கவிதை : கொண்டாடு
எல்லார்க்கும், எல்லாமும் வழங்கப்பட்டன
என்பது எவ்வளவு உண்மையோ ,
அதை உணராமல்
எல்லோரும் எதையோ தேடிக்கொண்டும் ,
ஓடிக்கொண்டும் இருக்கிறோம் என்பதும்
அவ்வளவு உண்மையே .
ஓடி ஓடி தவிப்பதிலேயே
வாழ்க்கை ஓடிவிடுகிறது.
ஓடுவதற்கு ஒன்றும் இல்லை
என்ற உண்மையை விளங்கிக்கொள்ள
ஒருவருக்கும் மனமில்லை.
இப்பிரபஞ்சமும் இயற்கையும்
எல்லா உயிர்க்கும் பொதுவே.
உங்களுக்கான மகிழ்வை நிம்மதியை
அடுத்தவர் செயல்பாடுகளில் வைக்காதீர்கள்.
உங்களுக்கான எல்லாமும்
உங்களுக்குளேயே வழங்கப்பட்டுள்ளன .
தேடல்
வாழ்க்கையின் தேவை.
தேடுங்கள்
உங்களை உங்களுக்குள்ளே
தேடுங்கள்
எல்லாமும் உங்களை வந்தடையும்.
உங்களை
யார் கொண்டாடுகிறார்களோ இல்லையோ
இப்பிரபஞ்சமும் இவ்வியற்கையும்
கொண்டாடி மகிழும்.
நீங்களும் கொண்டாடுங்கள்
எல்லோரையும்
எல்லாவற்றையும்.
எழுதியவர் :
த.நாகராணி
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.