது.

தமிழில் : ஜெகலால் ராம் சேட்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *