அ.உமர் பாரூக் எழுதிய "குருதிக் கோடுகள்" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

கவிதை:- குருதிக் கோடுகள் – அ.உமர் பாரூக்

“குருதிக் கோடுகள்” கவிதை 

பூமிப்பந்து
இப்போது
அதிகாரத்தின் மேசை மீது
கிடக்கும்
பேப்பர் வெயிட்டைப் போல
மாறிவிட்டது…

அதிகாரம்
அதனை
உருட்டி விளையாடும் போது
கண்டங்கள்
கடலில் மூழ்குகின்றன…
மழைக்குப் பதிலாக
வானத்திலிருந்து
ஏவுகணைகள்
எறியப்படுகின்றன…

தேசங்களின்
வரைபடத்தில்
அதிகாரம்
ரத்தத்தால்
எல்லைக் கோடு வரைகிறது…

தலைக்கேறிய போர் வெறியால்
மனிதத் தலைகள்
சந்தைகளில் விற்கப்படுகின்றன..

மனித
எலும்புக் கூடுகளால்
அதிகாரத்தின்
ஒரு
புதிய கோபுரம்
எழுப்பப்படுகிறது..

துப்பாக்கிக் குண்டுகளின்
குரல்களாலும்,
ஏவுகணைகளின்
வல்லிசையாலும்
ஜனநாயகத்தைப்

பிரசவிக்க முயல்கிறது
அதிகாரம்.

பூமி –
இப்போது
மனிதர்கள்
வாழும் இடமல்ல..
வீழும்
பலிபீடம்.

போர் –
வெற்றி பெறும்
வழி அல்ல.
மனிதத்தைத் தோண்டிப் புதைக்கும்
சவக்குழி.

நாம்
இன்னும்
மெளனமாக இருப்போம்…
அதிகாரத்தை
அலங்கரிப்பதற்காக
நாளை
நமது தலைகளும்
தேவைப்படலாம்…

*****************************************************************

📚 எழுதியவர் : 

✍🏻 – அ.உமர் பாரூக்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 3 Comments

3 Comments

  1. giridharan pn

    அருமையான வரிகள்.
    நிதர்சனதை குறிக்கிறது. அதிகாரத்தான் பிடியில் இருக்கும் சில பேருக்காக பலவீனமானவர்களின் வீழ்ச்சி எடுத்து சொல்கிறதாக இருக்கிறது.
    அதிகாரத்தின் வீழ்ழியின் ஆரம்பம்

  2. Dillibabu Babu

    சிறப்பு தோழர்
    அதிகார வர்க்கத்தின் முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்

  3. கௌரிசங்கர்.ச

    குருதிக்கோடுகள் எனும் இந்த கவிதை எவரும் பொதுவில் பேசத்தயங்கும் போரின் காரணிகளை பட்டியலிடுகிறது..

    போர் நிலத்தின் பாதிப்புகளை அதன் தாக்கங்களை, யாருக்கு எப்படியெல்லாம் ஆதாயம் என்று விமர்சிக்கிறது.

    சிலர் மட்டுமே வாழ நடக்கும் போரினால் பலர் சாகும் சாபத்தை சாடுகிறது

    நாம் இன்னும் மௌளமாக இருப்போம்

    என்ற வரியில் “இன்னும்” என்ற சொல் பேரதிர்வை தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *