“குளிர் சிறகுகளுக்குள்” கவிதை
பெண்ணாகப் பிறந்தாய்
என்னுயிருக்குள் கலந்தாய்
உறவின் உன்னதம்
உயிர்க் கோப்பையில் ஊற்றினாய்
என் புல்லாங்குழல்
இசையெங்கும்
உன் வாசனை மட்டுமே
என் புலன் யாவும்
உன் ரோஜாக்கள் மட்டுமே
சந்தேகமில்லை
மரணம் தாண்டியும்
உனை நேசிக்கிறேன்
ஆயினும்
மரணத்தில்
உன் கைகோர்த்திட
உடன்பாடில்லை எனக்கு
எனது எச்சங்களின்
பிம்பங்களை
எனது எண்ணக் கருவறையின்
அதிர்வுகளை
என் இதயத்தில்
முகாமிட்ட
நினைவுக் கரங்களின் தேவைகளை
நீ மட்டுமே அறிந்தவள்
என் பிரபஞ்சம்
உன் மானசீக அச்சாணியில்தான்
நகர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது
உன் பேரன்பின் குளிர் சிறகுகளுக்குள் கொடுகிக் கிடக்கிறேன்
யுகங்கள் தோறும்
எனையாளும் தேவதை நீ
என் பின்னரான
எல்லாம் நீதான் என்ற
நம்பிக்கையில்…
நானாகிறவன்
சொட்டும் உயிர்த்தீயில்
உழல்கிறேன்
என் வாழ்வின்
பூரணப்படுத்துதல்
என்பது
உன்னால் மட்டுமே
யாசகனாய் நான்…
எழுதியவர் :
✍🏻 – Dr.ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
