“மொகாபாத் மர்மம்” இளையோர் நாவல் – நூல் அறிமுகம்
“இளையோருக்கான கதைகள் வாழ்க்கையை புரிய வைக்கும் விதைகள்”
கொ.மா. கோ இளங்கோ எழுதிய “மொகாபாத் மர்மம்” ஒரு விறுவிறுப்பான அறிவியல் புனைவு (Science Fiction) மற்றும் துப்பறியும் நாவலாகும். தமிழில் அறிவியல் பின்னணியிலான மர்மக் கதைகள் குறைவாக வெளிவரும் சூழலில், இந்த நாவல் ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
மூட நம்பிக்கை, முரட்டு பேய் தான் கதை. பேய்கள் தான் மக்களின் கண் பார்வை இழப்புக்கு காரணம் என மக்கள் நம்புகிறார்கள். இரு சிறுவர்கள் அர்த்தமற்ற பேய் நம்பிக்கைகளை உடைத்து அறிவியல் உண்மையை தெரிவிக்கும் கதைதான் மொகாபாத் மர்மம். கிராமத்தில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒரு புறம் அறிவியல் முன்னேற்றம், மறுபுறம் மனிதர்களின் பேராசை என இரண்டையும் இணைத்து இந்தக் கதையை ஆசிரியர் செதுக்கியுள்ளார்.

நூலாசிரியர் இளங்கோ அறிவியலை எளிமையாகவும் சுவாரசியமாகவும் கையாண்டுள்ளார். சிக்கலான அறிவியல் கோட்பாடுகளைக் கூட சாதாரண வாசகர்களுக்குப் புரியும் வகையில் விவரித்திருப்பது நாவலின் மிகப்பெரிய பலம்.
ஆரம்பம் முதலே கதையின் வேகம் குறையாமல் நகர்கிறது. அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும் விதமாக அத்தியாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கதையில் வரும் துப்பறியும் கதாபாத்திரங்கள் உரையாடல்கள் யதார்த்தமாகவும் அறிவார்ந்த முறையிலும் அமைந்துள்ளன.
” மொகாபாத்” – தமிழில் ஒரு தரமான ‘சயின்ஸ்-பிக்ஷன்’ படிக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த விருந்து. குறிப்பாக, துப்பறியும் கதைகளையும் அறிவியலையும் விரும்பி வாசிக்கும் இளைஞர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
நூலுக்கு பேராசிரியர் ச. மாடசாமி அணிந்துரை வணங்கி இருப்பது மிகப் பொருத்தமானதாகும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “மொகாபாத் மர்மம்” இளையோர் நாவல் |
| ஆசிரியர்: | கொ.மா.கோ. இளங்கோ |
| வெளியீடு: |
புக்ஸ் பார் சில்ரன், இளையோர் இலக்கியம் வெளியீடு, சென்னை-600018 |
| விலை: | ₹.80 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 MJ. பிரபாகர் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
