குடிஞையின் கவிதைகள் (Kudignaiyin Kavithaikal) - சில கதைகள் சொல்லும் | சில நினைவுகளை மெல்லும் | சில கண்ணீரைத் திரட்டும் | பல புன்னகையை அள்ளும்

குடிஞையின் கவிதைகள்

குடிஞையின் கவிதைகள்

சில… கதைகள் சொல்லும்
சில …நினைவுகளை மெல்லும்
சில …கண்ணீரைத் திரட்டும்
பல ….புன்னகையை அள்ளும்
என்னிடமுள்ள மற்றவை அனைத்தும்
இந்த விதியைப் பின்பற்றுவதில்
அவ்வளவு உறுதி வாய்ந்தவையே…

ஆனால் இது மட்டும்
என்னைக் கொல்லும்..
விழுங்கும்….
மீண்டும் உயிர்ப்பிக்கும்..
அருகில் வா என இரு கரம் நீட்டும் ..
வேண்டாம் என மறுக்கும்…
கவி வரைய வழி விடும்..
கண் சிமிட்டும்
கனவு காணாதே எனக் கண்துடைக்கும்..
கொஞ்சும் சிரிக்கும்…
கோபம் மறைக்கும்
சட்டென்று மௌனராகமும் பாடும்..

மற்றவை ஏதோ ஒரு சட்டத்திற்குள்
அடங்கிக் கொள்ள….

எந்தச் சட்டத்திற்குள்ளும்
அடங்க மறுத்து ,
பெரும் அடத்தோடு….
பழைய புத்தகத்தில் மறைந்து கொ(ல்)ள்கிறது
கடவுச்சீட்டு அளவுள்ள
உன் புகைப்படம்!

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. லதா விரிவுரையாளர்

    ஏதார்த்தமான அதே சமயம் எங்கோ பதிந்து போன பதித்து போன நினைவுகளை இப்படி கூட
    வெளிபடுத்த முடியுமா நல்ல வளமான நடை இத்தகைய கவிதைகளை வரவேற்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *