கு.அழகிரிசாமியின் சிறுகதை Ku. Alagirisami Short Story

கு.அழகிரிசாமியின் சிறுகதை “நீ….ள….மா….ன…..நா…ய்…!” விமர்சனம்

 

 

10 அடி இடைவெளியில் இரண்டு நாய்கள் உறங்கிக் கொண்டு இருக்கிறது.  குருடன் ஒருவர் அந்த தெருவை  கடக்கும் போது முதலில் இருக்கும் நாயை மிதித்து விடுகிறான். அது கோபம் கொண்டு அவனைப் பார்த்துக்  குரைக்கிறது.   பாதையை கடந்து 10 அடி கடந்து வந்தவர் மற்றொரு நாயையும்  மிதித்து விடுகிறார் அதுவும் கோபம் கொண்டு அவனைப் பார்த்து  குரைக்கிறது.   குருடனுக்கு ஆச்சரியமாய் விட்டது. அட ‘என்னடா இது! இவ்வளவு நீளமாகவும் ஒரு நாய்  இருக்குமா!” என்று சொல்லிக் கொண்டே கடந்து சென்று விடுகிறான்.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு கதைகளில் இதுவும் ஒன்று.

நாம் இதை ஒரு சிறுகதையாக நகைச்சுவை உணர்வுடன் குழந்தைகளுக்கு சொல்லிக் கடந்து விடலாம்.

சற்றே நம் அகண்ட விழிகள் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் காட்சிகள் பல விதமாக நம் கண் முன்னே விரிந்து காட்சியளிக்கிறது.

புறம் பேசுபவர்கள் நம்மை சுற்றி எங்கும் உள்ளார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

எளியவர்கள் மிதிப்பட்டு அலறும் போது வலியவர்கள் தன்னால் தான்  அவர்களுக்கு துன்பம் ஏற்பட்டது என்பதை உணராமல் எளிதாக கடந்து போவதை காட்சிப் படுத்துகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

முதலாளிகள் தொழிலாளிகளை மிதித்து செல்கிறார்கள் என்றும்  பொருள் கொள்ளலாம்.

உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து இருந்தால் முதலாளிகள் எளிதில் அவர்களை கடக்க முடியாது என்றும் பொருள் கொள்ளலாம்.

வாழ வழியில்லாமல் வதைக்கப்படும் நிலையில் மக்களின் கூக்குரலை அலட்சியமாக கடந்து செல்கிறது அரசு என்றும் பொருள் கொள்ளலாம்.

கல்விதுறையை  எடுத்துக் கொண்டால் நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்தாலும் சாமான்ய மனிதர்கள் மேம்பட தான் இந்த கொள்கை என அமுல்படுத்தலாம்.

பல வழிமுறைகளில் இயல்பான வாழ்க்கையை கெடுக்கும் வண்ணம்  பொது சிவில் சட்டம் என ஒன்றை கொண்டு வர போகிறோம் என அச்சுறுத்தல் செய்யலாம்.

பசி பட்டினியால் மக்கள் தவிக்க நம் நாடு வல்லரசு என பெருமை பாராட்டிக் கொள்ளலாம்.

இனக் கொலைகள் மத கலவரங்கள் எங்கும் நடந்தாலும் பல ஆலயங்களை   கட்டி விழா எடுக்கலாம்

மத கலவரங்களின் மரணங்களை விபத்து என விமர்சித்து சென்று விடலாம்

ஜாதிக் கொலைகளை காதல் தோல்வியால் தற்கொலை என ஜோடிக்கலாம்…

மலக்குழி  மரணங்களை குடி போதையால்  விபத்து என சொல்லி முடி விடலாம்

இப்படி பல பல சமகால நிகழ்வுகளை மையமாக வைத்து பார்க்கும் போது பொருந்தி செல்கிறது.

எத்தனை எத்தனையோ உண்மை நிகழ்வுகளை நிதர்சனங்களை கண்டும் காணாமலும் பார்வையற்று கடந்து விடுகிறோம் என்று நம்மை  நோக்கி சொல்லி செல்கிறது இக்கதை.

ஆசிரியர் கு.அழகிரிசாமியின் கதைகள் எளிய முறையில் பல நிதர்சனங்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.

 

நன்றி

நீ….ள….மா….ன…..நா…ய்…!

ஜப்பானியக் குட்டிக் கதைகள்

ஆசிரியர் – எழுத்தாளர் கு. அழகிரிசாமி.

திருமதி. சாந்தி சரவணன்

சென்னை-40




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *