போராடாமல் இங்கு எதுவும் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. என்பது மீண்டும் மீண்டும் நாம் அதை படித்து தெரிந்து கொள்கிறோம். அப்படி தான் இந்த “வெண்மணி தீ,” ஆம் இன்று இந்த புத்தகத்தை படித்தேன், என்னவோ தெரியவில்லை வீட்டு வேலைகள் கூட செய்ய முடியவில்லை இது இப்போதே படித்தாக வேண்டும் என்று தோன்றியது படித்து முடித்தவுடன் ஒரு போராட்ட களத்தில் இருந்து வெளியே வந்தது போல் இருந்தது .
45 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாவட்டம் 3 மடாதிபதிகளின் கையில் இருந்துள்ளது. அவர்களிடம் உழைத்தவர்கள் அனைவரும் பண்ணை அடிமைகள், தலித் மக்கள், தான் இப்போது உள்ள காலத்தில் ஒரு போராட்டம் என்றால் நமக்கு என்ன என்று இருக்கிறார்கள் அதில் படித்தவர்களே அதிகம் ஆனால் அப்போது இந்தியாவில் எங்கு போராட்டம் என்றாலும் தொழிலாளர்கள் ஒன்று கூடி போராடி வெற்றியும் பெற்றுள்ளனர் வெண்மணி போராட்டம் அப்படித்தான் அவர்களின் போராட்டம் கூலி வேண்டி மட்டுமல்ல “செங்கொடியை இறக்கு பண்ணையார்களின் மஞ்சள் கொடியை ஏற்று ,என்று பண்ணையார்கள் நிர்பந்தித்தபோது பறப்பது சிவப்பு நிறத்தில் ஆன ஒரு துணி அல்ல!
எங்கள் தன்மானத்தின் உரிமைகளின் அங்கீகாரம். உரிமை மறுக்கப்பட்டவர்கள் விழித்தெழுந்து விட்டோம் என்று பறைசாற்றும் சாசனம். எனவே, செங்கொடியே இறக்கவும் மாட்டோம், எவனையும் இறக்க விடமாட்டோம், என்று அவர்கள் சொல்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த பண்ணையார்கள் அவர்களின் அடிமைகளை வைத்து செங்கொடி பறக்கும் கிராமங்களுக்கு எல்லாம் சென்று மிரட்டுகிறார்கள் அப்போது வெண்மணி என்ற கிராமத்திற்கு சென்று மிரட்டுகிறார்கள் கொடியை இறக்க மாட்டோம் என்று சொன்னதினால் ஆத்திரமடைந்த அந்த பண்ணையார்கள் பெட்ரோல் கேன்கள் தீப்பந்தங்கள் எடுத்துக்கொண்டு அந்த கிராமத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். அப்போது ராமையா என்ற தொழிலாளி வீடு கடைசியில் உள்ளது.

அது மிகவும் சிறிய வீடு அந்த வீட்டிற்குள் பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என மொத்தம் 44 பேர் ஒளிந்து கொள்கிறார்கள். அதை பார்த்துவிட்ட அந்த கொடூர கும்பல் அந்த வீட்டை வெளியே பூட்டிவிட்டு தீ மூட்டி எரித்துவிட்டது. தாய் சேய் என அனைவரும் தீக்கிரியாகிவிட்டனர் தாய் தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வீட்டுக்கு வெளியே வீசி எரிகிறார். ஆனால் அந்த அரக்க கும்பல் அந்த பிள்ளையை தாய், கண் முன்னே இரண்டு துண்டாக வெட்டி அதே தீயில் போட்டு விட்டது இதை படிக்கும் போது யாராக இருந்தாலும் கண்ணீர் சிந்தாமல் இந்த ‘வெண்மணி தீ’ புத்தகத்தை படிக்க முடியாது.
எறும்பு கூட போக முடியாது என்று கூறிக் கொண்டிருந்த நிலப்பிரபத்துவ கோட்டைக்குள் செங்கோடு இயக்கம் எப்படி புகுந்தது? இந்த வெண்மணி போராட்டம் ஒரு வீரம் நிறைந்த வரலாறு தான்.
ஜாலியன் வாலிபாக் படுகொலை விட பயங்கரமாக இருக்கிறது இந்த வெண்மணி தீ புத்தகம்
“கூலி கேள் வாரம் கூடுதலாக கேள். அடித்தால் திருப்பி அடி,
ஏண்டி என்று கேட்டால் ஏன்டா என்று கேள் மனித உரிமை பெரு, குருடனாக இருக்காதே கண்ணை திறந்து பார் ஊமையாக இருக்காதே பேசு, கூனாக இருக்காதே நிமிர்ந்து நட” போன்ற சி ஐ டி யு தோழர்களின் வீரமிகு வார்த்தைகள்
மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கிறது புத்தத்தை மூடிவைத்த பிறகும்.
நூல் விவரம்:
நூல்: வெண்மணித் தீ (Venmani Thee)
ஆசிரியர்: கோ.வீரய்யன் (Ko Veeraiyyan)
வெளியீடு: பாரதி புத்தகலாயம்
விலை: ரூ.20
நூல் விமர்சனம் எழுதியவர்
எழிலரசி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.