குமரன்விஜி கவிதை1. முன் வரிசை
இருக்கைகளில்
சாதியையும் மதத்தையும்
அமர வைத்து
கடவுள்
பேதமில்லா வாழ்வுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார்

உரை முடிந்ததும்
கடவுள் போய்விடுவார்
பேதம்.2. விடுமுறை நாட்களில்
இப்படித்தான்
சோம்பலாய் என்னைப்போல் சுறுசுறுப்பின்றி
படுத்துறங்கும் அப்பாவுக்கு
ஜடை போடுவேன்
சாந்து பூசுவேன்
பொட்டு வைப்பேன்
புருவம் திருத்துவேன்
நேற்று மாறுதலாய்
எல்லா வேலைகளையும்
இழுத்துப்போட்டு செய்யும்
அம்மாவுக்கு
மீசை வரைந்தேன்
அப்பாவை விட
அம்மாவுக்கு மீசை எவ்வளவு அழகு.

குமரன்விஜி