குருவியின் சிரிப்பு
எங்கிருந்தோ பறந்து வந்த குருவி
வேம்பு மரத்தின் கிளையில் அமர்ந்தது
அங்கிருந்த காகங்கள் சட்டென
எழுந்தோடி விட்டன
மஞ்சள் நிறவேம்பு பழங்களைக்
குருவிகள் கொத்தித் தின்றன
வேம்புப் பூவாசம் ஜன்னல் வழியாக
நுழைந்து வீடெங்கும் மணந்தது
வேம்பு காற்றினை அனுபவிப்பதே
தனிசுகம்
சிலநேரங்களில் குருவி ஜன்னல்
கதவை டொக் டொக் என்று
அலகால் தட்டி சத்தம் எழுப்பும்
யாரேனும் ஒருவர் போய்
பார்ப்பது வழக்கம்
நாங்கள் ஊரில் இல்லாத நாள்களில்
குருவி வந்து பார்த்துவிட்டுப் போகுமா?
என்று பேரன் கேட்டான்
அப்போதுதான் எனக்கும்
அந்த சந்தேகம் வந்தது
குருவி வந்து பார்த்துவிட்டு
போகும் என்றே என் மனம் சொன்னது
அந்தக் குருவியினை நினைத்தாவது
சீக்கிரம் ஊருக்குத் திரும்ப
வேண்டுமென நினைத்து
மறுநாள் ஊருக்குப் புறப்பட்டு விட்டோம்
எழுதியவர்
ந க துறைவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

