கொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்கொஞ்சம் விதைப்போம்…….

விதைகளைக் கொஞ்சம் காதலோடு விதையுங்களேன்….
நீங்கள் பேசப் பேச அது மண்ணை முட்டிமோதி வெளிவரும்…
நீர் ஊற்ற நேசத்தோடு துளிர்விடும்….
துளிரினை நீங்கள் ரசிக்க
புன்னகைத்து மேலும் துளிர்க்கும்…
அன்போடு தண்ணீர் ஊற்ற மறவாதீர்கள்…
மறவாமல் நீங்கள் நட்டவிதை
பாசத்தோடு பல விதைகளை தரும்….
ஆனால் இந்த விதையெல்லாம் மனிதனிடம் விதைப்பது
எதிர்வினையாகிவிடுமோ?…..

-நிஷா வெங்கட்…🖤