தமிழில் மறுவரைவு: முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா. | பக்: 160 | ரூ: 80
மனிதர்களின் பரஸ்பரக் கவனமும், அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும், மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும், புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன என்கிற ஆசிரியரின் அனுபவக் குறிப்புகளே இந்நூலாக வடிவம் பெற்றுள்ளன. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் 15 ஆண்டு கால அனுபவங்களின் தொகுப்பு இது. 800 பக்க நாட்குறிப்பிலிருந்து, ஓராண்டு காலத்தின் 5 முக்கிய நாட்களின் பணிப் பதிவுகளை நம் முன் வைக்கிறார் ஆசிரியர். Ôகுழந்தையின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பானவன்Õ என்கிற நினைவு அவரை இயக்கும் உந்துவிசை.