கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் - ஸ்ரீ வி.முத்துவேல் 

 

கவிஞர் திரு ஸ்ரீ வி..முத்துவேல் அவர்கள் எழுதிய”கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ” என்னும் ஜென் கதைகள் நூல் கையில் கிடைத்தது

ஹைக்கூ கவிதைகள் மூலமாக அறிமுகமான கவிஞர் திரு ஸ்ரீவி.முத்துவேல் அவர்கள் ஹைக்கூ,பழமொழிக்கூ,சென்ரியு வரிசையில் ஜென் கதைகளிலும் புதிய வானத்தை பின்னி இருக்கிறார்

கதைகள் அனைத்தும் காலம் தொட்டு பிரபலமான பாரம்பரிய கதைகளாக இருந்தாலும் ஜென் தத்துவங்கள் அக்கதைகளின் கிரீடங்களில் முத்துக்களை பதிக்கின்றன என்றுக் கூறலாம்,

முகப்பு அட்டைப்படம், தெளிவான அச்சு, தரமான தாள்கள் சிறந்த வடிவமைப்பு என புத்தகத்தை மேலும் மெருகேற்றுகிறது,கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ஜென் கதைகள் KONDAI OOSI VALAIVIL PUTHIYA VAANAM JEN KATHAIGAL – GOWRA BOOK FAIR

“ஒற்றையடி பாதையில்
ஆனைமுடி சிகரத்தை நோக்கி
இதோ இந்த நத்தை ”

“அகன்று உயர்ந்த மலை
இடைவிடாமல் ஏற ஏற
கொண்டை ஊசி வளைவில்
புதிய வானம் ”

“ஆற்றின் எதிர் திசையில் பயணிக்கு மீனிங் வேகம் இப்பொழுது வினோத்தின் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் ”

“பனை மரத்தில் தூக்கணாங்குருவி கூடு
ஒன்றில் தெற்கு வாசல்
மற்றொன்றில் மேற்கு வாசல்
எப்போதும் குருவிகள்
குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் வாழ்கின்றன ”

” வானத்தை விடுத்து
பூமிக்குள் இறங்கும் வேர்கள்
பறக்கிறது ”

” புயலில் சாய்ந்த மரத்தில்
புதிதாய் உருவாகும் துளிர்கள்
வானத்தை நோக்கி ”

“கருவேல முள்ளை விட்டு
எவ்வளவு தூரம் விலகி விலகி இருக்கிறது நிலா ”

” பூமியில் வாழும் மரங்கள்
கிடைக்கும் நீரை உறிஞ்சி இருக்கிறது
பூக்கிறது ”

“அருவிகளின் சத்தம்
குறைய குறைய
அடர் வனத்தின் நிசப்தம் ”

படித்தேன் சுவைத்தேன் அகமகிழ்ந்தேன்

கவிஞர், எழுத்தாளர் திரு.பிருந்தா சாரதி அவர்களின் அணிந்துரையும், பிரபல கவிஞர்களின் வாழ்த்துக்களோடே பயணத்தை ஆரம்பிக்கும் இந்த புதிய வானம் சிகரத்தை தொடுகிறது,

32 கதைகள்
ஒவ்வொரு கதைக்கும் ஒரு ஹைக்கூ… சாலச் சிறப்பு

“ஒவ்வொரு மரமும்
பூக்கும் காய்க்கும்
பருவம் தவறாது”

என்பதைப் போல கதைகள் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் நினைவூட்டுகிறது…

“விழுதுகள் எல்லாம்
வளர்ந்து பெரியதாகிப்
பூமியில் வேரூன்றியப் பிறகும்
ஆலமரத்தோடே வாழ்கிறது”

எவ்வளவு ஆழமாக கருத்து

புதிய சிந்தனை
புதிய கோணம்
புதிய தகவல்
புதிய முயற்சி
வாழ்த்துக்கள் கவிஞர் ஸ்ரீவிமுத்துவேல் அவர்கள்,
தொடர்ந்து எழுதுங்கள்

 

இனிய நண்பருக்கு
இனிய வாழ்த்துகளுடன்

 

 

நூலின் தகவல்கள் 

நூல்  : கொண்டை ஊசி வளைவில் புதிய வானம்

ஆசிரியர் : கவிஞர் திரு ஸ்ரீ வி.முத்துவேல் 

வெளியிடு : எம்ஜெ பப்ளிகேஷன்,சென்னை

விலை₹200.

பதிப்பு : ஏப்ரல் 2024.

தொடர்புக்கு : +91 89392 65689

 

நூலறிமுகம் எழுதியவர் 

இரா. மதிராஜ்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “கவிஞர் திரு ஸ்ரீ வி.முத்துவேல் எழுதிய “கொண்டை ஊசி வளைவில் புதிய வானம் ” – நூலறிமுகம்”
 1. அழகான அறிமுகம்
  ஆழ்ந்த கருத்துக்கள்
  சிறப்பு நூல்…

  நட்புக் கவிஞர்களுக்கு
  நல்வளம் பெற
  வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *