நீங்கள் எங்களின்
கூடாரத்தின் வழியாக தேசியக்கொடியை
ஏந்திச்செல்லும் பொழுதெல்லாம்
கிழிந்து போன
எங்களது
அப்பாவின் சட்டை
தேசியக்கொடியை விட
மிக வேகமாகப் பறக்கிறது ….
உடுத்த
உறங்க
படிக்க
உரிமையில்லாத
இவ்வூரில்
எங்களுக்கு
எங்களின் மேலாடையே
ஒரு தேசியக்கொடி
தானே யென்று கூறியவாறு ,
ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,