Kudaikkul Pathungum Parithi குடைக்குள் பதுங்கும் பரிதி

தமிழ்த் துளிப்பா (ஹைக்கூ) 40வது ஆண்டில் பயணிக்க துவங்கியுள்ளது. 

இமையில்லாப் பரிதி இருளகற்றுவது உறுதி என்ற தலைப்பில்  தொகுப்பாளர்கள் துளிப்பா வரலாற்றை மிக சிறப்பாக பதிவு செய்து உள்ளனர்.   துளிப்பா வகைகள் யாவை? துளிப்பாப் புதுவகைமைகள் யாவை? போன்ற பல தகவல்களை இந்த புத்தக வாசிப்பு நமக்கு வழங்குகிறது. 88 தோழர்களின் ஹைக்கூ கவிதைகளை குடைக்குள் பதிவு செய்துள்ளது

 சில ஹைக்கூ கவிதைகள்  :

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடி சென்றான் முன்டாசு கவி பாரதி. ஆனால் இன்றும் ஒழிந்தபாடியில்லை இந்த ஜாதி.   ஜாதிகள் பார்ப்பதில்லை என்று சொல்பவர்கள் கூட வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் ஜாதி பார்பார்கள்.  இதை இந்த ஹைக்கூ மிக எளிதாக நமக்கு கடத்தி விட்டு செல்கிறது

வேலைக்காரி

வேலை முடிந்ததும்

தீண்டத்தகாதவள்

  – முனைவர் கோ. மலர்விழி

  – திருவாரூர்

ஒரு ஊரே புலம் பெயர்ந்து சென்றபின் யாரிடம் வரும் கடிதத்தை கொடுப்பது என நம்மை கேட்பதாக இருந்தாலும் யாருமற்ற ஊரை காட்சிப்படுத்துகிறது இந்த ஹைக்கூ. 

யாரிடம் கொடுப்பது

திருப்பி அனுப்பிய கடிதம்

காலியான ஊர்கள்

  – மஞ்சள் நிலவன்

 – புதுச்சேரி

அப்பா மகள், என்ற உறவு ஒரு சுகமான உணர்வு. மகளின் ஒவ்வொரு செயலையும் ரசிக்கும் அப்பா.  தன்னை மகள் ஒப்பனை செய்து அழகு பார்பதை ஒவ்வொரு அப்பாவும் குழந்தையாக ரசிப்பதை நாம் பார்த்து உள்ளேம். அதே போல் மகள் தாயாக சமைத்து தருவதையும் ரசிக்கும் அப்பா என்பதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ. 

தோளில் துண்டு

தாயாகி நிற்கிறாள் மகள்

மரப்பாச்சிப் பொம்மை

 – மாலதி இராமலிங்கம்

– புதுச்சேரி

ஒரு பக்கம் நிலம் மூன்று பக்கம் கடல் சூழ்ந்த நமது நாடு  இன்று சூழலியல் காரணமாக பல நீர் நிலையங்கள் வரண்டு காணாமல் போய் உள்ளது. சில நீர் நிலைகள் கழிவுகள் கலக்கும் இருப்பிடமாக மாறியுள்ளது.   பறவைகள் வன விலங்குகள் வாழ வழியின்றி நீர் தேடி காட்டை விட்டு நாட்டை தேடி ஓடிவரும் நிலை உருவாகிவிட்டது.    அதில் ஒரு துளி தான் இந்த ஹைக்கூ கவிதை. 

கழிவு நீர்க்குட்டை

செத்து ஒதுங்கும் மீன்கள்

இடம் பெயரும் கொக்கு

– க. காயத்திரி

– புதுச்சேரி

பூங்காவில்  காதலர்களை தான் அதிகமாக பார்க்க முடிகிறது.   விலங்குகள் சரணாலயம் காதலர்கள் சரணாலயமாக மாறியுள்ளதை காட்சி படுத்தும் இந்த ஹைக்கூ

வண்டலூரில்

விலங்குகளை விட அதிகம்

ஜோடிக்கு புறாக்கள்

-கலைமாமணி வ. விஜயலட்சுமி

 – புதுச்சேரி

சாதீ  – அந்த தீ அனையாமால் பற்றி எரிந்து கொண்டே இருக்கிறது என்பதனை காட்சி படுத்தும் ஹைக்கூ கவிதை

அணைப்பாரின்றி

இன்னும் எரிகிறது

சாதீ

– த. தாமரைச்செல்வி

– சீர்காழி

தன் இனமே தன்னை அழித்து கொள்ள ஏற்பாடுகள் செய்கிறது சமூகம் என்பதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ

மரங்கள் வெட்டிக் கோடரிக்கு

கைப்பிடி கொடுத்தது ஒரு

மரம்

– நா. நடராஜ்

– கோவை

வாழ்க்கையில் நாம் முயற்சி செய்து உயர வேண்டும்.  இயற்கையாக உதிக்கும் சூரியன் அதன் மேல் கவிஞரின் கற்பனை வளத்தை காட்சிப்படுத்தும் இந்த ஹைக்கூ கவிதை:

குளத்தில் குளித்தும்

மூழ்கவில்லை

சூரியன்

 – ப. சிவராமன்

– சிட்லபாக்கம் சென்னை

என்னுடைய ஹைக்கூ கவிதைகள் தோழர் கவிதா பிருத்வி மற்றும் தொகுப்பாளர்கள் ஹைக்கூ கவிதைகள் உடன் சேர்ந்து பல தோழமைகளின் கவிதைகள் சுமந்து வந்துள்ளது இந்த தொகுப்பு. அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த ஹைக்கூ தொகுப்பு.  தொகுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும். 

 

            நூலின் தகவல்கள் 

புத்தகத்தின் பெயர்: “குடைக்குள் பதுங்கும் பரிதி ” (பன்னாட்டுத் துடுப்பாட்டப்(ஹைக்கூ) தொகுப்பு நூல்) 

தொகுப்பாளர்கள் : திரு. புதுவைத் தமிழ் நெஞ்சன், திரு. கன்னிக் கோவில் இராஜா

 விலை   : Rs. 220/-

பக்கங்கள் : 188 பக்கங்கள்

பதிப்பகம் : நூலேணி  பதிப்பகம்

         

                எழுதியவர்

        திருமதி சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 3 thoughts on “நூலறிமுகம்: குடைக்குள் பதுங்கும் பரிதிகுடைக்குள் பதுங்கும் பரிதி”
  1. குடைக்குள் பதுங்கும் பரிதி ஹைக்கூ தொகுப்பு நூல் பற்றிய மிகச் சிறப்பான விமர்சனமாக உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சில கவிதைகளை விமர்சனம் செய்திருப்பது சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துகள்.

  2. அருமையான கருத்து பதிவு சாந்தி 💐🎉 வாழ்த்துகள் சாந்தி 💐
    சேர்ந்தே பயணிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *