“கொலைகாரர்களின் கோப்புகள்” கவிதை
எனக்கு பிரமை பிடித்து விட்டது என்று எல்லோரும் சொல்வது என் காதில் விழுகிறது
நான் தொலைவில் நின்றபடி கத்துகிறேன்: “இவர்கள் ஏன் தலைகீழாய் நடந்து போகிறார்கள்?”
யாரும் கவனிப்பதாய்த் தெரியவில்லை
அவர்கள் மொழியில் நான் ஒரு பைத்தியம் என்கிறார்கள்
என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை
ஒரு பிணம் எதிரில் எரிகிற பொழுது சந்தோசமாய் இருக்கப் பழக்கப்படுத்துகிறார்கள்
முடியவில்லை
மூச்சுத் திணறுகிறது
“மூலதனம் இவ்வளவு மோசமான கொலைக் கருவியா?”
நானும் என் பங்குக்கு
பின் நவீனத்துவ நடனம் ஆடுவதற்கு
என் கவிதையைப் பழக்குகிறேன்.
வழமையான மொழியிலிருந்து வசைச்சொல் வீச
என் இதயம் நிறைய
கற்கள்
சாணக்கியனின் சகவாசத்தால் திடீரென வேதாந்தியாக மாறிவிடுகிறேன்
இதோடு நிற்கட்டும் மீண்டும் கவிதையை முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன்:
இயேசுவை சிலுவையில் அறைந்த பின்பு நீங்கள் எல்லோரும் அவரது உயிர்த் தெழுதலை பற்றிய நிறைவேறாத கனவுகளை நோக்கி
நின்று கொண்டிருந்தீர்கள்
கல்வாரி மலையில் கனத்த மவுனம்
அப்பொழுது யூதாஸுக்குப் பட்டம் சூட்டியதை நீங்கள் யாருமே கவனிக்கவில்லை
உயிரோடு இருப்பவர்கள் மரித்துப் போவதை விட மரித்துப் போனவர்களை எழுப்புவது எவ்வளவு சுலபமாய் இருக்கிறது
ஒவ்வொரு கல்லறையில் இருந்தும் பிணங்கள் எழும்ப ஆரம்பித்து விட்டன
அப்பொழுது உங்கள் கண் எதிரிலேயே இறந்து போகிற வர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவே இல்லை
இப்பொழுதுதான் கவிதையின் அடுத்த வரியை எழுத ஆரம்பிக்கிறேன்:
அடிமைச் சங்கிலிகளை உருக்கி உருக்கி மூலதனம் செய்கிறார்கள் முதலாளிகள் பாவம் காரல் மார்க்ஸ்
கல்லறையில் புரண்டு படுக்கிறார்
பக்கத்தில் கிராம்ஸி
முதலாளிகளுக்கு உயிர்கள் தாம்
உபரி லாபம்
கவிதையில் இந்த வரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்:
“யூதாஸ் சாணக்கியனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்
சிருங்கார மாளிகையில் சீதைகள் சிறை வைக்கப்பட்டார்கள்
எந்த வில்லையும் முறிக்காமல் இராமர்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள்”
கவிதையில் இடைச்செருகலாய் இன்னொரு வரி:
“நபி ஜின்னாகவும் ஜின் நபியாகவும் எளிதில் மாற்றப்படுகிற மார்க்கம் கண்டாயிற்று”
மீண்டும் கவிதையை முதலில் இருந்து வாசிக்க ஆரம்பிக்கலாம்
“சாணக்கியன் கல்லாலேயே அடித்துக் கொன்ற பிணத்தைக் காணவில்லை என்றவர்கள் கடைசியாக
ஒரு தெருவில் தேடிக் கண்டுபிடித்து விட்டார்கள்:
பெயர் திருவள்ளுவர்”
பின்குறிப்போடு இந்தக் கவிதையை முடித்து விடுகிறேன்: இந்தக் கவிதைக்கும்
எப்ஸ்டின் கோப்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
எழுதியவர்:

நா.வே.அருள்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
