எனது நூலகத்தின் 500 ஆவது புத்தகம். விழியன் அவர்களை நேரில் சந்தித்து இந்த புத்தகத்தில் கையெழுத்து வாங்கியது கூடுதல் நெகிழ்ச்சி.
தமிழில் சிறார் இலக்கியம் தற்போது தான் பரவலாகப் பேசப்படுகிறது. நிறையப் படைப்புகள் வருகிறது. இளையோர் (teenage) இலக்கியம் இன்னும் சொல்லும் வகையில் பிரபலமாகவில்லை. சமீப காலமாக அவர்களுக்கான புத்தகங்கள் வரத் தொடங்கி உள்ளது.
“குறுங்” டீன் வயதினருக்கான குறுங்கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.
ஒவ்வொரு கட்டுரையும் இதைச் செய் இதைச் செய்யக் கூடாது என அறிவுரை சொல்லாமல் இதைச் செய்யலாமே இப்படி முயன்று பாரேன் எனத் தோளில் கை போட்டு ஆலோசனை சொல்கிறது.
🚲இறக்கைகளை விரிக்கச் செய்யும் சைக்கிள் பயணம்
1988 ஆண்டு வரலாற்றை எண்களாக அறிந்து மட்டும் வைத்துக் கொள்ளாமல் அக்கால வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்து கொள்ளல்
/வரலாறுகளை வெறும் ஆண்டுகளாகப் பார்க்காமல் அதிலிருந்து கேள்விகளை உருவாக்க வேண்டும். அந்தக் கேள்விக்கான விடைகளிலிருந்தே நம் தேடல் துவங்க வேண்டும் /
💭💭கனவுகளை பெரிதாகக் காணும் முன்னர் விதைகளைச் செழுமைப்படுத்த வேண்டும். புத்தகங்கள் புது விடியலைத் திறக்கும். உயரங்களைப் பெரிதாக்க ஊன்றிப் படித்தல்
🏆ஆளுமைகளை ஆழ்ந்து உணர்தல்
/வெற்றியும் மகிழ்ச்சியும் ஒரு மனநிலை/
🏃♀️🏃♂️பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து எனச் சொல்லக் கேட்டு இருக்கிறோம். மேடைக்கு முந்து என்பது புதிய அணுகுமுறை. மேடைக்குச் செல்லும் வாய்ப்பை தவறவிடாது பயங்களை எதிர்கொள்ளல்
/சின்ன சின்ன மேடைகளிலிருந்து கூடி இருப்பவர்களைப் பார்க்கத் துவங்கினால் மேடை பயங்கள் விலகும்/
🗺ஊரைத் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பி ஊரின் இடங்களை அறிந்து கொண்டு தகவல்களை வரைபடமாக வரைதல்
📰தினசரிகளை வாசிப்பதன் மூலம் விரி சிந்தனையை வளர்த்தல்
/செய்திகளின் நடுவே கடத்தப்படும் உட்செய்திகளை உள்வாங்குவது அவசியம் /
➕➖✖️➗கணக்கு இனிக்க அன்றாட வாழ்வில் கணக்கை உற்றுநோக்க வேண்டும். கணக்குகளை முயற்சி செய்து பயிற்சி செய்தல்
🤷♀️🤷♂️சிக்கலுக்கான தீர்வுகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு முயன்று பார்த்தல்
/சிக்கல் இல்லாத வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட கிடையவே கிடையாது. யாருக்குமே அப்படியான வாழ்க்கை அமையாது. தினம் தினம் பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அது வேறு வேறு ரூபத்தில் நிகழும். அதனைத் தீர்க்க ஒரே வழிதான் உள்ளது. அதனை நேருக்கு நேர் சந்திப்பது. /
⁉️ஆகஸ்ட் 20 மருத்துவர் தபோல்கர் நினைவாகத் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாகக் கொண்டாடப்படுகிறது. அறிவியல் மனப்பான்மையில் சுற்றத்தை உற்று நோக்கல் , வேறுபட்டு உணர்வதைக் கேள்வி கேட்டல்
/கேள்வி கேட்கும் இந்த மனப்பான்மையே அறிவியல் மனப்பான்மை. சொல்லப்பட்ட கதைகள் எதையும் ஏற்காமல் அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா என ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதே அறிவியல் மனப்பான்மை/
/கேள்விகளே தனிமனித வளர்ச்சிக்கு ஆதாரம்/
