நான் முகநூல் தொடர்ந்த பொழுதுகளில்
பல தோழன்மைகள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், உறவுகள், நட்புகள் என…
என் கவிதை மற்றும் கட்டுரைகள், கதைகள் பல பரிமாணங்களில் உட்வாங்கி நிற்கும்.
கவிதைகளை எழுதி விட்டு அழித்த பொழுதுகள் பல…
இவர் அப்படி நினைப்பாரோ, அவர் இப்டி நினைப்பாரோ… என தயங்கி நிற்பேன்.
அப்போதெல்லாம் தோழியாய் நட்பாய் உறவாய் என பல விதங்களில் முகம் துடைத்து நிற்பவர்.
முன்னர் ஒவ்வொரு கவிதைக்கும் வந்து ஊக்கம் தந்து அழகு செய்பவர். பல பொழுதுகளில் நிறை குறைகளை தந்து மொழுகி நிற்பவர்.
அவினாசி அம்மனை நான் பார்த்ததில்லை, அந்த பெருங்கருணை நாயகியை வரவாய் கொண்டு அமர்த்திருக்கின்றார்.
இந்நூலில்
கவி ஒழுக்குகளாய்.
கிட்டத்தட்ட எண்பத்தி மூன்று தலைகளில்…
ஒவ்வொன்றும் ஒரு வித சுவையோடு.
இவர்கள் முக நூலில் பல நிகழ்வுகளில்
இக்கவிதையை கடந்ததுண்டு.
இப்போது கவித்தாள்களில் கப்பலாகி
நிற்பது ஒரு வித இரசனையாகின்றது.
நான், இரண்டு நூல் வெளியிட்டு விட்டேன்.
அப்போதெல்லாம் கவி நூல் போடுங்கள் என்பேன்.
அது இப்போது முத்தாய்ப்பாய்.
என் இரண்டு நூற்களுக்கும் விமர்சனம் தந்தவர். மறவேன்.
என்னையும் மறக்காது நூல் அனுப்பி த் தந்தவர்.
அதன் படியே மதிப்போடு ….
தலைப்பு….
‘தலைப்புக்குள் கொஞ்சம்
தவம் செய்கிறேன்’
அழகு வரிகள்.
கற்பனை கொளா வரிகள்.
அதே தொடர் வரிகளில்.
‘இரசிக்கும் படியான
கவிதை தரச் சொல்லி
பேனாவிடம் பேரம் பேச முடியாது’
அருமை வரிகள்.
லாவகமாய் இங்கேயும்
பெண்களுக்கு உரித்தான பேரத்தையும்
சூல்கொள்கிறார்.
‘பூவும் அவளும் ‘
கட்டி முடித்ததும்
தண்ணீர் தெரிந்து
எழுப்பி விடுகிறாள்….
இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
அப்பப்பா
அளக்க முடியாத வரிகளாய்.
முகவரி….
‘மண்ணில் விழுந்த மழைத்துளியில்
தன்னை நனைத்து
பூமியைத் தட்டிப் பிளந்து வெளிவரும்
விதை முயற்சியின் முகவரி….’
அழகால் தன்னம்பிக்கையை சொல்லி தருகிறார்.
இப்படியே தொடர்ந்தால்..
அனைத்தையும் கொட்டி விடுவேன்.
நீங்களும் நுகரலாம்….
அழகிய கவிச்சிதறல்களை
விலை : 125
ஆசிரியர்
கவிஞர். பார்வதி பாலசுப்ரமணியம்
பேசி : 9047656886.
‘உங்கள்
வீடுகளில்
கருங் குயிலும் கூவட்டும் …..’
என்றும் இயல்புடன் ….
இராஜேஷ் சங்கரப்பிள்ளை
எழுத்தாளர்/ கவிஞர்/ ஆசிரியர்.
‘இராசாக்கமங்கலம்’