நூல் அறிமுகம்: எழுத்தாளர் ம.காமுத்துரையின் *குதுப்பி நாவல்* – ராதிகா விஜய் பாபுநூல்: குதுப்பி நாவல்
ஆசிரியர்: ம.காமுத்துரை
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ₹400.00 
ஏழை எளிய மக்களின் துயரங்களைப் பற்றி எத்தனை நாவல்கள் வந்தாலும், அவர்களின் வாழ்க்கை முறை முன்னேறாமல் இருக்க பெரும் தடைக்கற்களாக விளங்குவதில் மதுப்பழக்கத்திற்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. தான்  சம்பாதிக்கும் பணத்தை முழுவதும் சாராயக் கடையில் இழந்து குடும்பத்தை நடத்த வட்டிக்கு கடன் வாங்கி  குடியால் உடலையும், குடும்ப நலனையும் தங்கள் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதை சமையல் தொழிலாளர்கள் சமையல் நிபுணர்களின் கதை மூலம்  இந்த நாவல் கண் முன்னே காட்டுகிறது.
சாரதி மது பாட்டிலை திறப்பதில் நாவல் ஆரம்பித்து சாரதியின் மகன்  சரவணன் பாட்டிலை தூக்கி எறிவதில் கதை முடிகிறது, இதற்கு இடையில் எத்தனை வலிகள் அவமானம் நட்பு துரோகம் முன்னேற்றம் என்று   எளிமையான எழுத்து நடையில் எளிய மக்களின்  இடையே நம்மை வாழ வைத்துள்ளார்.
சாரதி சேது முஜிபர் என்று யாருக்கு சமையல் புரிவதற்கான முன்பணம் கிடைத்தாலும் அனைவரும் சேர்த்து மது கடையிலேயே காலி செய்து விடுகிறார்கள், சமையலில் பணிபுரியும் இடங்களிலும் மது பாட்டிலை திறப்பதில் எந்த குறையுமில்லை ஆனால் அவர்களின் வாழ்க்கையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சாரதியின் மகன் கல்லூரியில் சேர்வதற்கு கடனாக வாங்கும் பணத்தையும் குடித்தே தீர்ப்பது குடியின் உச்சகட்டம்.
குடித்து விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு செல்லும் சாரதியை அவரது மனைவி வளர்மதி கைத்தாங்கலாக தெருவிற்குள் கூட்டி செல்லும்போது தெரு மக்கள்  பரிதாபத்தோடு பார்ப்பதும் அந்தக் குடும்பத்திற்கும்  குழந்தைகளுக்கும் பெருத்த அவமானமாக விளங்கும். இன்றும் எத்தனையோ ஆண்கள் குடித்துவிட்டு ரோடு ஓரங்களிலும் சாலையோரங்களிலும் கிடப்பதைப்கிடப்பதைப் பார்க்க முடிகிறது அவர்கள் உறவினர்களுக்கு எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும்.
சாரதி குடியை விட்டதும் வளர் மதியுடன் ஏற்படும் இணக்கமும் தன் குழந்தை தூங்கும் அழகை பார்த்து கால்களில் முத்தம் கொடுப்பதும் என தன் அழகான வாழ்க்கையை குடியால் வீணாகிவிட்டதை  உணரும் தருணத்தில் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்துவிடுகிறது.


குடும்பத்தைக் கட்டிக் காப்பதில் பெண் என்றுமே தேவதை ஆகிறாள்.எவ்வளவு மோசமான கணவன் இருந்தாலும் தன் உழைப்பால் குடும்பத்தை முன்னேற்ற என்று முனைப்புடன் செயல்படுவாள்.அப்படிப்பட்ட தேவதையாக வளர்மதி தன்னால் இயன்ற அளவிற்கு தன் குடும்பத்திற்கு  உறுதுணை ஆகிறாள்.
சமையல் தொழில் புரிபவர்கள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தீண்டாமை ஒழியவில்லை என்பதை வெளிப்படுகிறது.
கடைக்காரர் இன் நல்ல குணமும்  தோழர் சண்முகம் தொழிலாளர் நலம் குறித்து அக்கறை உடையவர்கள் ஊருக்கு ஒருவர் இருந்தால் போதும். அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எழுத்தாளரின் எழுத்து நடை சாக்கடையில் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் குடிகாரர் அதை வெளியில் எடுக்கும் பொழுது நம் மூக்கையும் பொத்திக் கொள்ள வைக்கிறது. வீரபாண்டி திருவிழா கைப்பற்றிய பகுதியை படிக்கும்பொழுது ஜாக்கிரதையாக பார்த்து போக வைக்கிறது கடைக்காரர் நல்ல இருளில் நடுஇரவில் தெருவில் போகும் பொழுது நாய்கள் துரத்துவதும் குறைப்பதும் நமக்கே பயம் ஏற்படுகிறது.
கல்வியால் வாழ்க்கையில் ஒளி வீசும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சரவணன் சமையல் கலையை பற்றி கல்லூரியில் படித்து ஒழுக்கத்துடன் திகழ்வது சிறப்பு.
மக்களின் வாழ்க்கையை அழிக்கும் மதுக்கடைகள் ஊர்கள் தோறும் செயல்படுகிறது ஆனால் அவர்களுக்கான நலத்திட்டங்கள் பற்றி எந்த ஒரு விழிப்புணர்வும் அரசு முன்னெடுத்து செல்வதில்லை ஆனால் அவர்களின் கட்சி மீட்டிங் என்றால் பணத்திற்கும் பிரியாணிக்கும் குவாட்டரும் இவர்கள்தான் விலை போகிறார்கள்.
வீதி: ம.காமுத்துரை எழுதிய மில் நாவல்ம.காமுத்துரை
பாக்கியத்தின் மகள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து டாக்டர் கனவோடு இருப்பவள் ஆரம்பத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி முடியாமல் தேர்வுக்கு தயாராகி பின் தேர்வில் தோற்று போகிறாள் ஏழை மக்கள் ஏழைகளாக இருக்க வேண்டும் என்று அரசு திட்டம் தீட்டி நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது என்று தோன்றியது.
ஆயிரம் பேருக்கு உணவு தயாரிக்க நெஞ்சுரம் கொண்டவர்கள் குடியை மட்டும் நிராகரித்தால் வாழ்க்கை வளம்பெறும் அடுத்த தலைமுறையாவது  வளமுடன் வாழும்.
ஒரு அற்புதமான நாவலை படைத்த காமுத்துரை அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றி.

பெங்களூரிலிருந்து 

ராதிகா விஜய் பாபு
நூல்: குதுப்பி நாவல்
ஆசிரியர்: ம.காமுத்துரை
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ₹400.00