🚌சமூகத்தில் ஏதாவது தவறு நடந்தால் அது அரசாங்கத்தின் தவறு, தனி மனித ஒழுக்கமின்மை என்ற ரீதியில் சிந்திக்காமல் நாம் அந்த சிக்கலைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் எனச் சிந்தித்தல், கூட்டாகச் செயலாற்றுதல்
📑நமக்கு எழும் கேள்விகளை ஒரு ரகசிய நோட்டில் குறிப்பு எடுத்தல். அதற்கான விடையை நாம் சுற்றி உள்ள வளங்களைக் கொண்டு விடை தேட முயல்தல்
/தேடலே வளர்ச்சி/
🎥📚சினிமாவில் உள்ள பல துறைகளை உற்றுநோக்கல் அதன் செயல்பாடுகளை ஆர்வமுடன் கவனித்தல். இது நம்முள்ளே கலையை வளர்த்து எடுக்கும் வாய்ப்பை நல்கும்
🏫📚நூலகம் பயன்பாட்டை அதிகரித்தல் நூலகத்தைச் செழுமைப்படுத்தத் தொடர்ந்து முனைதல்
▶️◀️ஒப்பீடு அடுத்தவர் உடன் இல்லாமல் நம்முடனே நம்மை ஒப்பீடு கொள்ளுதல் தேக்க நிலையை ஆராய்தல் தொடர்ந்து முயலுதல்
/எனக்குச் சிக்கல் இருக்கு என்பதை மனதார ஒத்துக்கொண்டு, ஏற்றுக் கொண்டு அங்கிருந்து நகர்வது எப்படி என யோசிக்கவே இந்தப் பயிற்சி/
🎇🎠🎢🎡 வீட்டு விசேஷங்களுக்குத் தவறாமல் கலந்து கொள்ளுதல், உறவினர்களோடு அலவலாவுதல் நிகழ்ச்சி செயல்பாடுகளில் பங்கு கொள்ளுதல், புதிய அனுபவத்தைப் பெறுதல்
📚📙புத்தகக் கண்காட்சி செல்வதற்கான முன் தயாரிப்புகள், சென்று வந்த பின்னரான தொடர் செயல்பாடுகள் எனப் புத்தகக் கண்காட்சியில் வாசிப்பு அனுபவத்தை விரிவுபடுத்துதல்
🖥தகவல் தொழில்நுட்பம் தாண்டி தொழில்நுட்பத்தை அணுகுதல்
/தொழில்நுட்பம் என்பது இதுவரை பெற்ற அறிவினைப் பயன்படுத்தி, சிக்கல்களுக்குத் தீர்வு கொடுக்கவல்லது, அதே சமயம் அதனை எத்தனை முறை பயன்படுத்தினாலும் அதே போன்ற பலனைத் தரும். தான்தோன்றித்தனமான விடைகளைத் தராது /
🖋அரசியல் சிறு பிள்ளைக்குத் தேவையற்றது என்ற பிம்பம் உடைத்து, குடிமையியலில் படிப்பதை நிஜத்தில் பொருத்தி அறிவைப் பெறுதல்
/அரசியல் என்பது ஒரு கொள்கையைச் சார்ந்த பயணம். அது என்ன கொள்கை, அதனை எப்படி அடைவது என்ற வழிமுறைகளை ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வெவ்வேறு மாதிரி அணுகுகின்றார்கள். /
📖📚பள்ளிகளில் சிறார் இதழை உருவாக்குதல், இதழை வடிவமைப்பதில் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் சார்ந்த வழிகாட்டல்
👩🦽👨🦽இங்கு எல்லாவகை மக்களும் வாழும் சூழலில் சமூக அமைப்பு உள்ளதா என்பது சந்தேகம் தான். உள்ளடக்கிய உலகம் பற்றிய தேவைகளை அறிதல், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு உற்ற துணையாக இருத்தல்
🧾ஆய்வு மனப்பான்மை வளர்த்துக் கொள்ளுதல்
📄சும்மா இருத்தல் மூலம் அறிவை விரித்துக் கொள்ளுதல்
📃சின்ன சின்ன விஷயங்களைச் செய்வதன் மூலம் பெரிய காரியங்களைச் சாதித்தல்
போன்ற பல செயல்களை முயற்சி செய்வதன் மூலம் பல இனிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதை இந்நூல் சுவைப்படச் சொல்கிறது.
ஒவ்வொரு செயல்பாடுகளையும் குழந்தைகளுடன் கலந்துரையாடி முயன்று பார்க்கலாம். பல புதிய வாசல்களைத் திறக்கும். சிறகுகளை முளைக்க வைக்கும்.
புத்தகம் : குறுங்… டீன் வயதினருக்கான குறுங்கட்டுரைகள்
எழுத்து: விழியன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள்: 96
விலை: ₹95
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.