ஊரை இரண்டாக்கி நீங்கள்
ஊட்டிய வெறுப்புத் தீயில் பற்றி எரிகிறது நாடு
மதவெறி மதயானை
பெண் என்றும் பாராமல்
பிறந்த மேனியைப் பிய்த்து தின்கிறது.
பாரத மாதவையே
பாஞ்சாலியாக்கியாக்கி விட்டது
உங்கள் பாசிஸ கொள்கை!
சனாதனமும் சாஸ்திரமும்
உங்களின் தலை எழுத்தானதால்
ஆட்சியும் அரசும் அபாயகரமானது
உலகமே பதைபதைக்கிறது ஆனால்
ஊமையாகி கிடக்கிறது உங்கள்
உள் மனது
நீரோ மன்னனோ எதையாவது
மீட்டினான்
மீட்டவும் தெரியாது பூட்டவும்
தெரியாது
வெளிநாடு கிளம்புவது மட்டுமே
வேலையாகிப் போனது
ஆள் அம்பு அனைத்தும்
வசமிருந்தும்
அமைதிக்கு முயலவில்லை
அகிலமே அலறியது
நாள் பார்த்து காத்திருந்து
நாடகம் ஆடுவதை
நம்பவா முடிகிறது?
–லிங்கராசு